இலங்கையில் இனி தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு ராஜபக்சே அரசு தடை விதித்துள்ளது. இதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை அரசின் இந்த முடிவால் ஈழத் தமிழர்களின் மனம் மேலும் வேதனை அடையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இனி தமிழில் தேசிய கீதம் பாடக் கூடாது என்றும், சிங்களத்தில் மட்டும் தான் பாட வேண்டும் என்று அந்நாட்டு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த முடிவு எடுக்கப்பட்டபோது அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் அமைச்சர்கள் வாய் மூடி மெளனமாக இருந்து விட்டனர்.
இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்கள் என்பதால் அங்கு சிங்களம் தவிர தமிழும் ஆட்சி மொழியாக உள்ளது. இதனால் தமிழர் பகுதிகளில் தமிழ் தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கம். சிங்களப் பகுதிகளில் சிங்கள தேசிய கீதம் இசைக்கப்படும்.
பழமை வாய்ந்த இந்த பழக்கத்தை தற்போது ராஜபக்சே அரசு மாற்றுகிறது. இனி அனைத்து பகுதிகளிலும் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படும் என்று கூறியுள்ளார் ராஜபக்சே. லண்டனில் தமிழர்களால் துரத்தப்பட்டு இலங்கைக்கு தப்பி ஓடி வந்த நிலையில், அந்த ஆத்திரத்தில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் சிங்களர்களும், தமிழர்களும் வசித்து வருகின்றனர். அதனால் அந்நாட்டு தேசிய கீதம் இந்நாள் வரை சிஙகளத்திலும், தமிழுலும் பாடப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது ராஜபக்சே அரசு அந்த வழக்கத்திற்கு தடை விதித்து இனி இலங்கை தேசிய கீதத்தை சிங்களத்தில் மட்டுமே பாட வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதற்கான தீர்மானமும் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டதாகவும் ஏடுகள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல் உண்மை என்றால் ராஜபக்சே அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே புண்பட்டிருக்கும் தமிழர்களை இந்த செய்தி மேலும் புண்படுத்தும். இலங்கையின் அரசின் இந்த நடவடிக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே