நடிக்க ஆரம்பித்து மிக குறுகிய காலத்திலேயே இரட்டை வேடத்தில் நடிப்பதென்பது அவ்வளவு சீக்கிரம் வாய்ப்பதில்லை யாருக்கும்! கார்த்தி அந்த விஷயத்தில் பம்பர் அடித்த பாக்யவான். சிறுத்தை படத்தில் போலீஸ் அதிகாரியாகவும், பிக்பாக்கெட் திருடனாகவும் கலக்கியிருக்கிறாராம். படம் பற்றி பக்கம் பக்கமாக பேசினாலும் ஒரு விஷயத்தில் நறுக்கென்று பதில் சொல்லி தப்பித்தார் சிறுத்தை. இந்த படத்தை பார்த்து திருடர்கள் திருந்துவாங்களா என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பிய போதுதான் பாய்ந்து வந்து வாயை பொத்தாத குறையாக பதில் சொன்னார்.
சார். இது முழுக்க முழுக்க ஜாலியான படம் சார். கருத்து சொல்ற வேலையெல்லாம் நாங்க வச்சுக்கல. அதனால் இப்படியெல்லாம் கேள்வி கேட்டு மாட்டி விட்றாதீங்க. இந்த படம் பார்த்தா இன்னும் கொஞ்சம் திருடதான் செய்வாங்க என்றார்.
தெலுங்கு படத்தின் ரீமேக்தான் இந்த சிறுத்தை என்றாலும் ஒரிஜனலுக்கும் இதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்களை செஞ்சுருக்கோம். மறுபடியும் இதை தெலுங்குல ரிலீஸ் பண்ணப் போறோம்னா பாருங்க. எவ்வளவு மாத்தியிருப்போம்னு? என்ற கார்த்திக்கு பெருத்த சந்தோஷம் இதுதான். இங்கு தமிழ்ல எப்படி இவருக்கு ரசிகர்கள் இருக்காங்களோ, அதே அளவுக்கு தெலுங்குலயும் இருக்காங்களாம். என்னை பார்க்க சில ரசிகர்கள் வந்திருந்தாங்க. சார். நாங்க உங்க ஃபேன்ஸ்னு சொன்னாங்க. திடீர்னு சட்டைய கழற்றி காட்டினாங்க. நெஞ்சு முழுக்க என்னோட பருத்தி வீரன் கெட்டப்பை பச்சை குத்தி வச்சுருந்தாங்க. நான் ஆடிப்போயிட்டேன். அவங்களுக்கு என்ன கைமாறு செய்யப் போறேன்னுதான் தெரியல என்றார் நிஜமான அக்கறையுடன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே