பாலு மகேந்திராவின் பாசறையில் இருந்து வெளிவந்த இயக்குநர் வெற்றிமாறன், தான் ஒரு சிறந்த இயக்குநர் என்பதைத் தனது முதல் படமான ‘பொல்லாதவன்’ படத்திலேயே நிரூபித்தார்.
இதையடுத்து ‘ஆடுகளம்’ மூலம் அடுத்த வெற்றியை ருசித்துத் தனது பெயரை தக்க வைத்துக்கொள்ள வெற்றிமாறன் தயாராகி வருகிறார்.
கிராமத்துப் பின்னணியில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படம் வரும் டிசம்பரில் வெளிவரும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என இதனை விநியோகிக்கும் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தீபாவளிப் படங்கள் இன்னமும் களத்தில் இருப்பதாலும் ‘எந்திரன்’ பல இடங்களில் ஓடிக்கொண்டிருப்பதாலும் அவற்றுடன் ‘ஆடுகளத்தை’ கலக்க சன் பிக்சர்ஸ் விரும்பவில்லை. மேலும் தனுஷின் ‘உத்தமபுத்திரன்’ வெளிவந்து சில நாட்கள் தான் ஆகியிருக்கிறது என்பதையும் கருத்தில் கொண்டு இப்படத்தை பொங்கலன்று வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. பொங்கலன்று ‘ஜல்லிக்கட்டு’ நடக்கிறதோ, இல்லையோ, ‘ஆடுகளம்’ மட்டும் நிச்சயம் தயாராக இருக்கும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே