ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராஜா மீது வழக்கு தொடர அனுமதி அளிக்காமல் இழுத்தடிப்பதாக பிரதமரையும், பிரதமர் அலுவலகத்தையும் குறை கூறி வந்த ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி தற்போது சட்ட அமைச்சக அதிகாரிகள்தான், பிரதமருக்கு தவறான வழியைக் காட்டிவிட்டதாக பல்டி அடித்துள்ளார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இதுதொடர்பாக 9 பக்க அபிடவிட் ஒன்றை அவர் தாக்கல் செய்தார்.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராஜா மீது வழக்கு தொடர அனுமதிக்குமாறு கோரி நான் அனுப்பிய மனுவை சட்ட அமைச்சகத்திற்கு பிரதமர் அலுவலகம் அனுப்பியுள்ளது. ஆனால் சட்ட அமைச்சக அதிகாரிகளும், அரசின் சட்ட நிபுணர்களும், இதுதொடர்பான ஆதாரம் கிடைக்கும்வரை காத்திருக்கவும் என்று பிரதமருக்கு தவறான அறிவுரையை வழங்கி தாமதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
நான் கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கு தொடரலாம் என்ற சட்ட அம்சத்தை பிரதமருக்கு தெரிவிக்க தவறிய சட்ட நிபுணர்களி்ன் போக்கு வருத்தம் தருவதாக உள்ளது.
எனது கடிதங்கள் மூலம் நான் கொடுத்த ஆதாரங்கள் குறித்து பிரதமர் தனிப்பட்ட முறையில் விசாரித்துள்ளார். இது உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காத செயலாகும் என்றார் சாமி.
முன்னதாக சாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக பிரதமரும், பிரதமர் அலுவலகமும் செயலற்று இருந்தது தொடர்பாக கடுமையான கேள்விகளைக் கேட்டிருந்தது. இதையடுத்து அட்டர்னி ஜெனரல் வாகனாவதியை பிரதமர் சார்பில் வாதாட நியமித்த மத்திய அரசு அவர் மூலம் விரிவான பதில் மனுவை சனிக்கிழமையன்று தாக்கல் செய்தது நினைவிருக்கலாம்
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே
View Comments
அவர் ஒன்றும் அந்தர் பல்டி அடிக்கவில்லை ;
தாமதத்துக்கு பிரதமர் காரணமில்லாமல் இருக்கலாம் ; அவர் செயலகத்தில் உள்ள அதிகாரிகளே காரணம் என்று கூறி இருக்கிறார் .
ராசா பற்றியோ , ஊழல் நடந்தது பற்றியோ அவர் தம் கருத்தை மாற்ற வில்லை . இன்னும் உரக்கவும் அழுத்தமாகவும் சொல்கிறார்