‘பாய்ஸ்’ படத்தில் அறிமுகமான சித்தார்த், இன்று டோலிவுட்டின் முன்னனி ஹீரோ. இயக்குனர் ஷங்கர் மீது சித்தார்த்துக்கு அப்படி என்ன கோபமோ, …
….“பாய்ஸ் படத்தில் அறிமுகமானதை நான் பெருமையாக நினைக்கவில்லை’’ என்று முன்பு அதிரடி கிளப்பினார். இப்போது கலைஞானி கமலை தனது படவிழாவுக்கு வரவேண்டாம் என்று சொல்லி அடுத்த அதிரடிக்குத் திரிகிள்ளி இருக்கிறார். கலைஞானியின் செல்ல மகள் ஸ்ருதி ஹாசன், டோலிவுட்டில் அறிமுகமாகும் முதல் படமான ‘அனகான ஒக தீருடு’ படத்தின் ஹீரோ சித்தார்த். ’மகதீரா’ தந்த பாதிப்பில் மீண்டும் ஒரு ஹிஸ்டாரிக்கல் கம் மித்தலாஜிக்கல் ஃபேன்டசி படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், சித்தார்த் – ஸ்ருதியின் கெமிஸ்ட்ரி பற்றி எழுதி எழுதி முச்சிறைத்துக் கிடக்கிறது மீடியா. டிஸ்னி இந்தியா தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் இசைவெளியிடு இரண்டு தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்தது. இந்த விழாவுக்கு ஸ்ருதிஹாசன் ஃபேண்டி பீக் என்று ஆந்திர ரசிகர்கள் ஜோள் வடிக்கிற மாதிரி கவர்ச்சி உடையில் வந்தார்.
அது ஒருபுறம் இருக்க, இந்த விழாவுக்கு கமல் சார் வரவேண்டாம் என்று தயாரிப்பாளர்களுக்கும், ஸ்ருதிக்கும் கண்டிஷனே போட்டு விட்டாராம் சித்தார்த். மகள் முதன் முதலாக அறிமுகமாகும் ஒரு படத்துக்கு இந்திய சினிமாவின் முக்கிய ஐகானாக இருக்கும் கமல் வரக்கூடாது என்றால் யார்தான் அதிர்ச்சி அடைய மாட்டார்கள்?
ஏன் சித்தார்த், கமலைத் தவிர்த்தார் என்று கேட்டதற்கு சித்தார்த் சொன்ன பதில், “ இந்த விழாவுக்கு கமல் சாரும், மோகன் பாபு சாரும் வந்தால் கவனம் முழுவதும் அவர்கள் மீதுதான் திரும்பும். இந்தப்படத்தின் வெற்றிக்கு அது எதிர்விளைவுகளையே உண்டு பண்ணும்” என்று சொன்னாராம். சித்தார்த் சொல்வது சரிதான் என்று ஏற்றுக் கொண்டதால் தயாரிப்பு நிறுவனம் கமலை அழைக்கவில்லையாம். கமல் சரி …மோகன்பாபு இடையில் எங்கிருந்து வந்தார். மோகன் பாபுவின் மகள் லட்சுமி பிரசன்னா இதில் வில்லியாக ஒரு பவர்ஃபுல் கதாபாத்திரத்தில் அறிமுகமாகியிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே