தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக களம் இறங்கி குறுகிய காலத்தில் தனது திறமையான நடிப்பினால் உச்சத்திற்கு சென்றவர் காமெடி நடிகர் சந்தானம். இவரது வருகைக்கு பிறகு பல நகைச்சுவை நடிகர்கள் தமிழ் திரையுலகை விட்டு சென்று விட்டனர். சந்தானம் வீட்டுக்கு அனுப்பிய நகைச்சுவை நடிகர்களின் லிஸ்ட் ரொம்ப பெரியது. இந்தாண்டில் மட்டும் தமிழில் வெளியான படங்களில் முக்கால்வாசி படங்களில் சந்தானம்தான் நகைச்சுவையில் கலக்கி வருகிறார். ஒவ்வொரு படங்களிலும் கதைக்கேற்ப ஒவ்வொரு விதமான கதாபாத்திரங்களில் வந்து நகைச்சுவை செய்தாலும், அவருக்கென்று ரொம்ப பிடித்த நகைச்சுவை காட்சிகள் என்று தனிப்பட்ட விருப்பம் உள்ளதாம்.
ஒரே படத்தில் மூன்று விதமான வேடங்களில் நடித்து காமெடி செய்ய வேண்டும். ஒன்று தியாகராஜ பாகவதர் காலத்து நடிகராகவும், நடுவில் கவுண்டமனி காலத்து நடிகராவும், மற்றொன்று தற்போதைய காலத்து இளைஞராகவும் இருக்க வேண்டும். அது இருந்தால் இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து செய்யும் காமெடி நிச்சயம் சிறப்பாக இருக்கும், என்று கூறியுள்ளார்.
சந்தானத்தின் இந்த அதிக பட்ச ஆசை நிறைவேறுமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதிரடி நடிகர்களுக்கே மூன்று வேடங்கள் எப்போதாவது தான் கிடைக்கும்…அப்படி நடித்தாலும் திரைகதை சரியாக அமையாவிட்டால் அவ்வளவு தான். சந்தனத்தின் விருப்பம் எப்போது நிறைவேற போகிறது என்று பார்ப்போம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே