மயக்கம் என்ன படத்துக்குப் பிறகு இயக்குநர் செல்வராகவன் உருவாக்கி வரும் இரண்டாம் உலகம் படத்தின் முதல் பார்வைக்கான படங்கள் வெளியாகியுள்ளன.
செல்வராகவன் – யுவன் – அரவிந்த் கிருஷ்ணா கூட்டணியாக இருந்தபோது உருவான ஐடியா இந்தப் படம். இவர்களின் ‘ஒயிட் எலிபென்ட்’ நிறுவனம் உடைந்து சிதறியதில், இந்தப் படம் உருவாவதும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது, கிட்டத்தட்ட 6 ஆண்டுகள்.
இந்தப் படத்தின் ஹீரோக்கள் தனுஷ், ராணா, அல்லு அர்ஜூன் என மாறிக்கொண்டே இருந்தார்கள். கடைசியில் ஆர்யா -அனுஷ்கா என்பது உறுதியானது.
ஆரம்பத்தில் யுவன், பின்னர் ஜீவி பிரகாஷ், மீண்டும் யுவன், இப்போது ஹாரிஸ் ஜெயராஜ்… இசையமைப்பாளர்கள் மாறிய ‘ஆர்டர்’ இது.
ஒளிப்பதிவு ராம்ஜி. ஷுட்டிங் தொடங்குவதும் நிற்பதுமாக இதோ அதோ என இழுத்தடித்த ஒரு படம்.. இப்போது படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்கிறார்கள்.
ஸ்டில்களைப் பார்த்தால், ஒரு இனிமையான உணர்வு வருகிறது. படம் பார்க்கும்போது அந்த உணர்வு இருந்தால் நன்றாக இருக்கும்!
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே