விலைவாசி உயர்வு பிரச்சனையில், மத்திய வேளாண் துறை அமைச்சர் ஷரத் பவாரை குறை கூறும் விதமாக கருத்து தெரிவித்த ராகுல் காந்திக்கு தேசியவாத காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. மத்தியில் கூட்டணி ஆட்சி நடைபெறுவதால்தான் விலைவாசி உயர்வு, உணவு பண வீக்கம், லஞ்ச – ஊழல் போன்றவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்து இருந்தார்.
ராகுலின் இந்த கருத்து, விலைவாசி மற்றும் உணவு பண வீக்கத்திற்கு ஷரத்பவாரை மறைமுகமாக குற்றம்சாற்றுவது போல் இருந்தது. இந்நிலையில் ராகுலின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி, விலைவாசி உயர்வுக்கு தனிப்பட்ட யாரும் காரணம் அல்ல என்றும், ஒட்டு மொத்த அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் தாரிக் அன்வர், பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட வீழ்ச்சியை சுட்டிக்காட்டி, “இது கூட்டணி யுகம். கூட்டணி அரசை நாம் புறக்கணித்துவிட முடியாது” என்று கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே