வன்னி எலி – சிங்களவனை அம்மணமாக்கும் சர்வதேசத்தின் முன்னே!!!

ஈழத்தமிழ் திரைப்படத் துறையில் முதல் சர்வதேச விருது பெற்ற “வன்னி எலி” குறும்படம் வரும் 27.11.2010 முதல் உலகெங்கும் டிவிடி வடிவில் வெளியிடப்படவுள்ளது.

தமிழியம் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழியம் சுபாஸ் இயக்கிய இக்குறும்படம், சுதந்திரமாக வாழ்ந்த ஈழத்தமிழர்கள் சிங்கள அரச தடுப்பு முகாம்களில் அனுபவித்த, அனுபவித்து வரும் பயங்கரங்களை திரைமொழியாக்கி, காட்சி ஊடகம் ஊடாக உலகிற்கு வெளிப்படுத்திய ஒரே ஒரு ஈழத்தமிழர் கலைப்படைப் பாகும்.

உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன், இயக்குநர் பாலு மகேந்திரா உட்பட பல பிரபல தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் மற்றும் சர்வதேச திரைப்பட விமர்சகர்களால் இக் குறும்படத்தில் பயன்படுத்தப்பட்ட யுக்தி மற்றும் தொழில்நுட்பம் போன்றவை மிகவும் பாராட்டுப்பெற்றன.

சர்வதேச தரத்தில் எடுக்கப்பட்ட வன்னி எலி குறும்படம், சர்வதேச விருது உட்பட பல விருதுகளைப் பெற்றது மட்டுமன்றி பல சர்வதேச திரைப்படப் போட்டிகளில் தேர்வாகியும் உள்ளது.

வன்னி எலி குறும்படம் இதுவரை பெற்ற விருதுகள்:

• சிறப்பு விருது, பெரியார்திரை குறும்பட விழா (இந்தியா 2009)
• சிறப்பு விருது, தமிழ் திரைப்பட விழா (நார்வே 2010)
• சிறந்த கதைக்கான சர்வதேச விருது (வங்காளதேசம் 2010)
• சிறந்த விமர்சனப்படம், 8வது சர்8வது சர்வதேச தமிழ் திரைப்பட விழா (கனடா 2010)
• இரண்டாம் பரிசு, மக்கள் தொலைக்காட்சி பத்து நிமிடக்கதைகள் (இந்தியா 2010)

இது போக, விப்ஜோர் சர்வதேச திரைப்பட விழா (இந்தியா 2010), ஐரோப்பிய சுதந்திர திரைப்பட விழா (பிரான்ஸ் 2010), சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்பட விழா (கொசோவோ 2010), 14வது சர்வதேச ஆவணப்பட விழா (செக் குடியரசு 2010) ஆகியவற்றிலும் வன்னி எலி ஒளிபரப்பப்பட்டது.

வன்னி எலி குறும்பட டிவிடியுடன், தமிழியம் சுபாஸ் இயக்கி, பல விருதுகளைக் குவித்த எனக்கு ஒரு கனவு இருக்கலாமா என்ற குறும்படமும் இலவசமாக தரப்படும்.

டிவிடி உரிமையை, ஈழத்தில் போரினால் வலுவிழந்தோருக்கு உதவும் அரசு சார்பற்ற ஈழத்தமிழர் உதவி நிறுவனமாகிய பச்வோக் (Patchwork) அமைப்பிற்கு தமிழியம் இலவசமாக அளித்துள்ளது.

இக் குறும்பட டிவிடியை, தமிழ் மக்கள் வசிக்கும் அனைத்து நாடுகளிலும் உள்ள பெரும்பாலான தமிழ் வர்த்தக நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது www.patchwork.org.au எனும் இணையத்தளத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.

இக்குறும்படம் பற்றிய மேலதிக தகவல்களை தமிழியம் இணையத்தில் பார்வையிடலாம்

இணையதள முகவரி- www.tamiliam.com

வன்னி எலி கதைச்சுருக்கம்:

வன்னிக்காடுகளில் வசிக்கும் இணைபிரியா இரு எலிகள், 3 லட்சம் மக்களை இலங்கை ராணுவத்தினர் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் வவுனியாவில் உள்ள வதை முகாமுக்குள் எதேச்சையாக செல்கின்றன. முள்வேலிகளுக்குப்பின்னால் வெளிஉலகம் அறிந்திடாத யாராலும் வெளிஉலகிற்கு கொண்டுவரமுடியாத அத்தமிழர்கள் படும் துன்பங்களை சாட்சியப்படுத்துகின்றன. அவ் இரு இணைபிரியா காதலர்களும் இறுதியில் அவ்வதை முகாமிலிருந்து தப்புகிறார்களா இல்லையா என்பதே முடிவு.

எனக்கு ஒரு கனவு இருக்கலாமா? கதைச்சுருக்கம்:

“எனக்கு ஒரு கனவு இருக்கு” என்றார் சில சகாப்தங்களிற்கு முன் மார்ட்டின் லூதர் கிங். “எனக்கு ஒரு கனவு இருக்கலாமா?” என போரினால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி கேட்கிறாள் நாகரீக உலகிடம். ஒரு சிறுமியின் கேள்வி மட்டுமல்லாமல் 60 லட்சம் சிறுவர்களின் கேள்வியே எனக்கு ஒரு கனவு இருக்கலாமா? குறும்படத்தின் கதை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago