வி4 எண்டர்டெய்னர் நிறுவனம் வழங்கும் எம்.ஜி.ஆர்.- சிவாஜி அகாடமி விருது வழங்கும் விழா, சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
2010ம் ஆண்டு வெளியான திரைப்படத்தில நடித்த கலைஞர்கள் மற்றும், படங்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்தனர். விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன், படஅதிபர் கே.ஆர்.ஜி., இப்ராகிம் ராவுத்தர், கே.ராஜன், நடிகை தேவயானி ராஜகுமாரன், தயாரிப்பாளர் லிசி பிரியதர்ஷன் ஆகியோர் கலந்துகொண்டு விருதுகள் வழஙகி கெளரவித்தனர்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.விருது நடிகர் கார்த்திக் பெற்றார். நடிகர் பார்த்திபன், நடிகை சுகாசினி இருவரும் சேர்ந்து இந்த விருதை வழங்கினார்கள். அதே போல நடிகர் திலகம் சிவாஜி கணேசன் விருது, நடிகர் பிரபுவுக்கு வழங்கப்பட்டது. தந்தை பெரியார் விருது நடிகர் ராதாரவிக்கும், கலை வித்தகர் விருது, பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த படமாக ‘எந்திரன்’ தேர்வு செய்யப்பட்டது. ‘சன் பிக்சர்ஸ்’ செயல் அதிகாரி ஹன்சராஜ் சக்சேனா பெற்றுக்கொண்டார். மேலும் ‘சிங்கம்’ மற்றும் ‘நான் மகான் அல்ல’ படங்களை தயாரித்த ‘ஸ்டுடியோ ஸ்கிரீன்’ ஞானவேல்ராஜா, ‘அங்காடி தெரு’ படத்தை தயாரித்த ஐங்கரன் இன்டர் நேஷனல் நிர்வாக தயாரிப்பாளர் கே.விஜயகுமார், ‘மதராசபட்டினம்’ படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். எண்டர்டெய்மெண்ட் ரங்கராஜன், ‘பையா’ படத்தை தயாரித்த ‘திருப்பதி பிரதர்ஸ்’ சுபாஷ் சந்திரபோஸ், ‘மைனா’ படத்தை தயாரித்த ‘சாலமன் ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்கள் விருதுகளை பெற்றது. தயாரிப்பாளர்கள் ‘கற்றதுகளவு’ சேகர். ‘ஆட்டநாயகன்’ வி.சுவாமிநாதன், ‘வீரசேகரன்’ தூவார் சந்திரசேகரன் ஆகியோரும் விருதுகளை பெற்றனர்.
சிறந்த இயக்குநருக்கான விருது ‘அங்காடி தெரு’ வசந்தபாலன், ‘மதராசபட்டினம்’ விஜய், ‘மன்மதன் அம்பு’ கே.எஸ்.ரவிக்குமார், ‘பையா’ லிங்குசாமி, ‘நாடோடிகள்’ சமுத்திரக்கனி, ‘மைனா’ பிரபு சாலமன் ஆகியோர் பெற்றனர். சிறந்த அறிமுக இயக்குநர்களாக ‘களவானி’ சற்குணம், ‘பலே பாண்டியா’ சித்தார்த், ‘நானே என்னுள் இல்லை’ ஜெயசித்ரா ஆகியோர் பெற்றனர்.
சிறந்த கதையாசிரியராக ‘வம்சம்’ பாண்டிராஜ், சிறந்த திரைக்கதையாசிரியராக ‘சித்து ப்ளஸ் டூ’ கே. பாக்யராஜ், சிறந்த வசனகர்த்தவாக ‘ராவணன்’ சுகாசினி மணிரத்னம் ஆகியோர் பெற்றனர்.
சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ‘எந்திரன்’ படத்திற்காக ஏ.ஆர். ரகுமான் பெற்றார். இவருக்கு நகைச்சுவை நடிகர்கள் விவேக், வடிவேலு இருவரும் இணைந்து விருது வழங்கினார்கள். அப்போது அவரை ஒரு பாடலை பாட வேண்டும் என்று நடிகர் வடிவேலு வற்புறுத்தினார். அவரது வேண்டுகோளை ஏற்று ஏ.ஆர்.ரகுமான், எந்திரன் படத்தில் இடம் பெற்ற “இரும்பிலே ஒரு இதயம்…” என்கிற பாடலை பாடினார். ரசிகர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். அதே போல வடிவேலு இரண்டு பாடல்களை பாடி அசத்தினார்.
சிறந்த பாடகியாக எந்திரன் படத்தில் கிளிமஞ்சரோ பாடலை பாடிய சின்மயி விருது பெற்றார். அந்த பாடலை அவர் மேடையில் பாடினார். கந்தசாமி படத்தில் பாடிய ப்ரியா ஹிமேஷ், மைனா படத்தில் பாடிய செந்தில், இசையமைப்பாளர் பரத்வாஜ், ஆகியோரும் பாடகர்களுக்காக விருது பெற்றனர். பாடலாசிரியர் நா.முத்துக்குமார், கார்க்கி வைரமுத்து ஆகியோர் பாடலாசிரியருக்கான விருது பெற்றனர்
சிறந்த நடிகராக ‘தில்லாலங்கடி’ ஜெயம் ரவி, ‘அய்யனார்’ ஆதி, ‘துரோகி’ ஸ்ரீகாந்த், ‘மாஞ்சாவேலு’ அருண்விஜய், ‘கனிமொழி’ ஜெய், ‘கற்றது களவு’ கிருஷ்ணா ஆகியோர் பெற்றனர். சிறந்த நகைச்சுவை நடிகர்களாக விவேக், வடிவேலு, இருவரும் பெற்றனர். குணச்சித்திர நடிகைக்கான விருது சரண்யா பொண்வன்னண், சிறந்த வில்லன் நடிகராக ‘ஈசன்’ ஏ.எல்.அழகப்பன் பெற்றனர்.
அறிமுக நடிகர்கள் ’மகிழ்ச்சி’ கெளதமன், ‘மைனா’ விதார்த், ‘நானே என்னுள் இல்லை’ அமரேஷ் கணேஷ், ‘பாணா காத்தாடி’ அதர்வா, ‘காதல் சொல்ல வந்தேன்’ பாலாஜி, ‘சிந்து சமவெளி’ ஹரீஸ் கல்யாண், ‘தம்பி அர்ஜூனா’ பெரோஸ்கான், ‘வெளுத்துக்கட்டு’ கதிர், ‘நில் கவனி செல்லாதே’ ஆனந்த் சக்கரவர்த்தி, ‘அங்காடித் தெரு’ மகேஷ், ‘புழல்’ முரளி, அங்காடித் தெரு’ வில்லன் ஏ.வெங்கடேஷ், ‘கெளரவர்கள்’ வில்லன் மனோஜ்குமார், ‘பாஸ் எ பாஸ்கரன்’ படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்த அஸ்வின்ராஜ், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யா அண்ணனாக நடித்த பஞ்சு சுப்பு, மைனா படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்த தம்பி ராமய்யா, ஆர்த்தி கணேஷ் ஆகியோரும் பெற்றனர்
அறிமுக நடிகைகள் மைனா அமலாபால், மாஞ்சா வேலு தன்ஷிகா, வெளுத்துக்கட்டு அருந்ததி, போர் பிரேம் கல்யாணம், பி.ஆர்.ஓ. சங்கர்கணேஷ், துரைபாண்டி, பத்திரிகையாகர்கள் அனுபாமா சுப்பிரமணியம், இனியன் சம்பத், டிசைனர் மேக்ஸ், சிறந்த புகைப்பட கலைஞர் கிளாமர் சத்யா, புரொடக்ஷன் மேனஜர் அங்காடி தெரு பிரபாகரன், பிரிண்டர் ஆர்.ரவிராஜா ஆகியோரும் பெற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வி.4 எண்டர்டெய்னர் டைமண்ட் பாபு, சிங்காரவேலு, மவுனம்ரவி, ரியாஷ் அகமது ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சிகளை டிவி நடிகர் விஜய் ஆனந்த், நடிகை காயத்ரி, மக்கள் தொடர்பாளர் ஜி. பாலன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே