ஸ்பெக்ட்ரம் விவகராத்தில் ஜேபிசி விசாரணை மட்டுமே எங்களுக்குத் தேவை. இந்தக் கோரிக்கையை நாடாளுமன்றத்தில் அரசு ஏற்க மறுத்தால், நாங்கள் அடுத்து தெருவில் இறங்கிப் போராடுவோம் என பாஜக அறிவித்துள்ளது.
ஜேபிசி விசாரணைக்கு உத்தரவிடும் பேச்சுக்கே இடமில்லை. ஊழல் குறித்து பேச பாஜகவுக்கு அருகதை இல்லை. அதுகுறித்து எங்களுக்குப் பாடம் நடத்த அவர்கள் யார் என்று நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காட்டமாக கூறியுள்ளார்.
இதனால் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அரசு ஏற்கும் யோசனையிலேயே இல்லை என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து அடுத்து தெருவில் இறங்கிப் போராடப் போவதாக பாஜக கூறியுள்ளது.
இதுகுறித்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், ஊழல்வாதிகளுக்கு எதிராக அடுத்து நாங்கள் தெருவில் இறங்கிப் போராடப் போகிறோம். விரைவில் இப்போராட்டத்தை நாங்கள் அறிவிப்போம் என்றார் அவர்.
இதன் மூலம் அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான மோதல் போக்கு மேலும் முற்றும் என்று தெரிகிறது. ஒரு வேளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராடடம் நடத்துமானால் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு இடைத் தேர்தலை அறிவிக்கும் அதிரடி முடிவுக்கு காங்கிரஸ் போகலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே