கோலிவுட்டில் தற்போது பறப்பது சூர்யா-கார்த்தியின் சகோதரர்கள் கொடிதான். இவர்களின் படம் என்றால் வினியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் வரிந்துகட்டி நிற்கிறார்களாம் வாங்க. சூர்யாவின் ‘சிங்கம்’ வசூலில் செய்த சாதனையை கார்த்தியின் ‘சிறுத்தை’ விஞ்சும் என்ற பேச்சு கோடம்பாக்கத்தில் கிசுகிசுப்பதால் படத்திற்கு இப்போதே ஏகப்பட்ட வரவேற்பு ஏற்பட்டிருக்கிறது.
இதை உறுதிபடுத்தியிருக்கிறது அண்மையில் நடைபெற்ற ‘சிறுத்தை’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா. விழாவில் திரையிடப்பட்ட இரண்டு பாடல்களும், டிரைலரும் வந்திருந்த கார்த்தியின் ரசிகர்களை மட்டுமல்லாது வினியோகஸ்தர்களையும் குஷிப்படுத்தியிருக்கிறது.
ஒரு பக்கம் சந்தானத்துடன் சேர்ந்து காமெடியில் கலக்கியிருக்கும் கார்த்தி, மறுபக்கம் காரசாரமான போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருக்கிறார். எப்போதும் ஜாலியான கேரக்டரில் நடித்த கார்த்தி எப்படி கம்பீரமான போலீஸாக நடித்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு விழாவிற்கு வந்திருந்த அனைவருடைய முகத்திலும் தெரிய “கார்த்தி தன்னோட செல்போன்ல இந்த படத்தின் ஒரிஜினல் வெர்ஷன்ல நடிச்ச ரவி தேஜா படத்தை வச்சிருப்பாரு. இப்படி ஒரு டெடிக்கேஷனை நான் யாருகிட்டயும் பார்த்ததில்லை. அப்போதே எனக்கு தெரிந்தது இந்த கேரக்டர்ல கார்த்தி கலக்கியிருப்பாருன்னு, அதை டிரைலர் உறுதிபடுத்தியிருக்கு” என்று பேசி தெளிவுபடுத்தினார் இயக்குநர் லிங்குசாமி.
இந்த படத்தின் கடைசி பாடலுக்காக ரொம்பவும் மெனக்கெட்டாராம் இயக்குநர் சிவா. “இன்னும்..இன்னும்..”என்று சொல்லி 25 பாடல்களை உருவாக்கி அதில் ஒன்றை தேர்வு செய்தாராம். வேறு எந்த படத்திற்கும் ஒரு பாடலுக்காக இத்தனை பாடல்கள் போட்டதில்லையாம் வித்தியாசாகர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே