என் வாழ்நாளில் மறக்க முடியாத ஹீரோ ரஜினிதான். அவருடன் இணைந்து நடித்தது எனது வாழ்நாள் பெருமை, என்றார் ஐஸ்வர்யா ராய்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஐஸ்வர்யா ராய் வந்தார். அவரைப் பார்த்ததும் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். சேர்ந்து போட்டோ எடுக்கவும், ஆட்டோகிராப் வாங்கவும் போட்டி் போட்டனர்.
ரசிகர்களின் அந்த அன்பில் நெகிழ்ந்த ஐஸ்வர்யா ராய், நீண்ட நேரம் அவர்களுடன் செலவழித்தார். ஆட்டோகிராப் போட்டுத் தந்தார்.
நிருபர்களுக்கும் பேட்டியளித்தார். கடந்த ஆண்டு அவருக்கு அமைந்த ஒரே ஹிட் எந்திரன்தான். அதுபற்றி கேட்டபோது, “ரஜினியுடன் ‘எந்திரன்’ படத்தில் நடித்த வாய்ப்பை என் வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன். இதற்கு முன்பும் சில முறை அவருடன் இணைந்து நடிக்க சந்தர்ப்பம் வந்து, நடக்காமல் போனது. அது இப்படியொரு பெருமை எனக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் போலிருக்கிறது.
தமிழக ரசிகர்கள் என் மீது பேரன்பு காட்டுகின்றனர். இதை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.
ரஜினி ஒரு நிஜமான சூப்பர் ஸ்டார். ஒரு சர்வதேச கலைஞர். அவரை மொழி, நாடு கடந்து எல்லோரும் விரும்புகின்றனர். அவரைப் போன்ற திறமையான நடிகரை நான் பார்த்ததில்லை. மிகுந்த அர்ப்பணிப்போடு தனது பணியைச் செய்பவர் அவர். படப்பிடிப்பு அரங்கில் அவர் நடவடிக்கைகளை பார்த்து வியந்து இருக்கிறேன். மிகப்பெரிய நடிகர் என்பதை அவர் எப்போதும் காட்டிக் கொண்டதே இல்லை. எளிமையாக பழகுவார்.
ரஜினியோடு நடித்தபோது எனக்குக் கிடைத்த அனுபவங்கள் மறக்க முடியாதவை. மிகவும் பயனுள்ளவை. நடிப்பில் என்னை மெருகுபடுத்திக் கொள்ளவும், செய்யும் வேலையை நேசிக்கவும் அவரிடம் கற்றுக் கொண்டேன். இதனை என் ஆயுளில் மறக்கமாட்டேன். இப்படி ஒரு வாய்ப்பை எனக்குத் தந்த சூப்பர்ஸ்டாருக்கும் ஷங்கருக்கும், என்னை இந்த அளவு மரியாதையோடு நடத்தும் தமிழ் மக்களுக்கும் நான் எப்படி நன்றி கூறுவேன்!”, என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே