பொதுவாக நடிகர்கள் தங்களுடைய படத்தில் பஞ்ச் டயலாக் பேசுவார்கள். ஆனால் இப்போது நடிகைகளும் கூட பஞ்ச் டயலாக் வைத்து பேச ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் புன்னகை அரசி சினேகா தன்னுடைய “பவானி” படத்தில் “பஞ்ச்” டயலாக் பேசியுள்ளார்.
இதுவரை குடும்பபாங்கான கேரக்டரில் நடித்து வந்த சினேகா, “பவானி” படத்தின் மூலம் முதன்முறையாக அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஏற்கனவே விஜயசாந்தி நடித்த “வைஜேந்தி ஐ.பி.எஸ்” படத்தின் தழுவல்தான் இந்த “பவானி”. படத்தில் பவானி ஐ.பி.எஸ்., ஆக வரும் சினேகா, போலீஸ் வேடத்தில் அசத்தலாக நடித்துள்ளார். குறிப்பாக சில சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். இதுதவிர படத்தில் பல இடங்களில் பஞ்ச் டயலாக்கும் பேசியுள்ளார். படத்தில் ஒரு காட்சியில் “ஆம்பளையா இருந்தாலும், பொம்பளையா இருந்தாலும் போலீஸ், போலீஸ் தாண்டா” என்று அதிரடி பஞ்ச் விட்டுள்ளார்.
பவானி படம் குறித்து சினேகா கூறுகையில், “பவானி” படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, ஒவ்வொரு காட்சியிலும், குறிப்பாக சண்டைக்காட்சிகளில் நடித்தபோது த்ரில்லிங்காக இருந்தது என்றார். மேலும் பவானி படத்தின் மூலம் ரசிகர்கள் என்னை வித்தியாசமாக பார்ப்பார்கள் என்றும் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே