நடிகர் விஜயகுமாரும், அவரது மகள் வனிதாவும் விமான நிலைய வாசலில் தகராறு செய்து கைகலப்பில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை விமான நிலையத்துக்கு வந்திருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதாவும், அவரது முதல் கணவருக்கும் பிறந்த சிறுவன் விஜய் ஸ்ரீஹரியை உரிமை கொண்டாடுவது தொடர்பாக கடந்த சில வாரங்களாகவே விஜயகுமார் – வனிதா இடையே மோதல் இருந்து வந்தது.
விஜயகுமாரின் பங்களா வீட்டில் ஆரம்பித்த பிரச்னை போலீஸ் நிலையம், கோர்ட் என வளர்ந்து வருகிறது. வனிதாவின் இரண்டாவது கணவர் ஆனந்தராஜ் தன்னை தாக்கியதாக விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில், அவரை போலீசார் கைது செய்ததைத் தொடர்ந்துதான் இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது.
தந்தை விஜயகுமாரின் வீட்டில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாகவும், அவரது வீடு ஒரு பாவப்பட்ட வீடு என்றும், தாய் மஞ்சுளாவை போதைக்கு அடிமையாக்கி விட்டார்கள் என்றும் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்த வனிதா, இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
வெளியே சொன்னால் வெட்கக் கேடு என்றும் கூறினார். அதேபோல சொத்துக்காக விஜயகுமார் எதுவும் செய்வார் என்றும் வனிதா ஏற்கனவே கூறியிருந்தார். சினிமா பிரபலங்கள் மத்தியில் நாட்டாமை போல செயல்பட்டு வந்த விஜயகுமாரின் வீட்டில் நடந்து வரும் பிரச்னையில் விஜயகுமாருக்கு நெருக்கமான நடிகர் – நடிகைகள் சிலர் தலையிட்டதாகவும், போலீசாரை வைத்து மிரட்டியதாகவும் வனிதா குற்றம் சாட்டினார்.
இதற்கிடையில் மகனை ஒப்படைப்பது தொடர்பான வழக்கில், சட்டப்படி மகன் ஸ்ரீஹரி, தாய் வனிதாவிடம் இருக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், நேற்று இரவு 10 மணியளவில் நடிகர் விஜயகுமார் தனது பேரன் ஸ்ரீஹரியுடன் ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அவர் வருகையை அறிந்த வனிதா, தனது மகனை அழைத்து செல்வதற்காக, இரண்டாவது கணவர் ஆனந்தராஜூடன் காரில் வந்து விமான நிலையத்தில் காத்திருந்தார்.
விமானத்தில் இருந்து இறங்கி விஜயகுமார், ஸ்ரீஹரியுடன் வெளியே வந்தார். அப்போது வனிதா, மகனை அழைத்துச் செல்ல வந்திருப்பதாகவும், கோர்ட் உத்தரவுடி அவனை தன்னுடன் அனுப்பி வைக்கும்படியும் விஜயகுமாரிடம் கேட்டார். ஆனால் விஜயகுமார் பேரனை ஒப்படைக்க மறுத்து விட்டார்.
பேரனை கட்டியணைத்துக் கொண்ட விஜயகுமார், வனிதா கையெடுத்து கும்பிட்டு மன்றாடியும் ஒப்படைக்க மறுத்தார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் சிறுவன் ஸ்ரீஹரியின் கையை பிடித்து வனிதா இழுத்தார். விஜயகுமாரோ, சிறுவனை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். மோதல் கைகலப்பாக மாறியதை பார்த்த சிறுவன் ஸ்ரீஹரி கதறி அழுதான். மகன் அழுவதை பார்த்த வனிதாவும் கண்ணீர் வடித்தார்.
விஜயகுமாரிடம் இருந்து மகனை எப்படியாவது மீட்டுக் விட வேண்டும் என போராடினார். நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்தை விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் சிறுவனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்
. இதையடுத்து விஜயகுமாரும், வனிதாவும் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். போலீசார் சமாதானம் பேச முயன்றனர். ஆனால் போலீசாரின் சமாதானத்தை ஏற்காத வனிதா, என்னிடம் கோர்ட் ஆர்டர் இருக்கிறது. சட்டப்படி அவனை என்னுடன் அனுப்பி வையுங்கள் என போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்ததுடன், யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தனர்.
இந்த பரபரப்பு சம்பவம் குறித்து வனிதா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நான் பெற்ற மகனை என்னுடன் அனுப்பி வைக்க இப்படி மறுக்கிறார்களே. சட்டப்படி குழந்தை என்னிடம் இருக்க வேண்டும் என்று கோர்ட் ஆர்டர் இருக்கிறது. அதனையும் மீறி மகன் ஸ்ரீஹரியை அழைத்து செல்கிறார்கள்.
எனக்கு நியாயம் வேண்டும். விஜயகுமாருக்கு என் மகனை அழைத்து செல்ல என்ன ரைட்ஸ் இருக்கிறது. அவரிடம் சிறுவன் இருக்கலாம் என்ற கோர்ட் ஆர்டர் இருந்தால் காட்டச் சொல்லுங்கள். அவர் என் மகனை கடத்தி செல்கிறார், என்று கண்ணீர் மல்க கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே