அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் மணிரத்னம். சன் பிக்சர்ஸ் தயாரிக்க முன்வந்திருக்கும் இந்த படத்தின் பட்ஜெட் 125 கோடி என்கிறார்கள். எந்திரன் படத்தின் பட்ஜெட் 150 கோடி என்று சொல்லப்பட்டாலும் உண்மையான பட்ஜெட் வேறு. ஆனால் அப்படத்தின் வசூல் தியேட்டர்காரர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் எப்படியோ? சன் பிக்சர்சுக்கு கொழுத்த லாபம்.
இதன் அடிப்படையில்தான் 125 கோடியை இறைக்க முன் வந்திருக்கிறது அந்நிறுவனம். பொன்னியின் செல்வன் படத்தை தழுவி இப்படத்தை எடுக்கப் போகிறார் மணிரத்னம் என்பதும், இதில் விக்ரமும் சூர்யாவும் நடிக்கிறார் என்றும் லேசாக தகவல்கள் கசிந்தன. இப்போது அந்த தகவல்களில் கொஞ்சம் முன்னேற்றம். சூர்யா விக்ரமுடன் நடிக்க விரும்பாமல் பின்வாங்குகிறாராம்.
ஆனால் மணிரத்னமும், தயாரிப்பு நிறுவனமும் சூர்யாவை சரிகட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்களாம். இந்த நிமிடம் வரைக்கும் சூர்யாவின் வார்த்தைகளில் நம்பிக்கையான உறுதி மொழி இல்லை என்கிறது மெட்ராஸ் டாக்கீஸ் வட்டார தகவல்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே