சிம்பு…விஷால்…படப்பிடிப்பு பிரச்னை…

பாலாவின் அவன் இவன் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் விஷால் படுகாயம் அடைந்தார்.

டூப் இல்லாமல் சண்டைக் காட்சியில் நடித்தபோது தவறி விழுந்ததில் இந்த காயம் ஏற்பட்டது.

வத்தலகுண்டு அருகே அவன் இவன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

படத்தில் ஆர்யா – விஷாலுக்கு இணையாக, ஆனால் வில்லன் பாத்திரத்தில் நடிக்கும் ஆர்.கே.வுடன் விஷால் மோதுவது போன்று சண்டைக்காட்சி எடுத்தனர். அப்போது உயரத்தில் இருந்து தவறி விஷால் கீழே விழுந்து விட்டார்.

அவருக்கு தோள் பட்டையில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது. வலியால் துடித்தார். தோள்பட்டை இறங்கி இருந்தது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகிறார்கள்.

வானம் படப்பிடிப்பில் சிம்பு காயம்…

சென்னையில் நடக்கும் வானம் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சிம்பு காயமடைந்தார். ஒரு காட்சியில், மோட்டார் சைக்கிளில் சிம்பு வேகமாக செல்வது போன்ற காட்சியை திருவல்லிக்கேணி பகுதியில் படமாக்கினர். அப்போது திடீரென்று நிலை தடுமாறி பைக்கோடு கீழே விழுந்து காயமடைந்தார். உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

இதுபற்றி சிம்பு கூறுகையில், “நான் தவறி விழுந்தபோது பின்னால் வந்த கார் மோதி இருக்கும் அதிர்ஷ்டவசமாக தப்பினேன். ஆஸ்பத்திரிக்கு உடனடியாக அழைத்து போய் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். சில நாட்கள் ஓய்வு எடுக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர்” என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago