Categories: சோதிடம்

எப்படி நம்ம யோகம்…குருபெயர்ச்சி பலன் 2012 – மிதுனம்


காணொளி:-

பிற ராசிகளுக்கு
1. குருபெயர்ச்சி பலன் 2012 – மேஷம்
2. குருபெயர்ச்சி பலன் 2012 – ரிஷபம்
3. குருபெயர்ச்சி பலன் 2012 – கடகம்
4. குருபெயர்ச்சி பலன் 2012 – சிம்மம்
5. குருபெயர்ச்சி பலன் 2012 – கன்னி
6. குருபெயர்ச்சி பலன் 2012 – துலாம்
7. குருபெயர்ச்சி பலன் 2012 – விருச்சிகம்
8. குருபெயர்ச்சி பலன் 2012 – தனுசு
9. குருபெயர்ச்சி பலன் 2012 – மகரம்
10. குருபெயர்ச்சி பலன் 2012 – கும்பம்


பேரன்புள்ள மிதுன ராசி அன்பர்களே! வணக்கம்!! வாழி நலம்!!!

நவக்கிரகங்களில் வித்யாகாரகன், கல்விக்கு அதிபதி என்று போற்றப்படும் ஸ்ரீபுத பகவானை ஆட்சிகிரகமாகவும், வீடாகவும் ராசியாதிபதியாகவும் அமையப்பெற்ற யோக சாலிகளான உங்கள் ராசிக்கு 7,10க்குடையலாப களத்திரஸ்தானதிபதியும், ஜீவன கர்மஸ்தானதிபதியுமுhன ஸ்ரீ குருபகவான்; இதுவரையில் சுத்த திருக்கணித பஞ்சாங்க சித்தாந்தப்படி உங்கள் ராசிக்கு லாபஸ்தானமும் பதினொராமிடமுமான மேஷ ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த இவர் ஸ்வஸ்;திஸ்ரீ ஸ்ரீநந்தன நாம ஆண்டு வைகாசி மாதம் ; 4ஆம்தேதி ஆங்கிலம் மேமாதம் 17ஆம் தேதி 2012 ஆம்ஆண்டு (17-5-2012) வியாழக்கிழமை அன்று மாலை 6-18 மணியளவில் பெயர்ச்சியாகி ராசிமாறி உங்கள் ராசிக்கு விரயஸ்தானமும,; பன்னிரெண்டாமிடமுமான ரிஷபராசியில் கிருத்திகை நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் பிரவேசித்து 27-5-2013 ஆண்டு வரை ஒராண்டு காலம் அங்கு இவர் சஞ்சாரம் செய்கிறார்.

குணநலன்கள்

உங்கள் ராசிநாதன் புதன் என்பதால், அனுபவ ஞானம் அதிகம் பெற்றவர்களாக விளங்குவீர்கள். எவரிடமும் எளிதாக பழகிவிடுவீர்கள். மனதில் திடீர் திடீரென நட்பு பகையாகும். பகை நட்பாகும். பலதரப்பட்ட நண்பர்கள் உங்களை நாடி வருவார்கள். தும்பைப்பூ சிரிப்பும் பலரை வழி நடத்தும் அளவுக்கு பட்டறிவும் எடுத்த காரியத்தை முடிக்கும் வல்லமையும் கொண்ட நீங்கள் காசு பணத்திற்காக கௌரவத்தை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள்.நீங்கள் பிறரை உற்சாகப்படுத்தி வேலை வாங்குவதில் வல்லவர்கள். வித்தியாசமான குணத்தைப் பெற்ற நீங்கள் விருந்தினரை உபசரிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சந்தேகப்படுவதும், சஞ்சலப்படுவதும் தான் உங்களுக்கு உள்ள பலவீனமாகும். ஒருவரிடம் ஒரு வேலையை ஒப்படைத்துவிட்டு அவர் எப்படிச் செய்யப்போகிறாரோ என்று குழப்பம் அடைவீர்கள். ஞாபக சக்தி உங்களுக்கு அதிகமாகவே உண்டு. அதை தகுந்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்திக் கொண்டு, சங்கடங்களையும் சந்தீப்பீர்கள்.முன் பின் யோசிக்காமல் மனதில் பட்டதை அப்படியே பேசும் குணத்தால், பலருக்கு பயன்படும் யோசனைகளை கூறி அவர்கள் வளருவதற்கு வேர் போன்று இருக்கும் புத்தி தகுதியை கொண்ட ராசியில் பிறந்தவரே! சிறு வயதில் இருந்தே நீங்கள் யாருடன் பழகினாலும், அவர்களின் குணம் உங்களோடு ஒட்டிக் கொள்ளும். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க என்ன வழி என்று யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். ஒரே கருத்தை ஆதரித்தும் பேசுவீர்கள், எதிர்த்தும் பேசுவீர்கள்.

பொதுப்பலன்கள்

விரயகுரு வரும்போது விரயங்கள் குழப்பங்கள் மேலோங்கும்
பொன்னான குருபார்வையால் அதிர்ஷ்டங்கள் அதிகரிக்கும்
ஐந்தில் நிற்கும் சனியில் டென்ஷன் குறைந்து நிறைவை தரும்
பாம்பு கிரகங்களால் சாதனையும், சோதனையும் கலந்தே அமையும்

இந்த குரு மாறுதல் எப்படி இருக்கும் என்று அவசரப்பட்டு நீங்களாகவே ஒரு முடிவுக்கு வந்து கவலைக்கும், கலக்கத்துக்கும் இடம் கொடுக்கக்கூடாது.ஆக பன்னிரெண்டாமிடத்தில ஸ்ரீ குருபகவான் சஞ்சரிக்கும் போது என்னென்ன பலன்கள் நடைபெறும் என்பது மேலோட்டமாக கேள்விப்பட்டு பயந்து போய்விடாதீர்கள்.நன்மையான பல விஷயங்களும் கலந்து நடக்கும் என்ற நம்பிக்கையோடு பலன்களை படியுங்கள்.

இதுவரை லாப ஸ்தானமெனும் 11மிடத்திலிருந்து கொண்டு உங்களுக்கு பலவிதங்களில் யோகங்களையும் அதிர்ஷ்டங்களையும் அள்ளித்தந்து கொண்டிருந்த ஸ்ரீகுருபகவான் இப்போது விரயஸ்தானமெனும் பன்னிரெண்டாமிடத்திற்கு வந்திருக்கிறார். பன்னிரெண்டாமிடமென்பது ஸ்ரீகுருபகவானுக்கு உகந்த இடமா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இலங்கேஸ்வரன் இராவணன் தனது முடியைத் துறந்த போது குரு 12ல் இருந்ததாக ஜோதிடப் பாடலொன்று சொல்கிறது. எனவே இனி வரும் காலம் உங்களுக்கு மிக நல்லகாலமில்லை என்று தான் சொல்லவேண்டும்.

ஸ்ரீகுருபகவான்-பன்னிரெண்டாமிடமான விரயஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கிறார். பகலுக்குப்பின் இரவு – இரவுக்குப் பின் பகல் என்பது அன்றாடம் நாம் காணுவது. ஆனால், இரண்டுக்கும் இடையில் பகல் தொடங்குகிற அதி காலையா, இரவு ஆரம்பிக்கிற அந்திநேரமா என்று தீர்மானிக்க முடியாத காலக் கட்டமாக இருக்கிறது இந்த குருப்பெயர்ச்சியின் ஆரம்பம். முன்னும் பின்னும் அப்படியும் இப்படியுமான ஊஞ்சலாட்டம் போலத்தான் வாழ்க்கை சோதனையாகவே ஆரம்பமாகிறது உங்கள் நிலவரம்.

ஸ்ரீ சனி பகவானின் சஞ்சார நிலவரம்

முக்கிய கிரகங்களின் சஞ்சார நிலைமைகளை அனுசரித்துப் பார்க்கையில் உங்கள் ராசிக்கு8.9க்குரிய அதிபதியும்,ஆயுள்காரகனும், பியுத்ருஸ்தானாதிபதியுமான ஸ்ரீசனிபகவான் தொடர்ந்து ஐந்தாமிடமெனும் துலாம் ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். ஐந்தாமிடமென்பது சனிக்கு அவ்வளவு உன்னதமான இடமுமல்ல. உகந்த இடமுமில்லை என்று தான் சொல்ல வேண்டும். நம்மை யாராலும் அசைக்க முடியாது என்கிற ஒவர் கான்பிடன்சும் கூடாது.

பொதுவாக இனி ஏற்ற இறக்கமான வாழ்க்கை இருந்து வரும். ஆனால் தொடர்ந்து ஐந்தாமிடத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பதால் நிம்மதிப் பெருமூச்சுவிட முடியும் என்று மட்டும் சொல்லலாம். ஐந்தாமிடச் சனி அற்புதங்களைச் செய்ய முடியாதுதான்.

ஆனால் ஐந்தாமிடத்தில் ஸ்ரீசனிபகவான் சஞ்சரிப்பதை ஜோதிட நூல்கள் சிறப்பாக சொல்லவுமில்லை. அவ்வளவாக வரவேற்கவுமில்லை.என்றாலும் உங்களுக்கு ஒரளவு அதிர்ஷ்ட சக்கரம் போன்றதே. ஆகையினால் இந்த ஐந்தாமிட சனியின் பலன்களை பற்றி சிறிது சிந்தித்து விவரமாக அலசி ஆராய்ந்து என்னென்ன பலன்கள் என்று பார்ப்போம்.

வாயென சனியவனும் ஜென்மம் ரெண்டு
வருந்திய நாலைந்து ஏழு எட்டு
தாயென நவம் பத்துப் பன்னிரெண் டேற
தனச்சேதம் பொருள்சேதம் சிறையும் உண்டாம்
தோயென பங்கம் தன்னறிவால் மோசம்
துலங்கு மனை மாடு நஷ்டம் மறுதேச வாசம்
ஆயெனக் கைகாலில் வாதமோடு
அடுத்திடும் பித்தநோய் அறைகுவாயே!

இப்பொழுது சனிக்கு நான்காமிடத்தை விட ஐந்தாமிடம் பரவாயில்லை என்று ஜாதகசித்தி சொல்லுவதிலிருந்து ஐந்தாமிடத்திலும் சனிக்குக் கெடுபலன்கள்தான் என்று புலனாகிறது. ஐந்தாமிடத்தில் மட்டுமல்ல, ஜென்ம ராசி, இரண்டு, நான்கு, ஐந்து, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பன்னிரெண்டு ஆகிய இந்த இடங்களில் எல்லாம் சனி சஞ்சரித்தால் கஷ்டநஷ்டங்கள், சோதனை, வேதனைகள், சிக்கல் சிரமங்கள் உண்டு என்பதைத்தான் பொதுப்பலனாக மேற்குறிப்பிட்ட பாடல் தெரிவித்துள்ளது.

எனவே இந்த ஐந்தாமிட சனி சஞ்சாரத்தால் உங்களுக்கு நன்மையா? தீமையா? அடிப்படை சௌகரியங்கள் கெடாத வகையிலும் வருமானம் முயற்சிக்கும் காரியங்கள் கெடாத படியும் பெரிய அளவில் நன்மைகள் உண்டாகும் என்று எதிர்பார்க்க முடியாவிட்டாலும் பெரும் கெடுதல்கள் எதுவும் உண்டாகாது என்பதை திடமாக நம்பலாம்.

ஸ்ரீ சனி பகவான் உங்களை ஒகோவென்று உயர்த்தாவிட்டாலும் எந்த தொல்லையும் கொடுக்க மாட்டார், கெடுக்கவும் மாட்டார். உங்கள் வேண்டுதல்கள் வீண்போகாத அளவுக்கு இந்தச்சனியின் சஞ்சாரகாலத்தில் ஓரளவு நிம்மதி தரும், நற்பலன்களே நடக்கும்.

ஸ்ரீராகு-கேது பகவான்களின் சஞ்சார நிலவரம்

மேலும் முக்கிய கிரகங்களில் ஒன்றானநிழல் கிரகங்களான உங்க ராசிக்கு 6மிடத்தில் யோககாரகனான ஸ்ரீராகுபகவான் சஞ்சாரம் 12-மிடத்தில் ஞானகாரகனான ஸ்ரீகேது பகவான் தொடர்ந்து சஞ்சாரம் செய்கிறார்கள். இந்த இரண்டு இடங்களுமே அசுபஸ்தானங்கள் தான். இதிலே அசுபர்களான ராகுகேதுக்கள் இருப்பது அனுகூலமே.

பொதுவாகவே ராகு கேதுவுக்கு 3, 6 11ல் சிறப்பு இடங்களாகும். அத்தகைய சிறப்பு இடங்களில் ஆதிபத்தியம் உங்க ராசிக்கு வந்து அதில் ராகு இருப்பது நல்லது. எனவே இந்த ராகு-கேது சஞ்சாரம் தொடர்ந்து உங்களுக்கு அமோகமாக அதிர்ஷ்டகரமாகவே இருந்திடும். உங்கள் இலட்சியங்கள் ஈடேறி கனவுகள் நினைவாகி ஒரு அதிர்ஷ்ட சூழலில் சந்தோஷமாக-ஆன்மீக அரவணைப்போடு அற்பதமாக வாழப்போகிறீர்;கள்.

வாக்கிய பஞ்சாங்க சித்தாந்தப்படி நிழல் கிரகங்களான ஸ்ரீ ராகு பகவானும், ஸ்ரீ கேது பகவானும் கார்த்திகை மாதம் 17ஆம் தேதி ஆங்கிலம் டிசம்பர் மாதம் 2ஆம் தேதி 2012ஆம்ஆண்டு (2-12-2012) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10-53 மணியளவில் பெயர்ச்சியாகி ஸ்ரீ ராகு பகவான் ராசிமாறி துலாம் ராசிக்கும், ஸ்ரீ கேது பகவான் பெயர்ச்சியாகி ராசி மாறி மேஷ ராசிக்கும் 11-31 நாழிகைக்குள் பிரவேசித்து ஒன்னறை ஆண்டு காலம் சஞ்சாரம் செய்கிறார்கள்.

ஆனால் சுத்த திருக்கணித பஞ்சாங்க சித்தாந்தப்படி நிழல் கிரகங்களான பாம்பு கிரகங்கள் ஸ்ரீராகுபகவானும் ஸ்ரீகேதுபகவானும் மார்கழி மாதம் 8ஆம் தேதி ஆங்கிலம் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி 2012 ஆம் ஆண்டு (23-12-2012) ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீராகுபகவானும்,அதேநேரம் ஸ்ரீகேது பகவானும் பெயர்ச்சியாகி ராசி மாறி முறையே துலாம் ராசிக்கும், மேஷ ராசிக்கும் பிரவேசித்து ஒன்னரை ஆண்டு காலம் சஞ்சாரம் செய்கிறார்கள்.

மொத்தத்தில் ஆனால் பெயர்ச்சியில் ராகு ஐந்தாமிடத்திலும், கேது பதினோறாமிடத்திலும் ராசிமாறி சஞ்சரிப்பதுநன்மை தருமா? என்பது கேள்வி குறி. இருபஞ்சாங்கங்களின் சித்தாந்தப்படி இந்த பாம்பு கிரகங்களின் சஞ்சாரம் மாறுதலாக,ஆறுதலாக இருக்கும்.அற்புதமாகவும் இருக்கும். மற்றவர்கள் பொறாமைப் படுகிற அளவுக்கு திடீர் அதிர்ஷ்டசாலியாக யோகசாலியாக-ஆரோக்கியசாலியாக நீங்கள் மாறப்போகிறீர்கள் என்பது மட்டும் நிஜம்.இந்த ராகு- கேது பெயர்ச்சியால் யோகக்காரகனான ஸ்ரீராகு பகவான் ஆறாமிடத்தில் சஞ்சரிப்பது என்பது அற்புதம். ராஜ சிம்மாசனம் போன்றது.

ஸ்ரீகுருபகவானின் சஞ்சார நிலவரம்

இந்த குரு மாறுதல் எப்படி இருக்கும்? பன்னிரெண்டாமிடம் விரயஸ்தானம் என்பதால், தனகாரகனான ஸ்ரீகுருபகவான் விரயஸ்தானத்தில் சஞ்சரிப்பது காரணமாக பண விரயம் அதிகரிக்கும். வசதி வாய்ப்புகள் பாதிக்கும் என்பதுதான் பொதுவான விதியாகும். எது எப்படி இருந்தாலும் இந்த குருப்பெயர்ச்சியால் சில மறுமலர்ச்சியான நல்ல மாறுதலான வாழ்க்கைத் திருப்பங்கள் பலவிதமாக ஏற்படும். குருவின் பார்வை பலத்தால் மேலும் நற்பலன்களை காணப்போகிறீர்கள். வீடுகட்டி குடியேறும் வாய்ப்பு ஒரு சிலருக்கு உரு வாகும். இருந்தாலும் ஸ்ரீகுருபகவான் பன்னிரெண்டாமிடத்திற்கு வந்திருப்பதால் சில இழப்புகள் நிச்சயமென்று ஒரே வரியில் சொல்லலாம். இதனால் இனி நீங்கள் எதைத் தொடவும் பின் வாங்குவீர்கள். இனி எல்லாமே எதிர்மாறாகத் தான் நடக்கும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் லாபஸ்தானத்தில் இருந்த போது அள்ளி அள்ளிக் கொடுத்த ஸ்ரீகுருபகவான் இனி கொடுக்கவும் மாட்டார். ஆனால் உங்களை கெடுக்கவும் மாட்டார். அதற்கு முன்னோடியாக நீங்கள் எச்சரிக்கையாக ஜாக்கிரதையாக இருக்க வேண்டு மென்பதற்காகவே விரயத்துக்கு வந்து சில நல்ல படிப்பினைகளைத் தரவிருக்கிறார் என்பது தான் மிகச் சரியானது. என்றாலும் சகல சௌபாக்கியம் நிறைந்த உயர்வான நன்மைகளை செய்வார் என்பது நிஜம்.

ஜோதிட சாஸ்திரங்களும் – ஜோதிடச் சுவடிகளும்

ஸ்ரீகுருபகவான் விரயஸ்தானத்திலே சஞ்சரிக்கும்போது பலமிழந்து போவதால் நன்மைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற பொதுக்கருத்தில்தான் கோட்சார விதி கெட்டபலன்களையே சொல்லுகிறது. பன்னிரெண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் ஸ்ரீகுருபகவானைப் பற்றி முன்னோர்களும் ஜோதிட சாஸ்திரங்களும் பழம்பெரும் சுவடிகளும் என்ன சொல்கிறது என்று கொஞ்சம் பொறுமையாக கவனியுங்கள்.

த்வாதசே அத்வனி விலோம துக்க – பாக்யத்யபி நரோ ரதோத் கத
– என்பது ப்ருஹத் சம்ஹிதையின் சுலோகம்.ஸ்ரீகுருபகவான் பன்னிரெண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் போது ஜாதகன் துன்பம் துயரங்களை அனுபவிப்பான். வண்டி, வாகன மிருந்தும் அதை உரிய வழியில் செலுத்தி செல்ல முடியாதவன் போல வாழ்க்கையில் தவறான பாதைகளில் தடம்புரண்டு சென்று தடுமாறுவான் என்பது இதன் பொருள்.

பொன்னவன் மூன்று நாலில் பொருந்து பத்தாறில் எட்டில்
உன்னிய பன்னிரெண்டில் ஒரு ஜென்மம் தன்னில் நின்றால்
மன்னரால் பதியும் சேதம் மாதரால் வியாதி மந்தம்
நன்னிய தலைமயக்கம் நவிலுவாய்ப் புண்ணுண்டாமே?

என்று ஜாதக அலங்காரம் மனதுக்கு அதிருப்தியான பலன் களைத்தான் சொல்கிறது. சில இடங்களோடு பன்னிரெண்டாமிடத்திலும், ஸ்ரீகுருபகவான் சஞ்சாரம் செய்தால் அரசாங்கத்தாலோ, அதிகாரிகளாலோ குடும்பத்துக்கு சேதம், சங்கடம், சஞ்சலம், நெருக்கடி, கெடுபிடி, எல்லாம் ஏற்படும். பெண்களால் உடல்நல பாதிப்பும், நோய், நொடிகளும் உண்டாகக்கூடும். தலைசுற்றல், பித்தமயக்கம், வாய்ப்புண் போன்ற அசௌகர்யங்களும் வரும்& என்பது இந்த பாடலின் அர்த்தம்.

வன்மையுற்றிட ராவணன் முடி பன்னிரெண்டில் வீழ்ந்ததும்
-என்ற ஜோதிட பாடல் உங்கள் நினைவுக்கும் வர, பயந்திடவும் ஞாயமுண்டு. ஜென்ம ராசிக்குப் பன்னிரெண்டில்ஸ்ரீகுருபகவான் சஞ்சரிக்கும் போதுதான் தசக்கிரீவனும் இலங்காதிபதியுமான இராவணனுடைய மணிமகுடமான கீரிடம் மண்ணில் விழுந்தது. அவரது அரசாட்சியும் முடிந்ததாம். இன்னுமொரு பாடல் ஒன்றையும் உங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

தானென்றசுந்தரனும் வியத்தலேற தவத்தாலேவந்ததொரு இலங்கை வேந்தன்
கோனென்றராமன்கைஅம்பால்மாண்டான்குவலயத்தில்ஜென்மனுக்குக்கொடுமைஎழுந்த
மானென்ற மறலிபயம் பொருளும்சேதம் மைந்தேனே அரிட்டங்கள் வந்து கூடும்
ஊனென்றபோகருடகடாட்சத்தாலேஉத்தமனேபுலிப்பாணிஉரைத்தேன்காணே

-என்று புலிப்பாணி முனிவரும் இராமனால் இராவணன் போர்களத்தில் முடியிழந்து இறந்த பழைய கதையை ஒரு பாடல் மூலம் சொல்லியிருக்கிறார். இராவணன் முடி துறந்த மாதிரி நீங்களும் முடி துறக்க வேண்டுமா? இல்லை.இல்லைவே இல்லை. நீங்கள் அரசியல்வாதியாகவோ, மதத் தலைவர்களாகவோ, அரசு உயர் பதவியில் இருப்பவராகவோ இருந்தால் இது ஒரளவுக்குப் பொருந்தும். மற்றவர்களுக்கு அவ்வளவுவாகப் பொருந்தாது. இராவணனை போரில் ராமன் இன்று போய் நாளை வா என்று சொன்ன மாதிரி உங்களுக்கு உதவி செய்வதாக வாக்களித்தவர்கள் வேண்டுமானால் இப்படி சொல்லலாம்.அதாவது, நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் சமயத்தில் கிடைக்காது. உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் உங்களை விட்டு விலகுவார்கள். விரயம் என்பது தவிர்க்க முடியாததாகவே இருக்கும். சில இழப்புகளும் ஏமாற்றங்களும் நிச்சயமிருக்கும். எப்போதும் சிந்தனை வயப்பட்ட நிலையில் தான் காணப்படுவீர்கள். உருப்படியாக எதுவுமே இருக்காது. உங்கள் செல்வாக்கு குறைந்து விடும். வருமானமும ;குறைந்துவிடும். தனிமையில் விடப்பட்ட மாதிரி ஒரு சூழ்நிலை உருவாகும். விரய குரு வீழ்ச்சியைத்தான் தருமென்பது அனுபவ உண்மையாகும்.அந்த அளவுக்கு இந்த ராசி அன்பர்கள் துன்பம், துயரங்கள், சோதனைகள், வேதனைகள், சிக்கல், சிரமங்கள் அனுபவிப்பார்கள் என்பது கருத்து.

இதனால் பன்னிரெண்டாமிடத்துக் குருவால் என்னதான் ஆகும். பாடலில் சொன்ன பொருளும் சேதம் என்ற பலன்தான் உங்களுக்கு ஒத்து வரும், பொருந்தும். பணத்தை பல வகையிலும் செலவழிய விடுவதுதான் விரய குருவின் முக்கியபலன். இப்பேர்பட்ட குருவால் இனிமேலும் நன்மை கிடைக்கும் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம்!

ஸ்ரீகுருபகவான் ஸ்தானகாரகன், சுபகாரகன் என்பது பொதுவிதி. ஆனால் ஸ்ரீகுருபகவான் இப்போது விரயஸ்தானத்துக்கு வருவதால் முன்னே எப்படி நல்ல இடத்தில் இருந்த போது கெட்ட பலன்களை சேர்த்து அளித்தாரோ, அதே போல இனிமேல் விரயஸ்தானத்திலே இருந்தபடியே விருத்தியான பலன்களையும் கலந்து நடத்துவார் என்பது உறுதி. கீழே உள்ள பாடலைப் பாருங்கள்.

ஓங்கவே குருவேதான் ஒன்று மூன்றும் உகந்த நாலாறு எட்டுப் பத்து ஈராறில்
தீங்காக நின்றிடிலோ பலனைக்கேளு தேடிய பொருள் பூமி சேதமாகும்
வாங்கவே அகத்தினிலே அலைச்சலோடு வாத பித்த ரோகமது வந்து வாட்டும்
தாங்கவே தந்தையொடு புத்திரர்க்கும் தேடி வரும் தீமையது இடர் உண்டாமே

பாடலை படித்தீர்களா? ஈராறில் (பன்னிரெண்டில்) குரு நின்றால், பாடலில் சொல்லப்படும் கருத்து பலன்கள் எல்லாம் இப்படித்தான். அவரவர் ஜாதக யோகத்திற்கு தகுந்தபடி பணவரவு ஒரு விதம், செலவுகள் பல விதங்களாக வந்து பயமுறுத்தும். எதையும் திட்டம் போட்டு செய்ய முடியாது. செலவினங்கள் எந்த ரூபத்தில் வரும் என்பதும் தெரியாது. சிக்கனம் பார்ப்பீர்கள். எதிர்பாராத வகையில் பெருந்தொகையாய் செலவுகள் வந்து சேரும். அவசியத்துப் பாதி அனாவசியத்துக்கு மீதி என்று பணம் பஞ்சாய் பறக்கும். எதிர்பாராத செலவுகளும் விஸ்வரூபம் எடுத்து விழிபிதுங்கிடும்.

விரய குருவின் சஞ்சாரம் முயற்சிக்கும் காரியங்களில் குறைந்த செலவுகளிலும் செலவு களே இல்லாமலும் செய்து முடிக்கிற காரியங்களைக்கூட அதிகப்படியான செலவுகளால்தான் நடத்திக்கொள்ள வேண்டி வரும். சஞ்சலங்களும், சங்கடங்களும் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் சிக்கல், சிரமமோ, வில்லங்கமோ உண்டாகலாம்.

பொருளாதார வகையில் வரவுக்கு மீறிய செலவினங்கள் உண்டு. சரளமாகவும், தாராளமாகவும், பணவசதி பெருகினாலும் பணத்தேவை அதிகமாவதால் பற்றாக்குறை பட்ஜெட்தான். தேவைக்காக பணத்தை புரட்டுவதற்காக கடன்படவும் நேரிடும். பழைய கடன்கள் பைசலாகும். பணத்தை சேர்த்து வைக்க முடியாததால் கொடுக்கல், வாங்கலில் ஏற்படும் பிரச்னைகளை சமாளித்தே ஆக வேண்டும். இதனால் கடன் கொடுப்பதோ, கணிசமான தொகையை கைமாற்று அல்லது கொஞ்சம் அட்ஜெஸ்ட் என்று செய்கிற சமாச்சாரமெல்லாம் வேண்டாம்.

செய்தொழில், வியாபாரம், வணிகம், உத்தியோகம் வகையில் யுக்தி, புத்தி, யோசனைகள் அடிக்கடி குழப்பம், குளறுபடி, தடுமாற்றம் உங்கள் எண்ணங்களே ஏடாகூடமான பிரச்னைகளில் இழுத்து விடலாம். சிந்தனையின் போக்கே செலவுக்கு விரயத்துக்கும் வழிவகுக்கும். குறுக்கு வழிகளும், மறைமுக ரகசிய தொடர்பு தொழில்களும் ஆபத்தை விளைவிக்கும். குருட்டு அதிர்ஷ்டத்தை நம்ப வேண்டாம்.

குடும்பத் தேவைகளை திருப்திகரமாக நிறைவேற்ற முடியாததால் குடும்பத்தில் உள்ள வர்களின் மனக்குறைக்கு அடிக்கடி ஆளாகவும் கூடும். குடும்பத்தில் பணத்தை சேர்த்து வைத்திடமுடியாது.பணம் வந்து சேர்வதைவிட அது பறந்து போகிற வேகத்தைப் பார்த்து பிரமித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.எக்குதப்பாகவார்த்தையைவிட்டு விடாதீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு – வேலையில் அதிருப்தியும், அல்லலும், அலைக் கழிப்பும், ஆதாயத் தட்டுத்தடங்கலுமான பலன்கள் உண்டாகும். கீழ்நிலை ஊழியர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்வது நல்லது.

மாணவர்களுக்கு – கல்வியில் அக்கறையும், கவனமும், சக்தியும், யுக்தியும், புத்தியும் எந்த அளவுக்கு பயன்படுத்து கிறீர்களோ அந்த அளவுக்கு முன்னேற்றமும், சிந்தனையில் தெளிவும், உள்ளத்தில் உற்சாகமும் அதிகரித்திடும்.

வியாபாரிகளுக்கு – நல்ல அபிவிருத்தியை உண்டாகும். ஆனால் அறிமுகமோ, அனுபவமோ இல்லாத வியாபாரங்களில் ஆழம் தெரியாமல் இறங்குவது கட்டாயம் கூடாது.

தொழிலாளர்களுக்கு – உழைக்கிறதிலே சிரமம் இருந்தாலும் சலுகைகளும், அனுகூலங்களும் இருந்திடும். உருப்படியாக வேலைகளை எல்லாம் முடிக்கலாம்.

கலைஞர்களுக்கு – பேரும், புகழையும் காப்பாற்றிக்கொள்ள முடியாத நிலை. காரியத்தில் தடை தாமதம், தட்டுத்தடங்கல், அலைச்சல், திரிச்சல், பயணங்கள், கெட்டப் பெயரை தேடிக் கொள்வது போன்ற அல்லல்களும் அதிகரித்திடும்.

அரசியல்வாதிகளுக்கு – எல்லா வகையிலும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். பொது மக்களின் தரக்குறைவான பேச்சுக்கு ஆளாகவும் கூடும்.

பெண்களுக்கு – கையில் பணப்புழக்கம் அதிகரித்திருக்கிறது. குடும்பத் தேவைகளை சரளமாகவும், தாராளமாகவும் செய்து கொள்ளலாம்.

ஸ்ரீகுருபகவானின் அருட்பார்வைகளினால் ஏற்படும் நன்மைகள்

ஸ்ரீ குருபகவான் அருள் பார்வையான ஐந்தாம் பார்வை உங்கள் ராசிக்கு சுகஸ்தானமானமும் நான்காமிடமுமான கன்னியில் பதிவதால் இதுவரை சொல்லப்பட்ட பலன்களில இருக்கும் சிக்கல், சிரமங்களையும் குறைத்து, செலவுகளையும் ஒரளவு கட்டுப் படுத்தி முடிந்தளவு முன்னேறுவதற்காக தட்டுத்தடங்களால், இக்கட்டு. இடைஞ்சல்களை சரிப்படுத்த பொருளாதார வகையிலும் திருப்தி தரும் வகையில் அபிவிருத்திசெய்து கொள்வதற்கான வழிவகைள் உண்டாகவும் ஞாயமுண்டு.

ஸ்ரீ குருபகவானின் இன்னொரு அருள் பார்வையான ஏழாம் பார்வை உங்கள் ராசிக்கு பகை, ருண ரோகஸ்தானமும் ஆறாமிடமுமான விருச்சிகத்தில் ஒளி வீசுவதால் சிக்கல், சிரமம், சங்கடம்,சஞ்சலம்,நெருக்கடி போன்றவைகளை முறியடிக்கும் சக்தி அதிகரிக்கும்.கடன் பாதிப்பு தராது. சில கடன்கள் நிவர்த்தியாகும். வம்பு, வழக்கு, வியாஜ்ஜியம், கோர்ட் விவகாரங்களில் வெற்றி கிட்டிடவும் ஞாயமுண்டு.

ஸ்ரீ குருபகவானின் மேலும் ஒரு பார்வையான ஒன்பதாம் பார்வை உங்கள் ராசிக்கும் அஷ்டம ஸ்தானமும் எட்டாமிடமுமான மகரத்தில்; பதிவதால் நீடித்த வியாதி குணமாகும். வீண் விவகாரங்களில் இருந்து உங்களை கூடுமானவரை விடுவிக்கும்படி வைக்கும்;. வாழ்க்கையில் எப்போதும் ஒரே பரபரப்பும். கடினசித்தத்தோடு நடந்து கொள்ள வேண்டிய நிலைமையே உண்டாகும். வரப்போகும் எதையும் முன்பே அறிந்து சொல்லும் ஆற்றலும் வல்லமையும் நிறைந்து காணப்படும்.

நட்சத்திரப் பலன்கள்

மிருகசீரிடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு

தைரியக்காரகன் என்று வர்ணிக்கப்படும் செவ்வாயின் பலம் பெற்ற மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்த உங்;களுக்கு இந்தக் குருபெயர்ச்சி காலத்தில் கொஞ்சம் குழப்பமாகத் தான் இருக்கும் வழக்கமான பணிகள் கூட நடக்காது.தொழில் வியாபாரத்தில் எந்த மாறுதலும் ஏற்படாது. அறிமுகமில்லாதோரின் உதவி கிடைக்கும். வருமானம் குறையும். உத்தியோகத்தில் டென்ஷன் அதிகரிக்கும். தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையோடு போய் விடும்.குடும்பத்தில் புதிய பிரச்னை உருவாகும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

ராகு பலம் பெற்ற சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமான திருவாதிரையில் பிறந்தஉங்களுக்கு இந்தக் குருபெயர்ச்சி காலத்தில் ஏற்ற இறக்கமாகத்தான் இருக்கும். எதையும் அதன் போக்கில விட்டுப் பிடிப்பது நல்லது. தொழில் வியாபாரம் சரிவர இயங்காது. புதிய முயற்சிகள் வேண்டாம். உத்தியோகஸ்தர்கள் அதிக பணியை மேற்கொள்ள வேண்டும். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பதபதப்பு இருக்கும். நஷ்டக் குறிகள் அதிகரிக்கும்.குடும்பத்தில் பிரச்னைகள் அதிகமாகி விடும். சில இழப்புகள் தவிர்க்க முடியாததாக இருக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் 1.2,3-ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு

புத்திகாரகன் என்று வர்ணிக்கப்படும் குருவின் பலம் பெற்ற புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்தக் குருபெயர்ச்சி காலத்தில் சிறிது பிரச்னைகளை எப்படியோ அனுகூலமாக சமாளிக்கும்படி இருக்கும். திட்டமிட்டு செயல்படுவீhக்ள். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வார்கள். உத்தியோகஸ்தர்கள் பாராட்டுகளைப் பெறுவார்கள். குடும்பகுதூகலம் குறைந்துதான் இருக்கும்.வருமானம் குறையாது. குடும்பத்தில் சுப காரியங்கள் திடீரென்று நடக்கும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். நல்ல செய்திகள் சந்தோஷம் தரும்.

மாதவாரியாகப்பலன்கள்

மே-17-5-2012 முதல் 31-5-2012 வரை- இக்காலக் கட்டங் களில் சோதனைகளும், வேதனைகளும் கலந்து தான் இருக்கும். திட்டமிட்ட பணிகள் தீவிர முயற்சியின் பேரில்தான் நடக்கும். வருமானம் பாதியாக குறைந்து விடும். பண ரொட்டேஷனுக்கு திக்கு முக்காட வேண்டி வரும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் திடீரென்று நடக்கும்.செய்தொழில், வியாபாரம், வணிகம், உத்தியோகம் மாறுதடையும்.

ஜூன்-1-6-2012 முதல் 30-6-2012 வரை – இக்காலகட்டம் மிதமான பலன்களையே தரும். தீவிர முயற்சியின்பேரில் திட்டமிட்ட பணிகளெல்லாம் நடைபெறும். செய்தொழில், வியாபாரம் போட்டி,பொறாமை,எதிர்ப்புகள் இருக்கும். வருமானம் குறையாது.;

ஜூலை – 1-7-2012 முதல் 31-7-2012 வரை- இந்தகாலகட்டம் சாதாரணமாகவே தான் இருக்கும். எதையும் ஒரு தடவைக்கு பல தடவை யோசித்து, சிந்தித்து செய்வது நல்லது. செய்தொழில், வியாபாரம் வழக்கம்போலவே நடக்கும். உத்தியோகத்தில் மாறுதல் எதுவும் இருக்காது. குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். அசுர முயற்சியாலும் கடின உழைப்பாலும் காரியங்களை முடிப்பீர்கள்.

ஆகஸ்ட்-1-8-2012 முதல் 31-8-2012 வரை- இந்தக்காலக்கட்டம் அரசாங்க சம்பந்தப்பட்ட வகையில் அல்லலும், அலைக்கழிப்பும் உண்டாகும். தொழில் துறையில் பின்னடைவு காணப்படும். மேலதிகாரிகளின் உபத்திரவம் அரசாங்க விஷயங்களில் எதிர்; மாறானவிளைவுகள் ஏற்படும்.புதிய முதலீடுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. பணம் பற்றாக்குறை உண்டு. குடும்ப வாழ்க்கையில் அதிருப்தி பாதகமாகலாம்.

செப்டம்பர்-1-9-2012 முதல் 30-9-2012 வரை- இந்தக்காலகட்டம் நம்பிக்கை அளிப்பதாக இருக்கும். தடைபட்ட, சுணக்கமான பணிகள் நடக்கும். எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். செய்தொழில், வியாபாரத்தில் ஒரளவு நெருக்கடி, கெடுபிடிகள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு உபத்திரவங்களும், வேலை சுமையும் கொஞ்சம் குறையும்.இடமாற்றம், இலாகா மாற்றம் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, பாதிக்கப்படும்.

அக்டோபர் -1-10-2012 முதல் 31-10-2012 வரை- இக்காலகட்டத்தில் முயற்சிக்கும் காரியங்களில் தடை, தாமதமும், வாழ்க்கையின் முன்னேற்றத்தில் தட்டுத்தடங்கலோ உண்டாகும். வீடு, நிலம், விவசாய வகையில் கஷ்டமும், நஷ்டமும் பொருள் இழப்பும்ஏற்படும்.விபத்துக்கான அறிகுறிகள் இருப்பதால் எச்சரிக்கை அவசியம்.

நவம்பர் 1-11-2012 முதல் 30-11-2012 வரை – இக்காலகட்டத்தில் சோதனை யாகத் தான் இருக்கும். எதுவும் சாதகமாக இருக்காது. புகழ், செல்வாக்கு,சொல்வாக்கு வருமானம் குறைகிறமாதிரி தோன்றும். விபத்துக்கள் ஏற்படலாம். குடும்ப வாழ்க்கை பாதிக்கக்கூடும். சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்ற பழமொழியைக் கெட்டியாக பிடித்துக் கொள்வது நல்லது. நடைமுறை வாழ்க்கைக்கு எந்த குறைகளும் ஏற்படாது.

டிசம்பர் 1-12-2012 முதல் 31-12-2012 வரை – இக்காலக்கட்டங்களில் குடும்பத்தில் பிரச்னைகளும், அதனால் குழப்பமும், உருவாகலாம்.வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் மனக்கிலேசமும், மனக்கசப்பும் ஏற்படும். ஆனால் வீடு, நிலம், விவசாயம், சம்பந்தப்பட்ட வகையில் முன்னேற்றம் இடமாற்றமும், ஸ்தல யாத்திரை – குடும்பத்தோடு உல்லாசப் பயணம், வீடு, வாகனாதி சொத்துக்கள் சேரும்.

ஜனவரி -1-1-2013 முதல் 31-1-2013 வரை – இந்தக் காலக்கட்டத்தில் அடிகளை அளந்துதான் வைக்க வேண்டும். எதை செய்தாலும் ஒரு தடவைக்கு பத்து தடவை யோசியுங்கள். சிந்தனைக் குதிரையைத் தட்டிவிடுங்கள். உங்கள் புத்தி, சுறுசுறுப்பாக இப்போது வேலைசெய்யாமல் போய் விடும். உங்கள் வாக்கை தேவ வாக்காக மதித்தவர்கள் அடபோப்பா என்று விலகுவார்கள்.

பிப்ரவரி -1-2-2013முதல் 28-2-2013 வரை – இந்தக் காலக்கட்டம் ஓரளவு எல்லாமே சரியாக நடந்தாலும் ஏதோ ஒரு குறை இருப்பது மாதிரியே தான் தெரியும். தேவையற்ற மனக்குழப்பம் நெஞ்சில் நிழலாடும். எவ்வளவு வருமானம் வந்தாலும் பற்றாக் குறை பட்ஜெட் தான்.இதைதவிர மருத்துவ செலவுகள், தண்டசெலவுகள் வேறு வாட்டி வதைக்கும். உங்களுக்கு தெரியாத விஷயங்களில் தலை யிடாமல் இருப்பது நல்லது.

மார்ச்-1-3-2013 முதல் 31-3-2013வரை – இந்தக் காலக் கட்டம் சிறிது ஆறுதலாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். திட்டமிட்ட பணிகள் தீவிர முயற்சியின் பேரில் நடக்கும். விட்டதைப் பிடித்து விடுவீர்கள். குருட்டு அதிர்ஷ்டங் களை எதிர்பார்க்கலாம். செய்தொழில், வியாபாரத்தில், திடீர் விறுவிறுப்பும் ஏற்படும்.

ஏப்ரல் 1-4-2013 முதல் 30-4-2013 வரை – இந்தக் காலகட்டம் சோதனை சாதனை முக்கால் என்ற அளவில் இருக்கும். நன்மைத்தரக்கூடிய அதிர்ஷ்டகரமானவைகளே நடைபெறும். மனத்திற்கு ஆறுதலையும், வாழ்க்கையில் மாறுதலான சந்தோஷம் தரக் ;கூடிய நன்மைகள் உண்டாகும். தடைபட்ட, சுணக்கமான சுபகாரியங்கள் நடைபெறும்.

மே 1-5-2013 முதல் மே 27-5-2013 வரை – இதுவரை அனுபவித்து வந்த சோதனை களும், வேதனைகளும் துன்பம் துயரங்களும் மாறி உங்களுக்கு அதிர்ஷ்டகரமாகவே இருக்கும். இதுவரை இல்லாத யோகமும், போகமும், சகல சௌபாக்கியங்களும் நீங்கள் நினைத்து பார்க்காத அளவிற்கு தேடி வரும்[rps]

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago