தமிழில் தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்துகிட்டு இருக்கீங்க அதன் ரகசியம் என்ன?
“ரகசியம்ன்ன எதுவும் கிடையாது. பேஸிக் லாஜிக்கான விஷயங்கள் தான். அதுக்கா எனக்கு அறிவு கூர்மை இருக்கு, புதுசா எல்லாரையும் கவருகிற சக்தியிருக்குன்னு புதுசா மெஜிக் எல்லாம் சொல்லிகிட்டு இருக்க முடியாது. நம்மை சுற்றி நடக்கிற இயல்பான விஷயங்களா இருக்கா, பேமிலியோடு வந்து பார்க்க முடியுமா, படத்துல எங்கேயும் சோர்வில்லாமல் எவ்வளவு எணர்ஜியா இருக்கும், ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை எங்கேயும் டிஸ்டபன்ஸ் இல்லாமல் எவ்வளவு நல்லா போய்கிட்டு இருக்கும், அது அடுத்த முயற்சியா இருக்குமான்னு தான் பார்க்கிறேன். அதை தவிர என்னுடைய டைரக்டர்ஸை நம்புறேன். அவர்களுடைய வேலையும், உழைப்பும் சார்ந்த விஷயம் தான் என்னுடைய வெற்றி. மற்றபடி எந்த ரகசியமும் இல்லை.
நிறைய படங்கள் நடித்த நல்ல அனுபவசாலியான உங்கள் அப்பாவை விட நீங்கள் நல்லா நடிப்பதாக சொல்லுகிறார்களே…. அதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?
அப்பயெல்லாம் எதுவும் இல்லை. அது அந்த காலகட்டத்தை சார்ந்தது. இப்போ என் பெண்ணை பார்த்தீங்கன்னா 3 வயது தான் ஆகிறது. ஆனால், மூணு பாஷை பேசுகிறாள். அந்த வயசுல எனக்கு அதெல்லாம் தெரியாது. நம்ம வாழ்க்கையில் என்ன பழக்கப்படுத்திக்கிறோமோ, நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை உள்வாங்கிக்கிறோமோ. அதை வெளிபடுத்துற விதத்தில் தான் எல்லாமே இருக்கிறது.
இப்போ கம்ப்யூட்டர், இண்டர்நெட்ன்னு ரொம்ப பாஸ்ட்டா போய்கிட்டு இருக்கறிது. அப்போ அப்பா இருந்த காலகட்டத்துக்கும், இப்போ நம்ம இருக்கிற காலகட்டத்துக்கும் நான் தெரிஞ்சுக்கிற, புரிஞ்சுக்கிற விஷயங்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. அதே ஜம்ப் இப்போ பெண்கிட்ட இருக்கு. இத ஜெனரேஷன் கேப் தானே தவிர அப்பாவோட சின்ஸியாரிட்டியும், அவருக்கு தொழில் மீது இருக்கும் ஆசையும், ஒரு தனிமனிதரா வாழ்க்கையில் இருக்கும் ஒழுக்கமும் அதை பின்பற்ற வேண்டும் என்றாலே எனக்கு அது செலஞ்சிங்கன்ன விஷயமா இருக்கும். என்னால ஈடு கொடுத்து பண்ண முடியுமான்னு தெரியல.
அப்பா ஒரு நடிகர் மட்டும் கிடையாது. எல்லாருக்கும் எடுத்துக்காட்ட இருக்கிற ஒரு சிறந்த மனிதரா அப்பா இருக்கிறாரு, அவர் ஒரு சிறந்த ஓவியரா, பிரமாதமான பேச்சாளரா இருக்காரு. அவரை மாதிரி அந்த காலக்கட்டத்தில் என்னை நான் மாற்றிக் கொள்ள முடியுமான்னு தெரியல. நடிப்பை மட்டும் நம்பி வரல அப்பா. ஓவியரா இருக்க வேண்டும் என்று தான் வந்தார். ஆனால் நடிகனா மாற வேண்டிய சூழ்நிலை வந்தது. அதற்கு ஏற்றாற் போல் மாறி அதுலயும் வெற்றிக் கண்டார்.
இப்பவும் அவர் சும்மா இருப்பதில்லை இலக்கியம், பேச்சுன்னு சுசைட்டிக்கு எதையாவது செய்துகிட்டு தான் இருக்கிறார். ஆனால் நான் ஒரு நடிகனா இல்லைன்னா…. நான் என்ன பண்ணுவேன் எனக்கு பயமா இருக்கிறது. ஒரு பெரிய கேள்விக் குறியா இருக்கிறது. ஒழுக்கமா வாழ்ந்த அவர், எங்களிடம் வந்து என்ன என்ன தவறு செய்யக்கூடாது, எப்படி வாழனும்ன்னு சொல்லும் பொது, அதை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால அப்பாவோட கம்பேர் பண்ணுவது சரியான விஷயமா இல்ல.
ஒவ்வொரு படத்திலும் உங்கள் டான்ஸ் பல விதமாக மெருகேறிகிட்டு இருக்கிறது, நிறைய வித்தியாசங்கள் தெரிகிறது. அதற்காக சிறப்பு பயிற்சி எதுவும் எடுத்துக் கொள்கிறீர்களா?
எல்லா விஷயத்தையும் புரிந்து செய்வது தான் அது. டான்ஸ் ஆகட்டும், காமெடியாகட்டும், சீன்ஸாகட்டும், சண்டைக் காட்சியாகட்டும் எல்லாத்தையும் 100% முழுமையா செய்து விட்டேன் என்று எப்பவும் நினைப்பதில்லை. இப்ப வரைக்கும் நான் பண்ற படங்களை, என் வேலைகளை பார்க்க எனக்கே கூச்சமாக இருக்கிறது. இன்னும் நல்லா பண்ணியிருக்கலாம். டான்ஸ் மாஸ்டர் சொல்லிக் கொடுப்பதில் 50% தான் என்னால் செய்ய முடிகிறது. எனக்கு கிடைக்கிற பேர் சரிதானா. அவர்கள் அளவுக்கு என்னால் செய்ய முடியவில்லையேன்னு தோணும்.
ஒரு ஹீரோவா 100% எல்லாவற்றையும் செய்ய முடியாது. என்னுடைய பெஸ்ட் என்னவோ அதை தான் என்னால் செய்ய முடியும். ஒரு டான்ஸ் மாஸ்டர் என்றால் அவர் டான்ஸை பற்றி எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பார். ஆனால் ஒரு ஹீரோ என்றால் எல்லா விஷயங்களை தெரிந்து வைத்திருக்கவேண்டும். திடீர்ன்னு பாக்கா பைட் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கு, திடீர்ன்னு மார்ஷல் ஆர்ட்ஸ் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கு, ஒரு சர்கஸ்ன்னா திடீர்ன்னு ஜாகிலிங் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கு. அவர்கள் வாழ்நாள் பூராவும் கற்றுக் கொண்ட ஒரு விஷயத்தை நாங்கள் பத்து நாள், பதினைந்து நாளில் கற்றுக் கொண்டு பண்ண வேண்டியிருக்கும். அது சேலங்சிங்கா இருக்கிறது. அதுவே எனக்கு சந்தோஷமும், திருப்தியும் கொடுக்கிறது. அதில் என்னால முடிந்த பெஸ்ட் கொடுக்க முயற்சி செய்கிறேன்.
ஒவ்வொருத்தருக்கும் ஒரு பள்ஸ், ஒரு மைனஸ் இருக்கும். என்னுடைய பெஸ்ட் என்னவோ, அதை நான் கொடுக்கிறேன்னு எனக்கு திருப்தி இருக்கிறது. அதை மட்டுமே அளவுகோலா வெச்சிருக்கிறேன். சோம்பேறிதனமா இதை பண்ணாம விட்டுடோமேன்னு வருத்தப்படாம, ஒவ்வொரு படத்துக்கும், ஒவ்வொரு கதைக்கும் என்னுடைய பெஸ்ட் என்னவோ அதை கொடுக்க முயற்சி செய்கிறேன். ஒரு 50% என்னால் செய்ய முடிகிறது. ஆனால், என்னை விட டான்ஸ் மாஸ்டர் இன்னும் அழகா செய்வாரு.
உங்கள் திறமையை உசுப்பேத்தி விடுகிற இயக்குனரா யாரை நினைக்கிறீங்க?
எல்லா இயக்குனரிடமும் ஒவ்வொரு வித்தயாசம் இருக்கும். அந்த வகையில் கே.வி. ஆனந்த் சார் சொன்ன அடுத்த கதை பார்த்தீங்கன்னா இப்பவே எனக்கு உள்ளங்கையெல்லாம் வேர்க்கிறது. அந்தளவுக்கு ரொம்ப வித்தியாசமான கேரக்டர் அடுத்து பண்ணப் போறது. அதே மாதிரி ராம் கோபால் வர்மா சாரும் இதுவரை இல்லாத ஒரு மூன்று சிச்சுவேஷன் எல்லாம் செல்லி சாவலானசீன்ஸ் எல்லாம் கொடுத்திருக்காங்க. அதே போல முருகதாஸ் சாரோட ஏழாம் அறிவும் பார்த்திங்கன்னா அடுத்த கட்டத்தை தொட முயற்சி செய்கிற கதைகளம் தான்.
ஏழாம் அறிவு படத்தில் ஹீரோவுக்கு இணையாண வேடத்தில் ஸ்ருதி ஹாசன் நடிப்பதாக சொன்னாங்க? அதைப் பற்றி?
கண்டிப்பா. ஹீரோவுக்கு இக்கவலான கதாபாத்திரம் தான் செய்றாங்க. என் படத்தை பொருத்தவரை என்னை மட்டும் தான் முன் நிறுத்திக்கனும்ன்னு எந்த படத்திலும் நான் நினைத்தில்லை. ஒரு படத்தை பொருத்தவரை, வெற்றி என்பது எல்லாரும் சேர்ந்து பண்ணக்கூடிய விஷயம். எப்பவுமே நான் தான், நான் தான் என்று செல் பிஷ்ஷா நான் இருந்தது கிடையாது. ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து செய்தால் தான் எல்லா படமும் வேறுபட்டு தெரியும்.
ஸ்ருதியை பொருத்தவரை அவங்க பண்ற முதல் படம் மாதிரியே தெரியல. ரொம்ப நல்லா பண்றாங்க. ஒரு விஷயத்தை நம்பி, ஒரு தொழிலை நம்பி அதிலே ஜெயித்து காட்டியிருக்காங்க.
ஒரு சிங்கரா இருக்கனும், மியூசிக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று வெளிநாடு யெல்லாம் அதை படித்து கற்றுக் கொண்டு வந்திருக்கிறார்கள். இங்க இருக்கிற எல்லாரைவிடவும் அந்த விஷயத்துல அவுங்ககிட்ட எக்ஸ்போர்ஷர் அதிகமா இருக்குன்னு சொல்லலாம். அவுங்களுக்கு இணையா அந்த வயசுல யாருமே இல்லன்னு சொல்லலாம். இந்த வயசுல இவ்வளவு சாதிக்க முடியுது, காண்பிடன்ட் இருக்கு, தன்னை முன்நிறுத்திக்க முடியும்ன்னு தைரியம் இருக்கு. இன்னும் நாலைந்து வருஷத்தில் பார்த்தீங்கன்னா. ரொம்ப பெரிய இடத்துக்கு போய் நிற்பாங்க.
நீங்கள் இட்ட விதை பெரிய ஆலமரமா போய் இருக்கிறது?
ஆமாம், அகரம் ஃபெளண்டேஷன் ரொம்ப நல்லா போய்கிட்டு இருக்கிறது. நிறைய வால்ன்டியர்ஸ் இருக்காங்க. அப்போ அப்போ என்ன செய்கிறோம் என்பதை எனக்கு தெரிவிச்சுகிட்டே இருக்கிறார்கள். நாங்கள் நினைத்தை விட மாணவர்கள் இன்னும் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டு, நிறைய தன்னம்பிக்கையுடன் இருக்காங்க. கிராம புறங்களில் இருந்து சிட்டிக்கு வரும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உண்டு பண்ணுவது கொஞ்சம் நாள் எடுக்கும், கொஞ்சம் சிரமமாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், அப்படியில்லாமல் ஒரே மாசத்தில் எல்லாருமே தனித்தனியா மைக்கை பிடித்து பேசுகிறார்கள். எனக்கு இது நடந்துகிட்டு இருக்கு, எனக்கு இது பண்றாங்கன்னு ரொம்ப தன்னம்பிக்கையோடு தைரியமா சொல்வது சந்தோஷமாக இருக்கிறது.
உங்கள் அடுத்த புராஜக்ட் என்ன?
இப்போ இருக்கிற படங்கள் முடிந்தவுடன் அடுத்து கே.வி. ஆனந்த் ஸார் படம் இருக்கிறது.அதை அடுத்து ஹரி ஸார் படம் இருக்கிறது.
ரொமன்டிக், ஆக்ஷன் எந்த மாதிரியான படங்கள் பண்ண விரும்புறீங்க?
இப்போ எல்லா விதமான படங்களையும் தான் கலந்து செய்து கொண்டிருக்கிறேன். என்னை ஒரு மல்டி ஸ்டாராக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கிறேன்.
ரத்த சரித்திரா படத்தை தொடர்ந்து ஹிந்தியில் படங்கள் வந்தால் நடிப்பீர்களா?
அப்படின்னு சொல்ல முடியாது. நான் இங்கு தேர்வு செய்கிற படங்களே பார்த்து தான் தேர்வு செய்கிறேன். ரெகுலரான படமாக இல்லாமல். கேரக்டர்ஸ் எண்ட்ரி கொடுக்கிற படமாக இருந்து எல்லா விதமான ஆடியன்ஸையும் திருப்தி படுத்துகிற மாதிரியான கதையாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன். ஐடியா இருக்கு. அங்கிருந்து நிறைய கேட்கிறார்கள்.
ஆனால், எல்லாமே ஐடியா, கான்சப்ட் அளவு தான் இருக்கு. பவுண்ட் ஸ்கிரிப்ட் கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள். நம்ம தமிழ் ஆடியன்ஸூக்கும் அந்த மாதிரி கதைகள் பிடிக்க வேண்டும். அது அந்த ஆடியன்ஸோட போய்டாம தமிழ், தெலுங்கு ஆடியன்ஸூக்கு வரும் என்பது போல இருந்தால் கண்டிப்பா நடிப்பேன்.
அதே சமயம் இங்கு, தமிழ் அதைவிட பெருசா போய்கிட்டு இருக்கிறது. தமிழில் படஜ்ட்டும் சரி, பிஸினஸும் சரி பெரிசா நல்லா போய்கிட்டு இருக்கிறது எந்திரனுக்கு பிறகு. எப்படி ஒவ்வொரு முறையும் ரஜினி சார் படங்கள் வரும்பொழுது மார்க்கெட் எப்படி எக்ஸ்போர்ட் ஆகுதோ அந்த மாதிரி இங்கு வர படங்களின் பிஸினஸும், பட்ஜட்டும் வளர்ந்துகிட்டு இருக்கிறது.
ராம் கோபால் வர்மா உங்களை எப்படி தேர்வு செய்தார்?
அவரோடு ஒரு ரெண்டு மூணு கதைகள் பண்ணுவதற்காகவே நான்கு, ஐந்து வருடமாகவே பேசிக்கிட்டு இருந்தோம். எப்பவுமே இங்கிருந்து போகிற கதைகளில் அண்டர் வோல்ட் படத்தை பண்றதா தான் ஐடியா இருந்தது. டைகர் மணி என்று இங்கிருந்த போன ஒருவரை பற்றி கதை பண்ணனும்ன்னு நினைத்தோம். அந்த கதையில் நாயகனோட கலர் இருந்தது.
ரெண்டு ஹீரோ நடிக்கும் பொழுது ஹீரோ பிராபளம் இருக்கும்? அது எப்படி இருந்தது?
அதையெல்லாம் தாண்டின படம் ரத்தசரித்திரம். எனக்கு சாங் வேணும், பைட் வேணும், என்னை யாரும் திட்ட கூடாது, யாரும் தப்பா நினைக்க கூடாது. அப்படிங்கிற படம் கிடையாது. என்னை பொருத்தவரைக்கும் நான் நியாயமா இருக்கேன்னு நினைத்து தான் படம் முழுக்க பண்ணியிருக்கேன். ஹீரோ மாதிரி இல்லாம ஒரு சராசரி ஆள் பண்ற மாதிரி இருக்கும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே