எப்படி நம்ம யோகம்…குருபெயர்ச்சி பலன் 2012 – சிம்மம்


காணொளி:-

பிற ராசிகளுக்கு
1. குருபெயர்ச்சி பலன் 2012 – மேஷம்
2. குருபெயர்ச்சி பலன் 2012 – ரிஷபம்
3. குருபெயர்ச்சி பலன் 2012 – மிதுனம்
4. குருபெயர்ச்சி பலன் 2012 – கடகம்
5. குருபெயர்ச்சி பலன் 2012 – கன்னி
6. குருபெயர்ச்சி பலன் 2012 – துலாம்
7. குருபெயர்ச்சி பலன் 2012 – விருச்சிகம்
8. குருபெயர்ச்சி பலன் 2012 – தனுசு
9. குருபெயர்ச்சி பலன் 2012 – மகரம்
10. குருபெயர்ச்சி பலன் 2012 – கும்பம்

பேரன்புள்ள சிம்ம ராசி அன்பர்களே! வணக்கம்!! வாழிநலம்!!!

நவக்கிரகங்களில் ராஜ கிரகமான சிங்கம் என்றழைக்கபடும் ஸ்ரீ சூரிய பகவானை ஆட்சி கிரகமாகவும், வீடாகவும் ராசியாதிபதியாகவும் அமையப் பெற்ற உங்கள் ராசிக்கு 5,8 க்குடைய பூர்வபுண்ணியாதிபதியும், பஞ்சம அஷ்டமாதிபதியுமான ஸ்ரீ குரு பகவான் இதுவரையில் சுத்த திருக்கணித பஞ்சாங்க சித்தாந்தப்படி உங்கள் ராசிக்கு பாக்யஸ்தானமும,; ஒன்பதாமிடமுமான மேஷ ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த இவர் ஸ்வஸ்;திஸ்ரீ ஸ்ரீநந்தன நாம ஆண்டு வைகாசி மாதம் 4ஆம்தேதி ஆங்கிலம் மேமாதம் 17ஆம் தேதி 2012 ஆம்ஆண்டு (17-5-2012) வியாழக்கிழமை அன்று மாலை 6-18 மணியளவில் பெயர்ச்சியாகி ராசிமாறி உங்கள் ராசிக்கு கர்மஸ்தானமும், ஜீவனஸ்தானமும் பத்தாமிடமுமான ரிஷப ராசியில் கிருத்திகை நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் பிரவேசித்து 27-5-2013 ஆண்டு வரை ஒராண்டு காலம் அங்கு இவர் சஞ்சாரம் செய்கிறார்.

குணநலன்கள்

உங்கள் ராசிநாதன் சூரியன் என்பதால், பேருக்கும், புகழுக்கும் சொந்தக்காரர்களாக இருப்பீர்கள். எவருக்கும் அடிபணிய மாட்டீர்கள்.பொது இடங்களில் நீங்கள் வரும்பொழுது, கூப்பிட்டு பேசுபவர்களாக இருக்காமல், கும்பிட்டும் பேசுபவர்களாக இருப்பது தான் உங்கள் ராசியின் சிறப்பம்சம். ராஜ தந்திரம் மிக்க நீங்கள் பிறருக்கு யோசனை சொல்வதிலும் கெட்டிக்காரர்கள்.பூஜை புனஸ்காரங்கள் மூலம் புதிய திருப்பங்களை வாழ்வில் வரவழைத்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு அதிகம் உண்டு. பூமிகாரகன் செவ்வாய், யோகாதிபதியாக விளங்குவதால் சொத்துக்களால் ஆதாயம் அடைபவர்களும் நீங்கள்தான். ஆனால் சொந்தங்களால் ஆதாயம் கிடைப்பது அரிது.

எடுத்த எடுப்பிலேயே எதையும் முடிக்க விரும்பும் நீங்கள் வெற்றி ஒன்றையே இலக்காக வைத்திருப்பீர்கள். ஒரு குடும்பத்தையோ இயக்கத்தையோ தொழிற் கூடத்தையோ திறம்பட வழிநடத்தும் தலைமைப் பண்பு உங்களிடம் உண்டு. பேச்சிலே காரத்தைத் தூவினாலும் உங்கள் இதயத்தில் ஈரம் இருந்துகொண்டே இருக்கும்.உங்களுக்கு செயலாற்றும் திறமையும், தன்னம்பிக்கையும் அதிகம் உண்டு. எதையும் நுணுக்கத்துடன் அறிந்து பேசுவீர்கள். முன்னோடியாக இருக்க வேண்டும். இந்த சமுதாயத்துக்கு தான் யார் என்று காட்ட வேண்டும் என்ற சிந்தனை இளமையிலேயே குடி கொண்டு இருக்கும். உங்களுடைய கொள்கைகளும், குணாதிசயங்களும் பயப்படும் படியாகவும் இருக்கும். பிறர் பயன்படும்படியாகவும் இருக்கும்.எங்கும், எதிலும் தலைமைப் பதவிக்கு வந்து விடும் தனித்தன்மை, பின் விளைவுகள் பற்றி சிந்திக்காமல் நியாயமுடன் பேசுவதாலும் செயலில் இறங்குவதாலும் உறவினர்கள், நண்பர்களிடம் தனக்கு என்று தனி மதிப்புடன் வாழ்ந்து வருபவரே!விரோதங்களைப் பற்றிக் கவலைப்படாமல், விரும்பியபடியே செயல்படுபவர்கள் நீங்கள் தான், ஒளிவு மறைவு இன்றி உன்னதமாகப் பேசுவீர்கள். நெளிவு, சுளிவுகளைக் கற்று வைத்துக் கொண்டு நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

பொதுப்பலன்கள்

பத்தாமிட குரு பதவியை கெடுப்பார், கவலையும் கலக்கமும் தருவார்
சோதனை வேதனை துயரங்கள் கேள்விகுறிகள் தலை தூக்கும்
மூன்றாமிட சனியின் சஞ்சாரம் முத்தான-சத்தான பலன்களை தருவார்
வசந்தம் தரும் ராகு-ராஜ சிம்மாசனம் தரும் ராஜயோககேது

இதுவரையில் பாக்கிய ஸ்தானமென்னும் ஒன்பதாமிடத்திலிருந்த ஸ்ரீகுரு பகவான் இப்போது கர்மஸ்தானமென்னும் பத்தாமிடத்திற்கு வந்திருக்கிறார். பத்தாமிடமென்பது ஸ்ரீகுரு பகவானுக்கு உகந்த இடமா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த குருப்பெயர்ச்சியைப்பற்றி நீங்கள் ஏதாவது கேள்விப்பட்டீர்களா? இப்போது ஸ்ரீகுருபகவான் ராசிமாறி சஞ்சரிப்பது நல்லதில்லை என்பது தான் உண்மை. ஸ்ரீகுரு பகவான் பத்தாமிடத்திற்கு வந்திருப்பதால் ஏடாகூடமாக ஏதாவது நடக்குமா? பதவி பறி போகுமா? என்று நீங்கள் யோசிக்கிறீர்கள். இல்லையா? யோசிக்கவே வேண்டாம். மூன்றாமிடச்சனியை மீறிக் கொண்டு குருவால் எந்தவித கெடுபலனையும் செய்து விட முடியாது. எனினும் பத்தாமிட குரு தன் வேலையை சிறிதளவாவது காட்டாமல் இருக்க மாட்டார். அப்படி என்ன தான் செய்வார்?சமுத்திரத்திலேயே குதித்து கரையேறிய நீங்களா குளத்து நீரில் தத்தளித்து மூழ்கிவிடப் போகிறீர்கள்.ஸ்ரீகுருபகவான் சஞ்சரிக்கும் பத்தாமிட குரு நல்லவரா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். குருபதவியைக் கெடுப்பார். சொகுசைக் கெடுப்பார். கடுமையாக போராடிக் கொண்டிருக்கிற நிலையில் இந்த செயல் சிரமங்கள் நீங்குமா என்ற கேள்விக்குத் திருப்திகரமான பதிலை நீங்கள் எதிர்பார்க்க முடியாது.

ஸ்ரீ சனி பகவானின் சஞ்சார நிலவரம்

முக்கிய கிரகங்களின் சஞ்சார நிலவரத்தை அனுசரித்துப் பார்க்கையில் உங்கள் ராசிக்கு 6,7ஆகிய இடங்களுக்கு உரியவரும் ரோகாதிபதியும், களத்திரஸ்தானாதிபதியுமான ஸ்ரீ சனிபகவான் தொடர்ந்து இப்போது தைர்யஸ்தானமெனும் மூன்றாமிடமான துலாம் ராசியில் சஞ்சாரம் செய்கிறார். மூன்றாம் இடமென்பது சனிக்கு மிகமிக உன்னதமான உகந்த இடத்தில் சஞ்சரிக்கும் உயர்ந்த மூன்றாமிடச்சனி முன்னேற்றங்களை தங்கு தடையின்றித் தருவார். மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தித்தருவார். ஒருவித ராஜயோக வாழ்க்கையை தருவார் என்பது ஒரு ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த மூன்றாமிடச் சனியின் சஞ்சாரத்தால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதைப் பற்றி சிறிது சிந்தித்து ஆராய்ந்வோம்.

சனியவன் மூன்றில் ஆறில் தயவு பன்னொன்றில் ஒன்பான்
இனிவரும் காலம் நன்றாம் எடுத்ததோர் முயற்சி வெற்றி
தனிப்பெரும் யோகமாகும் தண்டிகை குதிரையுண்டாம்
கனிதரும் மதுரச் செவ்வாய் கன்னியர் காமனாமே

– இப்படி ஜாதகாலங்காரம் மூன்றாமிடச் சனியைப் பற்றி பிரமாதமாகச் சொல்கிறது ஒரு ஜோதிடப்பாடல்.மேலும் மூன்றாமிடத்துச் சனியால் இனிமேல் அபரிமிதமான அட்டகாசமான அதிர்ஷ்டகரமான அசத்தலான அதிரடி முன்னேற்றங்கள் ஏற்படும். இதைப்பற்றி சந்தோஷம் தரும் ஜோதிடப்பாடல் ஒன்று விவரிப் பதை கீழே காணலாம்.

கேளப்பா சனியனுமே மூன்று ஐந்தாறு
கெணிதமுடன் பதினொன்றில் நின்றியங்க
தாளப்பா அதன் பலனைச் சொல்லக் கேளு
தரித்திடுமே போகமொடு ஆயுள்விருத்தி
வேளப்பா விவாகமது மனையில் ஆகும்
வென்றிடுவான் சத்ருவை வெகுவாய்த்தானும்
நாளப்பா ஆடை ஆபரணமும் உண்டாம்
நலம் மிகுக்கும் மனைவி புத்ரர் சுகமுண்டாமே

என்று கோட்சார சிந்தாமணியும் சந்தோஷம் தரும் பலன்களையே கூறுகிறது.

தரித்திடுமே போகுமொடு ஆயுள் விருத்தி
விவாகமது மனையிலாகும். வென்றிடுவன் சத்ருவை
ஆடை ஆபரணம் உண்டாம் நலம் மிகுக்கும்
மனைவி புத்திரர் சுகம் உண்டாமே

மற்றபடி இனிமேல் ஸ்ரீ சனிபகவானின் சஞ்சாரமான மூன்றாமிடத்தில் முன்னேற்றமான பலன்களே விசேஷம்-ஏராளம் என்ற வகையில் சஞ்சரிக்கிறார்.ஆக எப்படி பார்த்தாலும் இம்முறை சனி இவர்களுக்கு மிக நல்ல சுப பலன்களையே தருவார்.

ஸ்ரீராகு-கேது பகவான்களின் சஞ்சார நிலவரம்

மேலும் முக்கிய கிரகங்களில் ஒன்றான பாம்பு கிரகங்களான நிழல் கிரகங்கள் ராகு-கேது சஞ்சாரம் தொடர்ந்து சஞ்சரிப்பது ஒரளவு நல்ல ஏற்றமான மாற்றத்தையும் ஏற்படுத்திடும். அதுவும் பத்தில் ஒரு பாபியோனும் இருந்திட வேண்டும் என்பது பழமொழி இப்பாபியாகிய கேது 10ல் இருப்பினும் 4ம் இட ராகு அந்த இடத்தை பார்ப்பதும் நல்லதே. மேலும் இந்த 10ம் இட கேது உங்களுக்கு பலவகையில் பயன் உடையதாக செய்வார். காரணம் பொதுவாக கேதுவுக்கு10ம் இடம் உகந்ததே.அந்த அடிப்படையில் 10ல் யோக கிரகத்தின் வீட்டில் இருந்து உங்களை இயக்குவதால் கேதுவால் அனுகூலமே.

வாக்கிய பஞ்சாங்க சித்தாந்தப்படி நிழல் கிரகங்களான ஸ்ரீ ராகு பகவானும் ஸ்ரீ கேது பகவானும் கார்த்திகை மாதம் 17ஆம்தேதி ஆங்கிலம் டிசம்பர் மாதம் 2ஆம்தேதி 2012 ஆம் ஆண்டு (2-12-2012) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10-53 மணியளவில் ஸ்ரீ ராகுபகவான் பெயர்ச்சியாகி ராசி மாறி துலாம் ராசிக்கும், ஸ்ரீ கேது பகவான் பெயர்ச்சியாகி ராசிமாறி மேஷ ராசிக்கும் 11-31 நாழிகைக்குள் பிரவேசித்து ஒன்றை ஆண்டு காலம் சஞ்சாரம் செய்கிறார்கள். ஆனால் சுத்த திருக்கணித பஞ்சாங்க சித்தாந்தப்படி நிழல் கிரகங்களான பாம்பு கிரகங்கள் ஸ்ரீ ராகு பகவானும் ஸ்ரீ கேது பகவானும் மார்கழி மாதம் 8ஆம் தேதி ஆங்கிலம் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி 2012 ஆம் ஆண்டு (23-12-2012) ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீராகுபகவானும்,அதேநேரம் ஸ்ரீகேது பகவானும் பெயர்ச்சியாகி ராசி மாறி முறையே துலாம் ராசிக்கும், மேஷ ராசிக்கும் பிரவேசித்து ஒன்னரை ஆண்டு காலம் சஞ்சாரம் செய்கிறார்கள்.

மொத்தத்தில் இருபஞ்சாங்கங்களின் சித்தாந்தப்படி யோகக்காரகனான ஸ்ரீராகு பகவானும் -ஞானக்காரகனான ஸ்ரீகேது பகவானும் பெயர்ச்சியால் உங்கள் ராசிக்கு ராகு மூன்றாமிடமும், தைர்யவீர பராக்கிரமஸ்தானமுமான விருச்சிக ராசியிலும், கேது ஒன்பதாமிடமும், பாக்கியஸ்தானமுமான மேஷ ராசியில் சஞ்சரிக்கின்றனர். இது நன்மைகள் அணி வகுத்து வரக்கூடிய அமைப்பான காலகட்டம். இந்த சமய சந்தர்ப்பத்தையும், சூழ்நிலைகளையும், முன்னேற்றத்துக்கான அங்கீகாரமாக அமைத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும்.எனவே நீங்கள் அதிர்ஷ்டங்களை நம்புவதை விட ஆண்டவனை நம்புங்கள் போராட்டங்களுக்கு மத்தியில் உங்களைக் காத்துக் கொள்ளும் யுக்தி, புத்தி, சிந்தனைகளுடன் கூடிய வித்தைகளை புரிந்து கொண்டு சுகமாக வாழ்ந்துக் கொண்டிருப்பீர்கள். இனி நல்ல காலம் பிறந்து விட்டது என்று சொல்வதை விட கஷ்டகாலம் சோதனைக் காலம் நீங்கிவிட்டது என்றே கூறலாம்.ஆக மொத்தத்தில் இந்தப் ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு அதிர்ஷ்டமாகத்தான் இருக்கும். அளவிட முடியாத நன்மைகளை பெற்றுத் தருவதாகவே இருக்கும். இனி நடப்பதெல்லாம் நல்லவையாகவே மலரட்டும். ஒரு வித ராஜ யோகங்களைப் பெற்று அற்புதமான ஆனந்தமாக வாழ்வீர்;கள். சந்தோஷத்துடன் உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும் இனிதே வரவேற்பீர்கள்.

ஸ்ரீ குருபகவானின் சஞ்சார நிலவரம்

உங்கள் ராசிக்கு ஜீவனஸ்தானமான பத்தாமிடத்தில்ஸ்ரீகுருபகவானின் பிரவேசம் உகந்ததல்ல சஞ்சரிப்பதும் நல்லதல்ல. பாக்கியஸ்தானத்திலிருந்த போது ஸ்ரீகுருபகவான் செய்து வந்த நன்மைகளை, அளவற்ற அனுகூலங்களை ஆதாயங்களையும் இப்போது செய்யமாட்டார். செய்ய முடியாது என்பது தான் காலங்காலமாக ஜோதிடமும் சாஸ்திரவல்லுநர்களும் இதனை சொல்லியிருக்கிறார்கள். எனவே பத்தாமிட குரு-நற்பலன்கள் ஏதும் செய்ய முடியாத நிலையில் உங்களை அல்லலுடன் அவதிபட வைப்பார். செய்தொழிலில் பாதகம் எதுவும் பெரிய அளவில் ஏற்படாது. உத்தியோகத்தில் இக்கட்டு, இடைஞ்சல், இடர்பாடுகள் ஏற்படலாம். பதவிஉயர்வு, இடமாற்றம், வேலை மாற்றம், மேலதிகாரிகளின் கெடுபிடி, கீழே இருப்பவர்கள் செய்யும் குசும்பு, நக்கல் கடினமாக வேலை செய்தாலும் பாராட்டு இல்லாமை, செய்யாத தப்புக்கு தண்டனை எதிர்நோக்க வேண்டியுள்ளது. வருமானம் குறைவு, குருவின் அருட்பார்வையால் தனஸ்தானம், சுகஸ்தானம், ரோகஸ்தானம் ஆகிய இடங்களில் படிவதால் உங்கள் சகஜ வாழ்க்கை பாதித்தல் குடும்ப மகிழ்ச்சி குறைதல் பெரிய அளவில் உடல்நலக்குறைவு என்பதும் அவ்வளவாக இருக்காது.

ஜோதிட சாஸ்திரங்களும் – ஜோதிடச் சுவடிகளும்

ஜோதிட சாஸ்திரங்களில் மட்டுமல்ல. நமது முன்னோர்களுக்கும் பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் ஸ்ரீகுருபகவானைப் பற்றி நல்ல அபிப்பிராயம் கிடையாது. அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதைப் பற்றியும் சிறிது அலசி ஆராய்ச்சி செய்வோம்.

கர்மண்யப்யர்த் ஸ்தான புத்ராதி பீடா
– என்பது பல தீபிகையின் சுலோகம். காரியங்களுக்கும், பதவிகளுக்கும், குடும்பத்துக்கும் புத்திர புத்திரிகளுக்கும் பீடை. உண்டு என்று கூறுகிறது.

ஈசனார் குரு பத்திலே தலை ஓட்டிலே இரந்துண்டதும்
– என்று ஒரு பழம்பெரும் பாடல் தகவல் சொல்கிறது. தன்னுடைய ஜென்ம ராசிக்குபத்தாமிடத்தில் ஸ்ரீகுருபகவான் சஞ்சரித்தபோதுபரமசிவன் மண்டை ஒட்டுடன் அரகரா என்று சொல்லி யாசகம் எடுத்துப் பிச்சாண்டி என்று பெயர் பெற்றாராம்.

போமப்பாஇன்னுமொருபுதுமைகேளுபொன்னவனும்பால்மதிப்புக்குப்பத்தில் ஏற
ஆமப்பா ஆதிசிவன் தெருவு தோறும் அரகரா அய்யமெடுத்துண்டாரய்யா.

– என்று புலிப்பாணி முனிவரும் கிலிப்படுத்தும் வகையில் பயமுறுத்தி பாடியிருக்கிறார்.

பரமசிவனே பிச்சையெடுத்தார் என்றால் நம்கதி என்னாவது என்று கலங்கிப் போய்விடாதீர்கள். ஒருவன் பிச்சைக்காரன் ஆவதும், பெரும் பணக்காரன் ஆவதும் அவரவருடைய ஜெனன ஜாதகயோகத்தை பொறுத்த விஷயம். இதற்கு முன்பு பத்தாமிடத்து ராசிக்காரர்கள் திருவோட்டை கையில் ஏந்திக் கொண்டு அரகரா என்று யாசகம் எடுத்தார்களா என்ன? மேலும் பத்தாமிடத்து குருவைப் பற்றி பெரியவர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதையும் பார்ப்போம்.

ஓங்கவே குருவேதான் ஒன்று மூன்று உகந்த நாலாறெட்டுப் பத்தீறாறில்
தீங்காக நின்றிடிலோ பலனைக்கேளு தேடிய பொருள் பூமி சேதமாகும்
வாங்கவே அகத்தினிலே அலைச்சலோடு வாதபித்த ரோகமது வந்துவாட்டும்
தாங்கவே தந்தையொடு புத்திரர்க்கும் தேடிவரும் தீமையது உண்டாமே

– என்று கோட்சார சிந்தாமணியும் குறைகோளாறு களாகத்தான் சொல்கிறது.

பத்துடன் மூன்று நான்கு பன்னிரெண்டெட்டோடுற்ற
மத்திமம் ஆறிலொன்றில் மன்னவன் இருந்த காலை
நித்தமும் அலைச்சல் ராஜ நிஷ்டூரம் வாதபித்தம்
பெத்தவன் பிறந்த பிள்ளை பெண்சாதி பகையுமாமே

– என்றுதான் ஜோதிட சேகரமும் பலன் சொல்கிறது.

அந்தணன் பத்தினிலே தனித்து நின்றால் அவதிகள் மெத்தமுண்டு
– என்பது ஜோதிட சாஸ்திரத்தில் பொது மரபு.

என்பதற்கேற்ப சந்தேகம், சஞ்சலம், அவநம்பிக்கை, ஊக்கக்குறைவு, ஊசலாட்டம், கவனத்தடுமாற்றம், காரியத்தில் அல்லாட்டம், பொறுப்புகளில் திண்டாட்டம் என்று பல விதங்களில் பாடுபடுத்திடுவார் ஸ்ரீகுருபகவான்.பத்தாமிடம் என்பது ஜீவன காரியஸ்தானம். அதாவதுஜீவனத்து ஆதாரமான உத்தியோகம். செய்தொழில், வியாபாரம் போன்றவற்றை எதுவானாலும் குறிப்பிடுகின்ற இடம்.அங்கே ஸ்ரீகுருபகவான் சஞ்சரிக்கின்ற போது அதன் ஸ்தான பலன்களில் குறைகோளாறுகளை ஏற்படுத்துவார் என்பதுதான் கோட்சார விதி.

பத்திலே பார்ப்பான் – பதவியைக் கெடுப்பான்-என்கிற வழக்கு மொழியே ஒன்றுண்டு. இருக்கின்ற வேலை போய்விடுமோ, பதவி பறிபோய்விடுமோ என்கிற பயத்தையும், மனோவியாக்கூலத்தையும் பத்தாமிடத்து குரு கொடுப்பது வழக்கம்.

சொல்லவே பொன்னவனும் ஜென்மம் மூன்று சுகமான நாலாறு எட்டுப் பத்து
வல்லவே பன்னிரெண்டில் இருந்து வாழ அலைச்சலொடு சத்துரு நிஷ்டூரவாதம்
புல்லவேசகோதரர் தாய் மனையாள் புத்திரரின் நலன்கெடும் பொருளும் போகும்
அல்லவே மன்னவரால் பதியும் சேதம் அரிவையர் தங்களால் வியாதியாமே

-என்று ஜாதக சித்தி கூறுவது மனத்துக்கு பீதியையும், கிலியையும் உண்டாக்குவதாகத் தான் இருக்கிறது. உங்களது பொறுப்புகளிலும், முயற்சிக்கும் காரியங்களிலும் விவேகமும், முன்னெச்சரிக்கையும் அவசியம் தேவை. எனவே உங்களை எச்சரிப்பதற்காகப் பல பாடல்களை குறிப்பிட்டிருக்கிறேன்.

முயற்சிக்கும் காரியங்களில் பல முக்கியமானவைகளை உருப்படியாக முடித்து விடுவீர்கள். ஆனால் அல்லலும், விபரீதமான போக்கையும் சந்தித்தே ஆகவேண்டும். உடல் நலம் என்று பார்த்தால் சுமார்தான். உணவு மற்ற எல்லா வகையிலும் கட்டுப்பாடாக இருத்தல் நல்லது. அசதியும் சோர்வும் ஆர்வக்குறைச்சலும்தான் இருந்து வரும்.

பொருளாதாரத் துறையில் ஸ்திரமான போக்கு இருந்திடாது. தனகாரகனான பத்தாமிடத்து குருவினால் பணப்பிரச்னைகள் உண்டு. தேவைக்கேற்ப பணம் புரளுமளவு இல்லை. வந்ததை வைத்து சமாளிப்பதிலும் சிக்கலும், சிரமமும்தான். சேமிப்பும், கையிருப்பும் கரையும். நகை நட்டுக்களை அடமானம் வைப்பதோ அல்லது விற்கவோ கூட நேரிடும். கேட்ட இடத்திலிருந்து கடனோ கைமாற்றமோ சுலபத்தில் கிட்டாது. கொடுக்கல், வாங்கலில் நேர்மையும் நாணயமும் தவறக்கூடும். வீண், வம்பு, வழக்கு, வியாஜ்ஜியம், இக்கட்டு, இடைஞ்சல், கோர்ட் விவகாரங்கள் என்பதோடு ஜாமீன் கொடுப்பது, சாட்சி கையெழுத்து போடுவதில் ஒதுங்கி கொள்வது நல்லது.

ஜீவன சம்பந்தப்பட்ட செய்தொழில், வியாபாரம், வணிகம், உத்தியோகம் வகையில் எதுவானாலும் பணப்பிரச்னைகளில் கவலையும்,கலக்கமும்,சஞ்சலமும்,சங்கடமும் ஏற் ;படவும்கூடும். சிலசமயங்களில் பணரொட்டேஷனுக்கே திண்டாட வேண்டி வரும். புதிய ஒப்பந்தம் கொள்முதல் விவகாரங்களில் பொறுப்பும், கவனமும், எச்சரிக்கையும் தேவை.

குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சுபீட்சமான சுக சௌகர்யங்கள் கொஞ்சம் மந்தமாகலாம். தேவைக்கேற்ப பணம் புழங்காது. கடன் பாதிப்பு தரலாம். சுபகாரியத் தடைகள் ஏற்படும்.பூர்வீக சொத்துக்களில் வீண் விரயங்களும், வில்லங்கங்களும், ஏற்படும். கணவன், மனைவி உறவில் கருத்து வேற்றுமையும் அபிப்பிராய பேதங்களும் தொடரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:- சிலருக்கு பதவியில் இருந்த தனித்தன்மை போய ;விடுமோ என்றபயம் இருந்திடும்.அந்த அளவுக்கு விபரீதமான போக்கு எதுவும் உண்டாகாது.

மாணவர்களுக்கு:- யுக்தி, புத்தி, சிந்தனை, யோசனை, எல்லாம் டல்லடிக்கும். இதனால் உயர் கல்விக்கு பாதிப்போ, வேதனையோ சோதனையோ உண்டாகும்.

வியாபாரிகளுக்கு:- அபிவிருத்தியும், ஆதாயமும் இருந்தாலும் குழப்பமும், குளறுபடியும் இருந்திடும்.பேச்சுவார்த்தைகளில் நிதானமும், பொறுமையும் தேவை.

தொழிலாளர்களுக்கு:- அதிகாரி அல்லது முதலாளியிடம் தகராறு, அதிருப்தி, மனக்கசப்பு இருப்பது சகஜம். சோதனை தான் கவனமாக இருக்கவும்.

கலைஞர்களுக்கு:- களங்கம் ஏற்படாத வகையில் பொறுமையாவும், நிதானமாகவும் பழகுவது நல்லது. புதிய முயற்சியை தள்ளிப் போடவும்.

அரசியல்வாதிகளுக்கு:- எதுவும் சாதகமாக இருக்காது. ஆனால் பாதிப்பும் இருந்திடாது.

பெண்களுக்கு:- அடுத்தவர்களை குறைசொல்லும்பழக்கத்தைவிட்டுவிடுவது நல்லது. உங்களாலேயும் குறையோ, குளறுபடியோ இல்லாமல் திட்டம் போட்டு நடத்திட முடியாது.

ஸ்ரீகுருபகவானின் அருட்பார்வைகளினால் ஏற்படும் நன்மைகள்

ஸ்ரீ குரு பகவான் மூன்று பார்வைகளில் ஒரு பார்வையான ஐந்தாம் பார்வை உங்கள் ராசிக்கு தனகுடும்பவாக்கு ஸ்தானமுமான இரண்டாமிடமான கன்னியில் பதிவது நல்லது. இதனால் குடும்பத்தில் அடிப்படைத் தேவைக்கான பணம் எப்படியாவது புரண்டு கிட்டிருக்கும். பேச்சு வார்த்தைகளும் நிலைமையை சமாளித்துக் கொள்வதற்கும் வழி வகுப்பதோடு ஒத்துழைக்கவும் செய்திடும். சமயோசிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி தப்பித்துக் கொள்வதிலும ;நிலைமையைப் பேசி புரிய வைப்பதினால் நன்மைக் கிட்டிடும்.

அடுத்ததாக ஸ்ரீ குருபகவானின் இன்னொரு பார்வை நேர்மையான ஏழாம் பார்வை உங்கள் ராசிக்கு சுகஸ்தானமும் நான்காமிடமுமான விருச்சிகத்தில் பதிகிறது. இதனால் மறைமுகமான விரயங்களும். பொருளாதார மந்தம், பிற்போக்குத்தனம், ஏற்பட்டாலும் அவைகள் சமாளிக்கப்பட்டு செல்வாக்கும் தொழிலில் சரிவு ஏற்படாமல் வழக்கம் போல இருந்து வரும்;. உடன் பிறந்தவர்களால் பொருள் சேதமும், மறைமுக ரகசிய வியாபாரம் மூலம் அதிக வருமானங்களும் கிட்டிடவும் கூடும். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கு தீவிர முயற்சி எடுப்பது அவசியமாகும்.

ஸ்ரீ குருபகவானின் மற்றொரு பார்வையான ஒன்பதாம் பார்வை, உங்கள் ராசிக்கு பகை, ருண, ரோகஸ்தானமும் ஆறாமிடமுமான மகரத்தில்;; பதிவதால் நோய் நொடிகள் குணமாகி ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்னைகளை சமாளிக்கவும், வீண் விவகாரங்களிலிருந்து விடுபட்டு மீண்டு வரவும் ஒத்துழைப்பு கொடுக்கும். ஜீவன காரிய சம்பந்தமான செய்தொழில், உத்தியோகம் எதுவானாலும் எப்போதும் மனதில் ஒரு வித பயம் இருந்து கொண்டேஇருக்கும். சில சமயம் முயற்சிகளில் அதிக லாபமும், கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் பக்கபலமாக நன்றாக இருக்கும்;. எதிர்பாராத வகையில் கணிசமாக திடீர் லாபங்கள் கிட்டிடும். வெளியூர் பயணம் பிரகாசமாக காணப்படுகிறது.

நட்சத்திரப் பலன்கள்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

ஞானக்காரகன் என்று போற்றப்படும் ஜெகத்தை ஆளும் உள்ளம் பெற்ற கேதுவின் ஆதிக்க பலம் பெற்ற மகம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் ஒரளவு அனுகூலமாகவே, இருக்கும். தீவிர முயற்சி செய்தால் எந்தப் பனியும் முடிந்து விடும். தொழில், வியாபாரம் சீராக நடக்கும். வருமானம் குறையாது. உத்தியோகஸ்தர்களுக்கு நினைத்தது நடக்கும். நீங்கள் எதிர் பார்க்கின்ற உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷ சம்பவங்கள் நடக்கும். நீண்ட நாளைய பிரார்த்தனைகள் நிறைவேறும். தனவரவு அதிகரிக்கும். திருமணப் பேச்சு வார்த்தைகள் துவங்கும். இனிய பயணமொன்றும் இருக்கும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

அள்ளிக் கொடுக்கும் சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற பூரம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் ஒரளவு சாதகமாகவே இருக்கும். இழந்தவைகளைத் திரும்பப் பெற்று விடுவீர்கள். புதிய முயற்சிகளில் துணிந்து ஈடுபடுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் தடைகள் நெருக்கடிகள் நீங்கி விடும். வருமானம் சீரடையும். பாக்கிகள் வசூலாகும். எந்த மாறுதலையும் செய்துவிடக்கூடாது. வருமானத்தை அதிகப் படுத்த குறுக்குவழிகள் வேண்டாம்.உத்தியோக ஸ்தர்களுக்கு விரும்பிய மாறுதல்கள் கிடைக்கும்

உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு

சூரியன் ஆதிக்கம் பெற்ற உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்த உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி காலத்தில் சிறிது மந்தமாகத் ;தான் இருக்கும். எதை ஆரம்பித்தாலும் இழுப்பறியாகவே இருக்கும். நாணயத்தைக் காப்பாற்ற முடியாமல் திணறுவீர்கள். தொழில், வியாபாரம் டல்லாகத்தான் நடக்கும். வருமானங்கள் குறையும். வழக்குகள் இழுபறியாகத்தான் இருக்கும். உத்தியோகஸ்தர் களுக்கு எதிர்ப்புகள் டென்ஷன் அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் தொந்திரவு கொடுப்பார்கள்.குடும்பஅமைதி குறைந்த மாதிரி இருக்கும். உறவினர்கள் உங்களை ஒரு மாதிரியாகப் பேசுவார்கள்.என்றாலும் நீங்கள் நிம்மதியாகப் பெருமூச்சு விடுகிற மாதிரி நல்ல சூழ்நிலைகள் தெரியும்.

மாதவாரியாகப்பலன்கள்

மே-17-5-2012 முதல் 31-5-2012 வரை – இக்கால கட்டத்தில் தைரியமாகவும்- நன்கு திட்டமிட்டும் பொறுமையாக செயல்படுவது மிகவும் அவசியம். மறைமுக எதிர்ப்புகள் சமாளிக்க வேண்டி வரும். முயற்சி – கடும் உழைப்பும் தேவைப் படும். செய்தொழில், வியாபாரம், வணிகம், உத்தியோகம், ஜீவன சம்பந்தப்பட்ட வகையில் எதுவானாலும் பொருளாதார நிலைமையில் அவசர முடிவுகள் எதுவும் வேண்டாம்.

ஜூன்-1-6-2012 முதல் 30-6-2012 வரை – இந்தக்காலக் கட்டம் சிறிது குழப்பமாக இருந்தாலும் சாதுர்யமாக சமாளித்து விடலாம். எதிர்பார்க்கும் உதவிகள் தாமதமாக கிடைக்கும். புதிய முயற்சிகளில் சுணக்கமோ தடைதாமதம் போன்று முட்டுக் கட்டையாகவும் கொடுக்கல், வாங்கலில் அல்லலும் அலைக்கழிப்பும் இருந்திடும். செய்தொழில், வியாபாரத்தில், போட்டி, பொறாமை, எதிர்ப்புகள் அதிகரிக்கும்.

ஜூலை – 1-7-2012 முதல் 31-7-2012 வரை – இந்தக்காலக்கட்டம் நல்லதை சிந்தித்து நல்லதைச் செய்வீர்கள். எதிர்காலம் பற்றி அதிகமாகச் சிந்திப்பீர்கள். சந்தோஷம் குறைந் திருக்கும். செய்தொழில், வியாபாரத்தில் நிதான முன்னேற்றம் உண்டு. உத்தியோக ஸ்தர்களுக்கு மனப்புழக்கம் அதிகரிக்கும். செலவுகள் அதிகமிருக்கும். சிறிது குழப்பமாக இருந்தாலும் சாதுர்யமாக சமாளித்துவிடலாம்.

ஆகஸ்ட்-1-8-2012 முதல் 31-8-2012 வரை- இந்தக்காலக் கட்டத்தில் பிரச்னைகள் நிறைந்ததாக இருக்கும். தெரிந்தே சில தவறுகளை செய்வீர்கள். செய்தொழில், வியாபாரத்தில் சுறுசுறுப்பு, விறுவிறுப்பு குறைந்த மாதிரி இருக்கும். வருமானம் குறையும். பணரொட்டே ஷனுக்கே திணற வேண்டிவரும். ஜீவன சம்பந்தப்பட்ட வகையில் இடமாற்றம், சொத்து வகையில் வில்லங்கம், விகல்பமும் உண்டாகும்

செப்டம்பர்-1-9-2012 முதல் 30-9-2012 வரை- இக்காலம் உடல்நலமும், மன நலமும் சரிவர இருக்காது. தொழில் துறையில் கடின உழைப்புதான், பெண்களால் உபத்திரவம் உண்டு. குடும்பத்தில் எதிர்பாராத ஏமாற்றமும், கொடுக்கல், வாங்கலில் நேர்மையும், நாணயக் குறைவும் உண்டாகும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட வகையில் சஞ்சலம். வீண் விரயம், கணவன்,மனைவி உறவில் அன்யோன்யம் சீர்குலையும்.

அக்டோபர் -1-10-2012 முதல் 31-10-2012 வரை- இந்தக்காலக்கட்டம் சிறிது மந்தமாகத்தான் இருக்கும். முயற்சிக்கும் காரியங்களில் தட்டுத் தடங்கல் முட்டுக்கட்டை முடக்கமாக இருந்திடும். திட்டமிட்ட பணிகள் எதுவும் முடியாது. இழுபறியாகவே இருக்கும். செய்தொழில், வியாபாரத்தில் சுதந்திரமாக இயங்க முடியாத குறுக்கீடுகளும். பாட்னர்களின் ஒத்துழைப்பு இராது.

நவம்பர் 1-11-2012 முதல் 30-11-2012 வரை – இந்தக்காலக்கட்டம் சமபலன்கள் எனலாம். செலவினங்கள் தொடர்ந்து வரும்.கடன் தொல்லை-வீண் சண்டைச் சச்சரவு, களவு போகுதல், விண்பழி பாவங்கள், பகை ஏற்படக்கூடும். முயற்சிகளில் தடை யேற்பட்டு வெற்றியாகும். கடன், கொடுக்கல், வாங்கலில் கஷ்டங்கள் கணவன், மனைவி உறவில் அபிப்பிராய பேதங்களும், கருத்து வேறுபாடுகளும் உண்டாகும்.

டிசம்பர் -1-12-2012 முதல் 31-12-2012 வரை – இந்தக்காலக்கட்டம் தவறுகள் எங்கே நடக்கிறது என்று கண்டுபிடித்து விடுவீர்கள்.வருமானத்தை அதிகரிக்க புதுவழிகள் புலப் ;படும்.செய்தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் முட்டுக்கட்டைகள் நீங்கிவிடும்.

ஜனவரி -1-1-2013 முதல் 31-1-2013 வரை – இக்காலகட்டங்களில் எல்லாமே கேள்விக்குறியாகத்தான் இருக்கும். உங்களுக்கு தெரியாத விஷயங்களில் தலையிடக் ;கூடாது. பணப்பிரச்னை மனநிம்மதியைக் கெடுத்திடும். அரசாங்க வகையில் தொல்லை களும் துயரங்களும் கூட ஏற்படலாம். வெளியூர் பயணத்தின்போது உபத்திரவம், போலீஸ் சம்பந்தமான கிரிமினல் வழக்குகளும், கெடுபிடி களையும், சமாளிக்க வேண்டியிருக்கும்.

பிப்ரவரி -1-2-2013முதல் 28-2-2013 வரை – இந்தக்காலகட்டம் ஏற்ற இறக்கமாக தான் இருக்கும். எதையும் அதன் போக்கிலே விட்டுப்பிடிப்பது தான் நல்லது. செய்தொழில், வியாபாரத்தில் டென்ஷன் அதிகமாகத்தான் இருக்கும். கஷ்டங்களுடன் நஷ்டங்களும் வரலாம். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக ஆதரவு இருக்கும்.குடும்பத்தில் வழக்கமான அமைதி நீடிக்கும்.சுபகாரிய முயற்சி மட்டும் கூடாது.

மார்ச்-1-3-2013 முதல் 31-3-2013வரை – இக்காலகட்டத்தில் சாதகமா, பாதகமா என்றால் இரண்டுமில்லை. செய்தொழில், வியாபாரத்தில் இதுவரை இல்லாத புதிய நெருக்கடிகள் ஏற்பட்டுவிடும். தவறான முடிவுகளில் முதலீடுகளைச் செய்து அவஸ்தைப் படுவீர்கள்.உத்தியோகஸ்தர்களுக்கு செய்யாத தவறுக்காக தண்டனை ஏற்க வேண்டி வரும்.வேலைபளு அதிகரிக்கும்.வரவேண்டிய உயர்வுகள்,பாதியில் நிற்கும்.

ஏப்ரல் 1-4-2013 முதல் 30-4-2013 வரை – இந்தக்காலக்கட்டம் சாதகமாக இருக்காது. ஏற்றம், மாற்றம் எதுவுமில்லை. எதிர் பார்ப்புகள் நடக்காது. போட்டி, பொறாமை, எதிர்ப்புகள், வருமானக் குறைவு, வாய்ப்புகள் நழுவிப் போகுதல், கௌரவப் பங்கம், அமைதி குறைவு இருக்கும். செய்தொழில், வியாபாரம், வகையில் எதிலும் அதிக அளவு ரிஸ்க் எடுக்காமல் கிடைத்தவரை ஆதாயம் என்றிருக்க வேண்டும்.

மே 1-5-2013 முதல் மே 27-5-2013 வரை- இந்தக்காலகட்டம் உங்களை விழிப்படையச் செய்வதாகவே இருக்கும். விட்டதைப் பிடிப்பதாகவே இருக்கும். எதை செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.புதுப்புது ஐடியாக்கள் தோன்றும். செய்தொழில், வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கும். எந்த டென்ஷனும் இருக்காது.

ஆக இந்த குருப்பெயர்ச்சி உங்களைப் பொறுத்தவரையில் ஒரளவு யோகத்தையே தரும். சனியும், ராகு-கேதுவும் போட்டி போட்டுக் கொண்டு உங்களுக்கு அளவு கடந்த நற்பலன்களைச் செய்வார்கள்.

குரு வாழ்க! குருவே துணை!![rps]

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago