திரையுலகம் விழி பிதுங்கிய நயன்தாரா…தொல்லை தந்த பிரபுதேவா…

விழி பிதுங்கிய நயன்தாரா…தொல்லை தந்த பிரபுதேவா…

South indian actress Naynthara

காணொளி:-

சென்னை விமான நிலையத்தில், நடிகை நயன்தாராவிடம், சுங்க இலாகா அதிகாரிகள், 40 நிமிடங்கள் விசாரனை நடத்தினார்கள் இதனால் நயன்தாரா தவித்துப் போனார்.

நடிகை நயன்தாராவுக்கும், டைரக்டர்-நடிகர் பிரபுதேவாவுக்கும் இடையே இரண்டு வருடங்களாக நெருக்கமாக காதல் இருந்து வந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல், கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள்.

இரண்டு பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், சமீபத்தில் இருவரும் பிரிந்து விட்டார்கள்.

பிரபுதேவாவை பிரிந்தபின் நயன்தாரா மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். இரண்டு புதிய தெலுங்கு படங்களிலும், அஜீத் ஜோடியாக ஒரு தமிழ் படத்திலும் அவர் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.
பாங்காக் பயணம்

அஜீத் பட வேலை தொடர்பாக கேரளாவில் இருந்து சென்னை வந்தார். இங்கிருந்து நயன்தாரா தனது மானேஜர் ராஜேஷ், மேக்கப் மேன் ராஜு ஆகியோருடன் விமானம் மூலம் பாங்காக் சென்றார்.
வேலையை முடித்துக் கொண்டு பாங்காக்கில் இருந்து மீணடும் அவர் சென்னை திரும்பினார்.

விசாரணை-சோதனை

சென்னை விமான நிலையத்தில் அவர் இறங்கியபோது, பாங்காக் சென்று வந்தது தொடர்பாக சுங்க இலாகா கமிஷனர் மற்றும் அதிகாரிகள் நயன்தாராவிடம் விசாரணை நடத்தினார்கள்.
அவருடைய மானேஜர் ராஜேஷிடம் இன்னொரு அறையில் தனியாக விசாரணை நடந்தது. இரண்டு பேரின் சூட்கேஸ்களையும் அதிகாரிகள் சோதனை போட்டார்கள்.

40 நிமிடம் தவிப்பு

இந்த விசாரணை-சோதனை 40 நிமிடங்கள் நடந்தது. சுங்க அதிகாரிகளின் திடீர் சோதனை காரணமாக நயன்தாரா தவித்துப் போனார்.
40 நிமிடங்களுக்குப்பின் நயன்தாராவையும் அவருடைய மானேஜர் ராஜேஷையும் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதி அளித்தார்கள்.

அவர் சென்ற காரணம் இது தான்…

நயன்தாரா, பிரபுதேவாவுடன் நெருக்கமாக இருந்தபோது, பிரபுதேவாவின் பெயரை தனது கையில் பச்சை குத்தி இருந்தார். இப்போது அவர் மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருப்பதால், பிரபுதேவாவின் பெயரை தனது கையில் இருந்து அழிக்க முயற்சி செய்து வருகிறார். இது தொடர்பாகவே, அவர் பாங்காக் சென்று வந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே, யாரோ ஒரு நபர், சுங்க அதிகாரிகளுக்கு தவறான தகவல் அளித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவே அதிகாரிகள், விமான நிலையத்தில், நயன்தாராவிடம் விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி