நடிகர் ரஜினியின் வீரம் சினிமாவில்தான். அரசியல் என்றால் அவருக்கு பயம், என்றாரா சுப்பிரமணிய சாமி.
எப்போது யாரை வாருவார், யாரைத் தூற்றுவார், யாருடன் சேருவார் என்ற கணிக்க முடியாதவர் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி. ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறிவந்தார். இப்போது தலைகீழாக பல்டியடித்து ரஜினியைத் தாக்க ஆரம்பித்துள்ளார்.
வீரகாளியம்மன் கோவிலில் சுப்பிரமணிய சாமி:
இன்று காலை மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள கீழவளவு அருகே உள்ள அடங்கான் கண்மாய்பட்டி வீரகாளியம்மன் கோவிலுக்கு சுப்பிரமணிய சாமி வந்தார். அவரை ஊராட்சி மன்ற தலைவர் தர்மலிங்கம் வரவேற்றார். கோவிலில் அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அங்கு நிருபர்களிடம் பேசிய சாமி, நடைபெறவுள்ள சட்டபேரவை தேர்தலில் திமுக- காங்கிரஸ் கட்சி அல்லாத மாற்று கட்சிகளுடன் ஜனதா கட்சி கூட்டணி அமைக்கும். அதிமுக கூட்டணியில் சேர்வது குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என நான் தான் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டும் என முதலில் கோரிக்கை வைத்தது ஜனதா கட்சி தான். ஆனால் தேவர் பெயரை சூட்ட காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ரஜினி சினிமாவில் மட்டும் தான் வீரம் காட்டுவார்:
எனக்கு பதவி ஆசையில்லை. கட்சி நிர்வாகிகள் வற்புறுத்தினால் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன். ரஜினிகாந்த் சினிமாவில் மட்டும் தான் வீரத்தைக் காட்டுவார். அரசியல் என்றால் அவருக்கு பயம் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே