‘18 வயசு’ படத்துக்காக, 120 ஸ்டில் கேமராவை பயன்படுத்தி, காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்கரவர்த்தி தயாரிக்கும் படம், ‘18 வயசு’. ஜானி, காயத்ரி ஜோடியாக நடிக்கிறார்கள். ‘ரேனிகுண்டா’ படத்துக்குப் பிறகு பன்னீர்செல்வம் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
18 வயதில் மனநோயாளியாகும் இளைஞனைப் பற்றிய கதைதான் இது. இதே மாதிரி பல படங்கள் வெளி வந்திருந்தாலும், இந்த படம் புதிய பரிமாணத்தில் இருக்கும். இதில் ப்ரியா என்கிற பெண்ணை காமெடி கேரக்டரில் அறிமுகப்படுத்துகிறோம். பத்திரிகையாளர் கிருஷ்ணா டாவின்சி, முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்காக, 120 ஸ்டில் கேமராவை பயன்படுத்தி பல காட்சிகளை எடுத்துள்ளோம். இதை, ‘டைம் ஸ்லைஸ் ஷாட்ஸ்’ என்பார்கள். பாய்ஸ், அந்நியன் படங்களில் ஒன்றிரண்டு ஷாட்களுக்கு மட்டும் இந்த முறையை பயன்படுத்தி இருக்கிறார்கள். நாங்கள் 8 முக்கியமான காட்சிகளுக்கு இந்த ஷாட்டைப் பயன்படுத்தியிருக்கிறோம். ஷக்தி இந்த டெக்னிக்கை கொண்டு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இது ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.
ஜானிக்கு இந்த படத்தில் சவாலான கேரக்டர். சிறப்பாக நடித்திருக்கிறார். பட ரிலீசுக்கு முன்பே, ஹீரோயின் காயத்திரிக்கும், இசை அமைப்பாளர் தினேஷ்-சார்லஸ் பாஸ்கோவுக்கும் பல வாய்ப்புகள் வந்துள்ளன. அதிகமான பொருட்செலவில் சக்கரவர்த்தி தயாரிக்கிறார். இந்த படம், டிரெண்ட் செட்டாக அமையும் என்பது என் நம்பிக்கை. இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே