தமிழில் படமே இல்லையே என்றால், “அதையேதான் நானும் கேட்கிறேன். ‘பருத்தி வீரன்’ படத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தினேன். அதன் பிறகு வந்த படங்களில் கமர்ஷியல் ஹீரோயினாகவும் ஜெயித்து காட்டினேன். அப்படி இருந்தும் தமிழில் வாய்ப்பு இல்லாதது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனாலும் எனக்கான ஒரு நாள் வரும். நானும் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருவேன்’’ என்கிறார் பிரியாமணி.
தெலுங்கில் படு கிளாமராக நடிக்கிறீர்களே?
யார்தான் கிளாமராக நடிக்கவில்லை. இன்றைக்கு நம்பர் ஒன் நடிகை என்று குறிப்பிடப்படும் எல்லோரும் என்னைவிட கிளாமராக நடிக்கிறார்கள். அவர்களை பார்த்து யாரும் இந்த கேள்வியை கேட்பதில்லை. என்னிடம் மட்டும் கேட்கிறார்கள். கிளாமர் எந்த தனிப்பட்ட நடிகைக்கும் சொந்தமில்லை. யாருக்கு அழகு இருக்கிறதோ அவர்கள் கிளாமாராக நடித்து விட்டுப் போகிறார்கள்.
அடிக்கடி காதல் கிசுகிசுக்களில் இடம் பிடிக்கிறீர்களே?
நான் வெளிப்படையானவள். மனதில் உள்ளதை அப்படியே பேசி விடுவேன். அதுவே சில நேரங்களில் மைனசாக போய்விடுகிறது. நான் வெளிப்படையாக சிலரிடம் பழகுவது காதலாக பார்க்கப்படுகிறது. அதற்கு நான் என்ன செய்ய முடியும்? உடனே காதலிக்கிறார், காதலன் கார் பரிசு கொடுத்திருக்கிறார் என்று கிளப்பி விடுகிறார்கள். அதுவும் ஒரு வகையில் விளம்பரம்தான் என்று நானும் பேசாமல் இருந்து விடுகிறேன்.
மீண்டும் விருது வாங்க ஆசையில்லையா?
விருதுக்கு நான் என்றுமே ஆசைப்பட்டதில்லை. நான் இயக்குனர்கள் சொல்கிறபடி நடித்துக் கொடுக்கிறேன். சில நேரங்களில் அது சிறப்பாக அமைந்து விருது கிடைக்கிறது. அந்த விருதே மைனசாகிவிடுவதும் என் கேரியரில் நடந்திருக்கிறது. தமிழ் நாட்டில் இன்னும் ‘பருத்தி வீரன்’ இமேஜை மாற்றமுடியவில்லையே.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே