ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே ஓடும் ரயிலில் நடிகை ரோஜா தூங்கிக் கொண்டிருந்த போது அவரது வைர நகைகள் கொள்ளை போயின.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், நடிகையுமான ரோஜா ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் அங்கிருந்து மசூலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரவு 10 மணிக்கு ஏறினார். ரயிலில் படுத்ததும் நன்றாக தூங்கி விட்டார். அப்போது அவர் தனது வைர காதணி, ரூபி மற்றும் வைர கற்கள் பதித்த 5 பவுன் நெக்லஸ் ஆகியவற்றை கைப்பையில் வைத்திருந்தார்.
நள்ளிரவில் அவரது பெட்டிக்குள் புகுந்த மர்ம மனிதன், ரோஜாவின் கைப்பையில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு மாயமாகிவிட்டான்.
அதிகாலை நேரத்தில் ரயில் செகந்திராபாத் வந்து சேர்ந்தது. நகைகள் திருட்டு போனதை அறியாத ரோஜா, கைப்பையை எடுத்துக்கொண்டு ரயிலில் இருந்து இறங்கிச் சென்று விட்டார்.
வீட்டுக்கு சென்று பார்த்த போது, கைப்பையில் நகைகள் இல்லை. அப்போதுதான் அவர் தனது நகைகள் திருட்டுப் போய் விட்டதை அறிந்தார்.
உடனே ரோஜா இதுபற்றி செகந்திராபாத் ரயில் நிலையத்துக்கு சென்று, போலீசில் புகார் கொடுத்தார். ரயில் கொள்ளையனை போலீசார் தேடி வருகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே