திரையுலகின் ஓர் திருப்புமுனையாக தமிழகம் மட்டுமல்லாது, உலகமே பாராட்டும் வகையில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள 3னு படம் தான் “சுட்டிச் சாத்தான்”.
இத்திரைப்படமானது, “மை டியர் குட்டிச் சாத்தான்’ -இன் மறுவடிவம் பெற்று, நேற்றைய மற்றும் நாளைய தொழில் நுட்பங்கங்களின் ஓர் சிறந்த கலவையாக உள்ளது.
இந்த சுட்டிச்சாத்தான், வெறும் தொழில் நுட்பங்கள் மட்டுமல்லாது, திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்த நடிகர்களான, குணச்சித்திர நடிகர் பிரகாஷ்ராஜ், நகைச்சுவை நடிகர் சந்தானம் மற்றும் பலரின் துணையோடு இந்த ஹாலிடேயை கலக்க உள்ளது.
சுட்டிச்சாத்தானில் 40 வகையான மாயாஜாலக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 2½ நிமிடத்திற்கு ஒரு மாயாஜாலக் காட்சி என்று ரசிகர்களை பரவசப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த படம், சிறுவர்களை மட்டுமல்லாது பெரியவர்களையும் கவர்ந்து இழுக்கும் என்றும், திரையரங்குகளை நிறைக்கும் சாதனைப் படமாக வெளிவரும் என்று நம்பப்படுகிறது.
இந்தியாவின் முதல் டிஜிட்டல் 3னு முறையில் சமீபத்தில் வெளிவந்த “அவதார்” போன்ற படங்களை பெரிய நகரங்களில் மட்டுமே பார்க்கும் வசதி இருந்தது.
ஆனால், இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்சும், நவோதேயாவும் இணைந்து எல்லா நகரங்களிலும், எல்லா கிராமங்களிலும், ஒரே நாளில், ஒரே நேரத்தில் தமிழக மக்கள் அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் உருவாக்கியுள்ளனர்.
இத்திரைப்படம் டிசம்பர் 24ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. எனவே, இத்திரைப்படம் ஹாலிடேவில் ஒரு ஜாலிடேவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே