Categories: அரசியல்

இந்தியாவின் இராணுவ பலத்திற்கு அடுத்த ஆப்பு…

முதன் முதலாக சீனா தனது உளவு விமானம் ஒன்றை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இது குறித்து தங்களுக்கு கவலையில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது. இந்நிலையில், “அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும், கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை வடகொரியா தயாரிக்கக் கூடும்’ என்று ஆரூடம் தெரிவித்துள்ளார் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ். வடகொரியாவின் இந்தப் போக்கு அமெரிக்கா – சீனா ராணுவ உறவுகளை மேம்படுத்தக் கூடும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா – சீனா இடையேயான ராணுவ உறவுகள், பிரச்னைகள் குறித்து கலந்தாலோசிப்பதற்காக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ், கடந்த 9ம் தேதி சீனத் தலைநகர் பீஜிங்குக்கு வந்தார். சீனப் பாதுகாப்பு அமைச்சர் லியாங் குவாங் க்லீயுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, “இருதரப்பு ராணுவ உறவுகள் மேம்படும் விதத்தில் ஆண்டுதோறும் கூடி பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம், இருதரப்பிலும் நிலவி வரும் தவறான புரிதல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் களையப்பட வேண்டும்’ என்று உறுதி செய்யப்பட்டது. எனினும் எதிர்காலத்தில் அமெரிக்கா, தைவானுக்கு ஆயுதங்கள் வழங்கும் பட்சத்தில் இருதரப்பு ராணுவ உறவுகள் தொடர்வதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று க்லீ தெரிவித்தார்.

ஜிண்டாவோ – கேட்ஸ் சந்திப்பு: இந்நிலையில், நேற்று சீன அதிபர் ஹூ ஜிண்டாவோவை ராபர்ட் கேட்ஸ் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பிற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக சீனா முதன் முதலாக நடத்திய உளவு விமானம் ஒன்றின் வெற்றிகரமான பரிசோதனை குறித்த பத்திரிகை செய்திகள் குறித்து ஜிண்டாவோவிடம் அவர் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அமெரிக்காவை மிரட்டும் விதத்தில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரிப்பதில் வடகொரியா ஈடுபடப் போகிறது. இன்னும் ஐந்தாண்டுகளில் அதுபோன்ற ஏவுகணைகளை அது தயாரித்து விடக் கூடும். சீன – அமெரிக்க ராணுவ பேச்சுவார்த்தையில் வடகொரியாவின் இந்த போக்கு குறித்தும் பேசினோம். ஆனால், அந்த ஏவுகணைகளில் பொருத்தக் கூடிய அளவிற்கு அணு ஆயுதங்களை அது தயாரித்து வருகிறதா என்பது பற்றி உறுதியாக சொல்ல முடியாது.

இருதரப்பு ராணுவ உறவில், எதிர்காலத்தில் ஏதாவது வேறுபாடு வந்தாலும் வழக்கமான அடிமட்ட மற்றும் நடுத்தர மட்ட பேச்சுவார்த்தைகள் தொடரும். ஆனால், உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் தாமதப்படலாம். ஜே-20 ரக விமானம் ஒன்றின் வெற்றிகரமான பரிசோதனை குறித்து சீன அதிபர் ஜிண்டாவோ என்னிடம் உறுதிப்படுத்தியுள்ளார். அதே நேரம், அது என்னுடைய வருகையை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டதல்ல என்றும் கூறினார். இவ்வாறு ராபர்ட் கேட்ஸ் தெரிவித்தார்.

கவலையில்லை: சீனாவின் உளவு விமானம் குறித்து பேசிய அமெரிக்க ராணுவ மையமான “பென்டகன்’ செய்தித் தொடர்பாளர் டேவிட் லபான்,”இந்தப் பரிசோதனை ஒன்றும் புதியதல்ல; எதிர்பார்க்காததுமல்ல. அதனால், அமெரிக்காவுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. சீனா தற்போது வைத்துள்ள நான்காவது தலைமுறை போர் விமானங்களில் பல பிரச்னைகள் உள்ளன’ என்றார்.

ரேடாரில் சிக்காத விமானம்

“ஸ்டெல்த்’ விமானம் எனப்படும் அதிநவீன போர் விமானத்தின் உலோகம், பெயின்ட் உள்ளிட்டவற்றிலிருந்து எவ்வித கதிர்வீச்சுகளும் வெளிப்படாது. இதனால் விமானம் ரேடாரில் சிக்காது. இதன்மூலம் எதிரிகளின் ஏவுகணை கூட இதைத் தாக்க முடியாது. இது ஒலியை விட 4 மடங்கு வேகமாகச் செல்லும் திறனுடையது. சீனா தற்போது பரிசோதித்துள்ள விமானம் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.

உளவு விமான பரிசோதனை: சீனா வெற்றி

ராபர்ட் கேட்ஸ் – ஹூ ஜிண்டாவோ சந்திப்பிற்கு சில மணிநேரங்கள் முன்பாக, சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள “செங்டு’ ராணுவ தளத்தில் இருந்து ஜே-20 ரக சிறிய விமானம் ஒன்று 15 நிமிடங்கள் வானில் பறந்தது. இதுகுறித்த செய்திகள் சீன இணையதளங்களில் வெளியானது. இதே விமானம், கடந்த வாரம், இதே விமான தளத்தில் ஓட்டப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து அமெரிக்காவில் இருந்து வெளியாகும் “வால்ஸ்ட்ரீட்’ பத்திரிகை நேற்று முழுப்பக்க அளவில் செய்திகளை வெளியிட்டிருந்தது. அது தனது செய்தியில்,”இது உளவு விமானம் போலத் தெரிகிறது. இவ்விமானத்தை “ரேடார்’ கருவிகளில் கண்டறிய முடியாது. இது சீனாவின் ஐந்தாவது தலைமுறை விமானம்’ என்று நிபுணர்கள் கூறியுள்ளதாக எழுதியிருந்தது. இப்படி ஒரு விமானம் சீனாவிடம் இருக்கிறது என்று அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் உள்ளிட்ட அமெரிக்க அதிகாரிகள் முன்பே குறிப்பிட்டிருந்தனர்.

அதேநேரம், கடந்த வாரம் ஜப்பானியப் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்த பசிபிக் பகுதிக்கான அமெரிக்க அதிகாரி அட்மிரல் ராபர்ட் வில்லார்ட், “சீனா, போர்க்கப்பலை தாக்கும் ஏவுகணையின் முதற்கட்ட பரிசோதனை முடிந்து விட்டது. தரைத்தளத்தில் இருந்து ஏவப்படும் இந்த ஏவுகணை, கடலில் உள்ள போர்க்கப்பலை அதிவேகமாக தாக்கும் திறன் உடையது. அமெரிக்காவின் மிகப் பெரிய போர்க்கப்பல்களைக் கூட தாக்கி அழிக்கக் கூடிய வல்லமை கொண்டது’ என்று தெரிவித்திருந்தார். இதன் மூலம் அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் எதிர்பார்த்ததை விட சீனா தனது ராணுவத்தை மின்னல் வேகத்தில் நவீனப்படுத்தி வருவது உறுதியாகியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago