சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில் பிரவுதேவா இயக்கி வரும் இந்தி படம் ரவுடி ரத்தோர். இந்த திரைப்படம் சூர்யாவின் சிங்கத்திற்கு இணையாக பேசப்பட்ட கார்த்தி நடித்த சிறுத்தையின் ரீமேக். இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா நடிக்கின்றனர். இதில் ஒரு பாடலுக்கு இளைய தளபதி விஜய்யை அணுகி இருக்கிறார் பிரபுதேவா, விஜய்யும் இந்தியில் முதல் முறையாக ஒரு பாடலுக்கு கலக்கலாக ஆடியுள்ளார்.
இந்த படத்தில் இளைய தளபதி விஜய்யுடன் இணைந்து ஆடிய அக்ஷய் குமார் விஜய்யின் ஆட்டத்தை பார்த்து பிரமித்து, “அவருக்கு என்ன 17 வயதா” என்று பிரபுதேவாவை கேட்டுள்ளார்.
ஆனால் கோலிவுட்டில் பெரிய ஹீரோவான விஜய்யை எப்படி ஒரு பாட்டுக்கு வந்து ஆடுங்க என்று சொல்வது என்று பிரபுதேவா முதலில் தயங்கினாராம். பிறகு சரி கேட்டுத் தான் பார்ப்போம் என்று விஜய்யிடம் கேட்டுள்ளார். பிரபுதேவா சற்றும் எதிர்பாராவிதமாக உடனடியாக சரி என்று சொல்லிய விஜய் அடுத்த 1 மணி நேரத்தில் ஷூட்டிங் ஸ்பாட் வந்துவிட்டாராம்.
விஜய்யை பார்த்தவுடன் படத்தின் ஹீரோ அக்ஷய்க்கு ஒரே ஆச்சரியமாம். உடனே வந்து விஜய்யை ஆரத் தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து பிரபுதேவா கூறுகையில், இந்த பாடல் மூலம் விஜய்யை பாலிவுட்டில் அறிமுகம் செய்ய முயற்சிக்கவில்லை. அவரை யாரும் பாலிவுட்டுக்கு சிபாரிசு செய்யத் தேவையில்லை. பாலிவுட்டே அவரை வரவேற்கும் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே