இயக்குநர், ஹீரோ, ஹீரோயின், ஒளிப்பதிவாளர் உட்பட புதுமுகங்கள் இயக்கியிருக்கும் படம், ‘ஆண்மை தவறேல்’ சமீபத்தில் தணிக்கை சான்றிதழ்க்காக திரையிடப்பட்ட இப்படத்தை பார்த்தி தணிக்கை அதிகாரிகள் தயாரிப்பாளரையும், இயக்குநரையும் வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள்.
பிரபல பைனான்ஸியரும், வினியோகஸ்தருமான கமல் நயன், தயாரித்திருக்கும் முதல் படம் இது. இவர் நினைத்திருந்தால் ஏற்கனவ வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர்களை வைத்து தனது முதல் படத்தை தயாரித்திருக்கலாம். ஆனால் புதியவர்களுக்கு வாய்ப்பளித்திருக்கும் இவர் இப்படத்தின் மூலம் குழந்தை வேலப்பன் என்பவரை இயக்குநராக அறிமுகப்படுத்தியிருக்கிறார். இயக்குநர் மட்டுமல்ல ஹீரோ துருவன், ஒளிப்பதிவாளர் அரபிந்த்சாரா, இசையமைப்பாளர் மரியா மனோகர், படத்தொகுப்பாளர் வி.ஜெ.சாபு என அனைவரும் புதியவர்கள்தான்.
இவர்களின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் குழு, ‘சமுதாய அக்கறையுடன் எடுக்கப்படும் படம், கண்டிப்பாக சமூகத்தில் இன்று நடக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு பதில் சொல்லும். கோவை மற்றும் சென்னையில் சமீபகாலமாக நடந்த கடத்தல் சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்தது. ஆனால் இது ஒரு உலக பிரச்சனை. அனைத்து நாடுகளிலும் வருடத்திற்கு சுமார் எட்டு லட்சம் பேர் கடத்தப்படுகிறார்கள். இந்த உலகலாவிய பிரச்சனைக்கு தீர்வு சொல்லும் படமாக ‘ஆண்மை தவறேல்’ அமைந்துள்ளது. இந்த படம் வருங்கால சமுதாயத்திற்கு எச்சரிக்கை விடும் வகையில் இருப்பதால் அனைத்து வயதினரும் பார்க்கவேண்டிய படம் இது’ என்று பாராட்டியுள்ளது. அதோடு படத்திற்கு ‘யு/ஏ’ வழங்கியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே