சென்னை..பெங்களுருவில் நிலநடுக்கம்….

சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டடங்கள் கிடுகிடுவென ஆடின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டும் கட்டடங்களை விட்டும் வெளியேறினர்.

இன்று பிற்பகல் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் நகரின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, எழும்பூர், நந்தனம், ஆழ்வார்ப்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்டபல பகுதிகளிலும் மக்கள் உணர்ந்தனர்.

அரசு அலுவலகங்கள் நிரம்பியுள்ள சேப்பாக்கம் பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அரசு ஊழியர்கள் பயந்து வெளியேறினர். சில விநாடிகளுக்கு கட்டடங்கள் கிடுகிடுவென ஆடியதால் அவர்கள் பீதியடைந்தனர். கட்டடங்கள் ஆடியதால் மேசை, சேர்களும் ஆடியுள்ளன. மேலும் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் ஆடியதால் அனைவரும் பீதியடைந்தனர்.

யாரோ பிடித்து உலுக்கியது போல கட்டடங்கள் வேகமாக ஆடியதால் ஊழியர்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது.அனைவரும் அலுவலகங்களை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

இதேபோன்ற நிலநடுக்கத்தையும், ஆட்டத்தையும் நகரின் பல பகுதிகளிலும் மக்கள் உணர்ந்தனர். சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகளை மக்கள் உணர்ந்ததால் நகர் முழுவதும் பெரும் பீதி காணப்படுகிறது. மக்கள் வீடுகளை விட்டும், கட்டடங்கள், அலுவலகங்களை விட்டும் வெளியேறியுள்ளனர்.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர், கோடியக்கரை உள்பட ல இங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

நந்தனம் 8 மாடி கட்டடத்திலிருந்து ஊழியர்கள் ஓட்டம்….நந்தனம் பகுதியில் உள்ள சேவை வரி விதிப்பு (service tax) அலுவலகம் அமைந்துள்ள 8 மாடி கட்டடம் குலுங்கியது. இதனால் அலுவலகத்தில் இருந்தவர்கள் பதறி அடித்துக்கொண்டு வெளியேறினர்.

நில அதிர்வு குறித்து உணர்ந்தவர்கள் கூறியதாவது.

2மணி 15 நிமிடத்தில் கட்டடம் திடீரென்று குலுங்கியது. யாரோ தள்ளிவிட்டது போல உணர்ந்தோம். உடனே பதறியபடி வெளியேறிவிட்டோம் என்று கூறினர்.

சைதாப்பேட்டை, தி. நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியுடன் அலுவலகங்களையும், வீடுகளையும் விட்டு வெளியேறினர்.இதனால் அப்பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து சிறிதளவு பாதிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலக ஊழியர்களும் ஓட்டம்… இதேபோல சென்னை தலைமைச் செயலக அலுவலகப் பகுதியிலும் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் ஆடியதால் ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர்.

பெங்களுருவின் பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது…குறிப்பாக மென்பொருள் நிறுவனங்கள் அதிகம் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி மற்றும் ITPL இல் ஊழியர்கள் பாதுகாப்பு கருதி கட்டடங்களில் இருந்து வெளியற்றபட்டனர்..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago