ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி குடும்பத்தார் மீது அவதூறான புகார்களைக் கூறி வரும் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி மீது வழக்கு தொடரப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவரும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கம்யூனிகேஷன் இணை அமைச்சருமான சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக சாமி கூறி வரும் அனைத்துப் புகார்களும் ஆதாரமற்றவை, தேவையற்றவை. குறிப்பாக பிரதமர் மீது அவர் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் அபத்தமானவை என்பதோடு அடிப்படை ஆதாரமும் இல்லாதவை.
நடந்த சம்பவம் (ஸ்பெக்ட்ரம்) 2007ல் நடந்துள்ளது. எனவே இப்போது அமைச்சராக உள்ள நான் அதுகுறித்து கருத்துக் கூற முடியாது.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்துக் கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. எனவே ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாககருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது.
அதேபோல, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தை கடந்த 20 வருடங்களாகவே விமர்சித்துக் கொண்டிருக்கிறார் சாமி. இதற்கு ஒரு முடிவு கட்டப்பட வேண்டும். இதுகுறித்து சட்ட ஆலோசனையை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டுள்ளது.
அரசியல் ரீதியாக உயிருடன் இருக்க வேண்டும் என்பதற்காக எதையாவது கூறிக் கொண்டிருக்கிறார் சாமி. அப்படிப்பட்டவரை சட்ட ரீதியாகத்தான் ஒடுக்க வேண்டும். அதை விரைவில் சாமி எதிர்கொள்ள தயாராக இருக்கட்டும் என்றார் பைலட்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே