பிரபுதேவா நடனத்துடன் கமலின் விஸ்வரூபம்


காணொளி:-

கமல்ஹாசன் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகி பலரின் எதிர்பார்ப்புகளையும் ஈர்த்துள்ள விஸ்வரூபம் முதல் முறையாக சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் விழாவில் திரையிடப்படவுள்ளது. இந்த விழாவில் கமல்ஹாசனுடன், நடிகை ராதிகா, பிரபுதேவா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்து, இணைந்து தயாரித்துள்ள படம் விஸ்வரூபம். பலரையும் இப்படம் வெகுவாக ஈர்த்துள்ளது. காரணம் இப்படம் உருவாகியிருக்கும் விதம் குறித்து வெளியாகி வரும் தகவல். 100 சதவீதம் அக்மார்க் கமல் பாணி படம் என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்புகள் ஏகமாகிக் கொண்டிருக்கின்றன. கமல்ஹாசன் இப்படத்தில் மாறுபட்ட நடிப்பு, உடல் மொழியை வெளிப்படுத்தியுள்ளதாக பேசப்படுகிறது. இதனால் ஹாலிவுட் வரையிலும் அவரது இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு பாய்ந்தோடி வருகிறது.

இந்த நிலையில் விஸ்வரூபம் முதல் முறையாக உலகப் பார்வையாளர்களுக்கு காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. ஜூன் மாதம் சிங்கப்பூரில் 3 நாட்கள் நடைபெறவுள்ள 13வது சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் வி்ஸ்வரூபம் திரையிடப்படவுள்ளதாம். கமல்ஹாசனே இதைத் தெரிவித்துள்ளார். ஜூன் 8ம் தேதி இப்படத்தின் இந்திப் பதிப்பு திரையிடப்படவுள்ளது. கமல்ஹாசன் தவிர பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

சிங்கப்பூர் லயன் சிட்டியில் நடைபெறும் இந்த விழாவில் கமல்ஹாசன் பங்கேற்கிறார். அவருடன் நடிகைகள் ராதிகா, ஷ்ரேயா, இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர். பிரபுதேவாவின் சிறப்பு நடனமும் விழாவில் இடம் பெறுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago