தமிழக மீனவர் சுட்டுக் கொலை-வழக்கம் போல் கருணாநிதி தந்தி அனுப்பினார்…

சிங்கள இனவெறி கடற்படையின் குண்டுகளுக்கு மேலும் ஒரு தமிழக மீனவர் அநியாயமாக உயிரிழந்துள்ளார். நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள சின்னக்குடியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் பாண்டியன் (20). இவரும், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த முனியசாமியின் மகன்கள் மணிகண்டன், மணிவண்ணன் ஆகியோரும் மீன் பிடிப்பதற்காக புதன்கிழமை காலை ஜெகதாப்பட்டினத்திலிருந்து கடலுக்குள் விசைப் படகில் சென்றனர். இந்திய கடல் எல்லைக்குள் 14 கடல் மைல் தொலைவில் விசைப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதிக்கு வந்த சிங்கள இனவெறி கடற்படையினர் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர்.

இதில் பலத்த குண்டுக் காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்னொருவர் காயமடைந்தார். இந்த சம்பவம் இந்திய கடல் எல்லைக்குள் நடந்தது. உயிரிழந்த பாண்டியனின் உடலுடன் மற்ற மீனவர்கள் கரைக்கு விரைந்தனர். பாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரவியதும் ஜெகதாப்பட்டினமே கடற்கரையில் திரண்டு விட்டது. மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு கிளம்பியது.

அனைத்து மீனவர்களும் பாண்டியனின் உடலுடன் ராமேஸ்வரம்-நாகப்பட்டனம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மறியலில் குதித்தனர். இதனால் இச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து மீனவர்களை சமாதானப்படுத்தினர். பாண்டியன் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

சிங்கள கடற்படையின் இந்த வெறிச் செயலால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மட்டுமல்லால், ராமநாதபுரம், நாகப்பட்டனம் மாவட்டமீனவர்களும் கடும் அதிர்ச்சியும், கொதிப்பும் அடைந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்ட கடலோர கிராமங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சிங்கள கடற்படையின் அத்துமீறல்களுக்கும், அநியாய கொலைகளுக்கும் முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. சிங்கள கடற்படை இப்போதெல்லாம் இந்தியப் பகுதிக்குள்ளும் புகுந்து தாக்கி வருகிறது.

ஆனால் இதை ஒருமுறை கூட இந்திய கடற்படையோ அல்லது கடலோரக் காவல் படையோ தடுத்ததில்லை. ஒரு முறை கூட இலங்கை கடற்படையினரின் தாக்குதலிலிருந்து இந்தியப் படைகள், இந்திய மீனவர்களைக் காத்ததில்லை. இதுவரை 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் ரத்தத்தைக் குடித்து விட்டது இலங்கைக் கடற்படை. ஆனாலும் கடலுக்குள்ளேயே போக முடியாத அளவுக்கு தொடர்ந்து இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதைத் தடுத்து தங்களைக் காப்பாற்ற ஒரு நாதியும் இல்லாத நிலையில் தமிழக மீனவர்கள் பெரும் மனக் கொதிப்புடன் உள்ளனர். இந்த நிலையில் மேலும் ஒரு உயிரைப் பறித்துள்ளது சிங்கள இனவெறி கடற்படை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago