ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து, ராஜா மீது வழக்கு தொடர அனுமதிக்குமாறு கோரி சுப்ரமணியம் சாமி கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுப்பதில் ஏன் இந்தத் தாமதம் என்று சுப்ரீம் கோர்ட் கேட்டுள்ள கேள்விக்கு பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார். இதுகுறித்து பாட்னாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க பிரதமர் ஏன் இவ்வளவு காலதாமதம் செய்தார் என்று சுப்ரீம் கோர்ட் கேட்டுள்ளது.
ராஜா விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கேட்டுள்ள கேள்விகள் கடுமையானவை. இவற்றுக்கு பிரதமர் உடனடியாக விளக்கம் தர வேண்டும். ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக முழுமையாக விசாரிக்க வேண்டும். யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது வெளிக் கொண்டு வரப்பட வேண்டும்.
இதற்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைதான் சரியானதாக இருக்கும். அதைத்தான் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்துகின்றன என்றார் அத்வானி.முன்னதாக ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி, அமைச்சர் ராஜா மீது வழக்கு தொடர அனுமதிக்குமாறு கோரி பிரதமரிடம் கொடுத்த மனு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல், 15 மாதகாலமாக ஏன் அவர் மெளனமாக இருந்தார். இதை பிரதமர் அலுவலகம் விளக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று கடுமையாக கூறியிருந்தது நினவிருக்கலாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே