‘அரவான்’ படத்தை பொறுத்தவரை அரை கிணறு தாண்டி விட்டார் வசந்தபாலன். இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாக இந்த படத்தை எடுத்து வரும் அவர், இப்பவே தனது அடுத்த படத்திற்கும் கர்சீப் போட்டு வைத்துவிட்டாராம். அப்படத்தின் ஹீரோ யார் என்பது கடைசி பாராவில்.
வெயில், அங்காடி தெரு ஆகிய இரண்டே படங்களில் தமிழ்சினிமாவின் ஓப்பனிங் டைரக்டர் ஆகியிருக்கிறார் வசந்தபாலன். நீங்க தயாரிச்சாலும் ஓ.கே. இல்லேன்னா நானே இந்த படத்தை தயாரிச்சுக்கிறேன் என்று செக் வைக்கிற அளவுக்கு செல்வாக்கையும் சேர்த்து வளர்த்திருக்கிறார்.
தனது செல்வாக்கின் நீட்சியாக அரவான் முடிந்ததும் அடுத்த படத்திற்கான கதையையும், ஹீரோவையும் தேர்ந்தெடுத்துவிட்டாராம் வசந்தபாலன். இதுவும் பின்னோக்கி செல்லும் பீரியட் பிலிம்தானாம். பட்ஜெட் பத்து கோடிக்கும் மேல் என்கிறார்கள். பெரிய ஹீரோ நடிக்கும் போது பத்து கோடி என்ன? இருபது கோடியில் கூட படம் எடுக்கலாம். ஆனால் இப்போ உள்ள சூழ்நிலையில் இவரை வைச்சு பத்து கோடியில் படம் எடுத்தா எப்படி வியாபாரம் பண்ணுவாராம்? இப்படியும் முணுமுணுக்கிறார்கள் இதுகுறித்து.
இவர்கள் முணுமுணுப்பில் சிக்கிக் கொண்டிருக்கும் அந்த ஹீரோ, சின்னத்தளபதி பரத்!
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே