இயக்குனர் ஷங்கர் விக்ரமை வைத்து எடுக்கும் தேர்தல் படத்தின் நாயகி அசின் தானாம். இயக்குனர் ஷங்கர் படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் பேரார்வம் காட்டுவார்கள். அதற்கு காரணம் ஷங்கர் இயக்கும் படங்கள் அனைத்தும் ஹிட் தான். 3 இடியட்ஸ் படத்தை தமிழில் நண்பன் என்ற பெயரில் ரீமேக் செய்து அதுவும் ஹிட்டாகிவிட்டது. அதில் நடித்த விஜய் கூட தான் நடித்ததால் படம் ஹிட்டாகவில்லை, கதை அப்படி என்றார்.
இந்நிலையில் அடுத்த படத்தை இயக்க சங்கர் தயாராகிவிட்டார். ஹீரோவாக சீயான் விக்ரமை தேர்வு செய்துள்ளார். இவர்கள் ஏற்கனவே இணைந்து பணியாற்றிய அந்நியன் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த கூட்டணி சேரும் படத்திற்கு தேர்தல் என்று பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் நாயகியாக பிரியங்கா சோப்ரா அல்லது அசின் நடிக்கலாம் என்று கூறப்பட்டது. மும்பை பக்கம் சென்ற ஷங்கரை அசின் நேரில் சந்தித்து இந்த வாய்ப்பை தனக்கே தருமாறு கேட்டுக் கொண்டாராம். (இது பிரியங்காவுக்கு தெரியுமா?) ஆனால் இலங்கை சென்று அதிபர் ராஜபக்சேவை சந்தித்த அசினை ஷங்கர் தனது படத்தில் நடிக்க வைக்கக் கூடாது என்று இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை எல்லாம் தாண்டி தற்போது படத்தின் நாயகி அசின் என்பது உறுதியாகிவிட்டதாம்.
இந்த படத்தின் மூலம் முதன் முறையாக சங்கருடன் இணைகிறார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். மேலும் தேர்தல் தெலுங்கிலும் தயாராகவிருக்கிறது. அங்கு கப்பார் சிங் நாயகன் பவன் கல்யாண் நடிக்கிறார். ஆடிய கூத்து ஆடினாலும் அசின் காரியத்தில் கண்ணாகத் தான் இருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே