கொட்டுகிற மழை… என்றாலும் குற்றாலம், தென்காசி பகுதிகளில் விடாமல் படப்பிடிப்பு நடத்தி வந்தார் ஹரி. தனுஷ் நடிக்கும் ‘வேங்கை’ படத்தை திட்டமிட்டபடி நடத்திவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் ஹரி, அடிக்கிற மழையிலும் நடித்தே ஆக வேண்டும் என்று தனுஷை பிசைந்து எடுத்துவிட்டாராம்.
சொல்லவும் முடியாமல் சொல்லாமல் இருக்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்த தனுஷ், நேற்று ஹரியிடம் சொல்லாமலே சென்னைக்கு ஓடி வந்துவிட்டார். ஹீரோவை காணாமல் தடுமாறிய ஹரி, எங்கய்யா அவரு? என்று கேட்க, “சார் அவரு நேற்றே எஸ்கேப்” என்றார்களாம் யூனிட்டில்.
பொதுவாகவே தன் படங்களில் நடிக்கும் ஹீரோக்களை கொத்தடிமை போல நடத்துவது ஹரிக்கு பிடிக்கும். கேமிராவுக்கு முன் நிற்கிற போது மட்டும் மட்டுமல்ல. கேமிராவுக்கு பின்னாலும் அவர்கள் செய்யும் சேட்டைகளை கவனிப்பாராம். “இது நல்லதில்லை. உடம்புக்கு ஆகாது. ஸ்கீரின்ல அப்படியே காட்டி கொடுத்திடும்” என்றெல்லாம் ஹரி அட்வைஸ் செய்வதால், பள்ளிக்கூடத்து பசங்க மாதிரியே தலையை தலையை ஆட்டுவார்களாம் சில ஹீரோக்கள். அப்படியெல்லாம் ஆட்டிக் கொண்டிருக்க தனுஷ் என்ன சாதாரண ஹீரோவா? நடப்பது நடக்கட்டும்… என்று சொல்லாமல் வெளியேறிவிட்டார். தனது ஹெட் மாஸ்டர் ஸ்கேலை மடக்கி வைத்தாலொழிய வேங்கையை தொடர முடியாது என்ற முடிவுக்கு வந்திருக்கும் ஹரி, “சரி… சரி… வாங்க. ரிலாக்சா நடிக்கலாம்” என்று து£து விட ஆரம்பித்திருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே