காவலன் படம் தொடர்பான வழக்குகளில் இருந்து மீண்டு வந்திருக்கிறார் நடிகர் விஜய். காலனுக்கு தடை கோரி கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறவனம் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தது.
அதில், `பாடி கார்ட் என்ற மலையாள படத்தை தயாரிப்பதற்காக நிதி கேட்டு ஜானி சகரிகா சினிமா ஸ்கொயர் நிறுவனம் எங்களை அணுகியது.
அதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு ரூ.3.90 கோடி கடன் வழங்கினோம். அப்போது `பாடி கார்டு படத்தின் பிறமொழி பதிப்புரிமையை எங்களுக்கு தரவேண்டும் என்று கேட்டோம். அதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டது.
தற்போது தயாரிக்கப்பட்டுள்ள `காவலன் என்ற சினிமா, `பாடி கார்ட் படத்தின் கதையை கொண்டதாகும். `பாடி கார்ட் கதையை மற்ற மொழிகளில் தயாரிக்கும் உரிமையை கோகுலம் நிறுவனம்தான் பெற்றுள்ள நிலையில், அந்த கதையை தழுவிய `காவலன் படத்தை ரோமேஷ்பாபு தயாரித்துள்ளார்.
மேலும் நாங்கள் கொடுத்த தொகையில் மீதி ரூ.1.88 கோடியை ஜானி சகரிகா நிறுவனம் தரவில்லை. எனவே அந்தத் தொகையை திருப்பித்தர உத்தரவிட வேண்டும். எங்களிடம் பதிப்புரிமை உள்ளதால் மற்றவர்கள் அந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும், என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி ராமசுப்பிரமணியன் விசாரித்தார்.
அதன் பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில், `காவலன் படம் வெளியிடப்பட்டு விட்டால், பாக்கி தொகையை திருப்பி செலுத்த வேண்டிய பொறுப்பு, ஜானி சகரிகா நிறுவனத்துக்கு இருக்காது. அதனால் கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்துக்கு பாதிப்பு ஏற்படும்.
அதே நேரத்தில் ரூ.30 கோடி செலவழித்து `காவலன் படம் தயாரிக்கப்பட்டு இருப்பதால் குறித்த நேரத்தில் படத்தை வெளியிடாவிட்டால் தனக்கு பாதிப்பு ஏற்படும் என்று ரோமேஷ்பாபு தரப்பில் கூறப்பட்டு உள்ளது. எனவே பாக்கித் தொகையான ரூ.1.88 கோடியை திருப்பித் தருவதற்கான உத்தரவாதத்தை தரவேண்டும்.
அந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் `காவலன் படத்தை வெளியிடலாம், என்று கூறியுள்ளார். பொதுவாக ஒரு படம் ரீலிசுக்கு தயாராகியும் பெட்டிக்குள் முடங்கிக் கிடப்பது வேதனையிலும் வேதனையான விஷயம்.
காவலன் படத்திற்கு ஆரம்பம் முதலே ஏராளமான எதிர்ப்புகள், வழக்குகள், பஞ்சாயத்துக்கள் நடந்து வருகின்றன. படத்தை ரீலிஸ் செய்ய விடாமல் தடுப்பதாக குற்றச்சாட்டுக்களும் எழுந்தன.
அரசியல் பிரவேசத்துக்கு நடிகர் விஜய் தயாராகி வருவதாலும், அவர் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வில் சேரப்போவதாக வெளியான தகவல்களாலும் காவலனுக்கு கூடுதல் குடைச்சல் கொடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், ஒருவழியாக பஞ்சாயத்துக்களில் இருந்து மீண்டு வந்திருக்கும் காவலனை பொங்கல் தினத்தில் ரீலிஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே