ஹீரோவுடன் நெருக்கமாக நடித்த காட்சியை நீண்ட நேரம் காட்டுவதா? என் அம்மா பார்த்தால் என்னாகறது… என்று இயக்குனரிடம் பாய்ந்தார் இந்தி நடிகை ரெய்மா சென். வினய் சுக்லா இயக்கியுள்ள இந்தி படம் ‘மிர்ச்’. இதில் அருணோதய் சிங், ரெய்மா சென், கொன்கனா சென் நடித்துள்ளனர். இப்படத்தில் அருணோதய், ரெய்மா நடித்த நெருக்கமான காட்சியை மீண்டும் படமாக்க வேண்டும் என்று ரெய்மாவிடம் இயக்குனர் கூறினார். எதற்காக மீண்டும் எடுக்க வேண்டும் என்று கேட்டார் ரெய்மா.
கிளைமாக்சுக்கு இது முக்கியமான காட்சி. கொன்கனா சென் நடித்த காட்சியையும் மீண்டும் படமாக்கி இருக்கிறோம் என்றார். இதையடுத்து ரீ&ஷூட்டிங்கில் கலந்துகொண்டார் ரெய்மா. பின்னர் காட்சியை திரையிட்டுக் காட்டினார் இயக்குனர். கிளுகிளு காட்சி அதிக நேரம் ஓடியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் ரெய்மா. ‘‘ஹீரோவுடன் நெருக்கமாக நடித்திருக்கும் காட்சியை இவ்வளவு நேரமா காட்டுவது. இதை என் அம்மா பார்த்தால் என்னை திட்டமாட்டார்களா? நீளத்தை குறைக்கிறீர்களா, இல்லையா? நான் நடித்ததைவிட கூடுதல் காட்சிகள் இடம்பெறுவது போல தெரிகிறதே. வேறு யாரையாவது நடிக்க வைத்து சேர்த்துவிட்டீர்களா? கொன்கனா நடித்ததாக பொய் சொல்லி என்னை மீண்டும் நடிக்க வைத்தீர்களா..’’ என்று மாறிமாறி கேட்டு காய்ச்சி எடுத்துவிட்டார் ரெய்னா.
கொன்கனாவையும் ரீஷூட் செய்ய திட்டமிட்டது உண்மைதான். ஆனால், ஏற்கனவே போதுமான அளவுக்கு படமாக்கியிருந்ததால் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். ரெய்மா சீன் அப்படியல்ல. கிளைமாக்சுக்கு மிகவும் முக்கியமானது. எனவேதான் ரீஷூட் செய்தேன் என்றார் டைரக்டர். ஆனாலும் கொஞ்சமாகத்தான் சமாதானமானார் ரெய்மா. கிளுகிளுப்பை குறைத்தே ஆகவேண்டும் என்று அடம் பிடிக்கிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே