அதென்னவோ தெரியவில்லை… நடிகர் சூர்யாவுக்கு கவுரவ வேடம் கொடுக்கிற எல்லாருமே, அவரை ஹீரோவாகவே காட்டுகிறார்கள். சமீபத்தில் வெளிவந்த ‘மன்மதன் அம்பு’ படத்தில் கூட சூர்யாவின் வேடம் சினிமா ஹீரோதான்!
இதே வேலையைதான் பாலாவும் செய்திருக்கிறார் தனது ‘அவன் இவன்’ படத்திலும். எப்படி பிதாமகன் படத்தில் சிம்ரன் நடிகையாகவே அந்த ஊருக்குள் வருவாரோ, அதை போலவே இந்த படத்திலும் நடிகராக அந்த ஊருக்கு வருவாராம் சூர்யா. அவருக்கும் விஷாலுக்கும் ஒரு வாக்கு வாதம் ஏற்படுகிறது. அதில் “நடிகன்னா உங்களுக்கெல்லாம் அவ்வளவு ஈசியா போச்சா? நடிச்சு பார்த்தால்தான்யா தெரியும்” என்று சூர்யா கொக்கரிக்க, விஷாலின் நரம்பெல்லாம் விடைத்துக் கொள்கிறது.
நவரசம் என்று சொல்லப்படும் ஒன்பது வகையான நடிப்பையும் மாற்றி மாற்றி நடித்துக் காட்டுவாராம் சூர்யாவிடம். இந்த காட்சியை ஓரே டேக்கில் விஷால் செய்து காட்ட, இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிப் போனாராம் பாலா. இந்த காட்சியை எடுக்கப் போவதற்கு முன்பாக விஷாலிடம், இதுதான் சீன். நான் அந்த நவரசத்தையும் உனக்கு சொல்லித்தரப் போவதில்லை. அதை நீயாகதான் செய்யணும் என்றாராம்.
அதை தொடர்ந்துதான் விஷாலின் இந்த தனி ஆவர்த்தனம். இந்த காட்சியில் சூர்யாவின் இமேஜ் கொஞ்சம் ‘டவுன்’தான் என்றாலும், பாலா சொன்னால் செய்துதானே ஆகணும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே