பெட்டிகளை கழற்றிவிட்ட என்ஜினை போல ஜம்மென்று புறப்பட்டு விட்டது ஒரு திரைப்படம். இப்போதெல்லாம் படத்தை தயாரிப்பது ஒருவர். அதை வாங்குவது மற்றொருவர். பின்பு வெளியிடுவது வேறொருவர் என்ற நிலைதான் காணப்படுகிறது. இந்த மூவரின் பெயரையும் எந்த ஆர்டரில் போடுவது என்ற குழப்பம் ஏற்பட்டு கடைசியில் “போங்கய்யா உங்க பார்ட்னர்ஷிப்பும் நீங்களும்” என்று கூட்டணியே முறிந்து போன சம்பவங்களும் உண்டு. அப்படியெல்லாம் நிகழ்வதற்கு முன்பே திடமாக ஒரு முடிவெடுத்திருக்கிறார் அந்த தயாரிப்பாளர். இனிமேல் தயாரிப்பு என்ற டைட்டிலுக்கு நேராக ஒரே ஒருவர் பெயர்தான் வரும். அவர் சௌந்தர்யா ரஜினி!
‘ஹரா’ என்று மாறிவிட்ட சுல்தான் தி வாரியரின் பிரச்சனைகள் எல்லாவற்றையும் பைசா பாக்கி விடாமல் பேசி முடித்துவிட்டார்களாம். இந்த படத்தை தயாரிக்க முன் வந்த ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களின் கணக்கும் கொடுத்து முடிக்கப்பட்டு விட்டது. இவை எல்லாமுமாக சேர்ந்து சுமார் 18 கோடிகள் என்கிறது நம்ப தகுந்த செய்திகள்.
தன் மகளை அழைத்த அப்பா, “நீ ஒன்றும் டென்ஷன் ஆக வேண்டாம்மா. ஒரு படம் ஃபிரியா நடிச்சு கொடுத்ததா நினைச்சுக்கிறேன்” என்றாராம். படத்தில் இப்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், இதுவரை ஆன செலவை பல மடங்காக வசூலித்துக் கொடுக்கும் என்ற நம்பிக்கையை மட்டும் தளர விடவில்லையாம் மகள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே