நான் திமுகவை விமர்சிப்பதால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க உள்ளதாக பத்திரிகையாளர்கள் கணக்கு போடுகின்றனர். நான் கூட்டணிக்கு அவசரப்பட மாட்டேன். அதை பிறகு பார்த்துக் கொள்வோம். ஆனால், அடுத்த முறை திமுகவை ஆட்சிக்கு வர விடமாட்டேன் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் .
காஞ்சிபுரத்தில் தேமுதிக சார்பில் நேற்று பக்ரீத் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு முஸ்லீ்ம்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில்,
திமுக ஊழலில் ஊறியுள்ளது. மத்திய அமைச்சர் ராசாவின் ஊழலால் உலக அரங்கில் இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் தமிழக முதல்வர் மக்களுக்கு வாங்கும் சக்தி அதிகரித்துவிட்டது என்று சொல்கிறார். அவர்களுக்கு வேண்டுமானால் வாங்கும் சக்தி அதிகரித்திருக்கலாம், மக்கள் நிலை மோசமாக உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே குடும்ப நல நிதியாக ரூ. 500 ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்க வேண்டும் என்றும் நான் கோரிக்கைவிடுத்தேன். ஆனால் தமிழக அரசு அதைச் செய்யவில்லை. உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி அதை அமல்படுத்துகிறார்.
விஜயகாந்துக்கு பதவி ஆசை வந்துவிட்டதாக கூறுகின்றனர். இவர்களுக்கு பதவி ஆசை இல்லாமலா தந்தை முதல்வர் பதவியிலும், மகன் துணை முதல்வர் பதவியிலும் இருக்கிறார்கள்? மூத்த அமைச்சர் அன்பழகனுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டியதுதானே; இல்லையென்றால் ஆற்காடு வீராசாமிக்கு கொடுக்க வேண்டியதுதானே?
காங்கிரஸை வளர விடமாட்டேன் என்று அண்ணா சபதம் எடுத்து பல்வேறு கூட்டங்களில் பேசி வந்தார். தமிழக முதல்வர் தனது பதவி ஆசையால்தான் காங்கிரஸ் பக்கம் சாய்ந்துள்ளார். மக்களை திசை திருப்ப விவசாயிகளுக்கு இலவச மோட்டார் வழங்கப்போவதாக கூறுகிறார். மின்சாரமே ஒழுங்காக வருவதில்லை, இலவச மோட்டாரை வைத்துக் கொண்டு என்ன செய்வது?
நான் திமுகவை விமர்சிப்பதால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க உள்ளதாக பத்திரிகையாளர்கள் கணக்கு போடுகின்றனர். நான் கூட்டணிக்கு அவசரப்பட மாட்டேன். அதை பிறகு பார்த்துக் கொள்வோம். ஆனால், அடுத்த முறை திமுகவை ஆட்சிக்கு வர விடமாட்டேன்.
மக்கள் வாக்களிக்கும்போது சிந்தித்து வாக்களிக்க வேண்டும். நான் பணத்துக்காக அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்துள்ளேன். நான் எந்தச் சாதியும், மதமும் பார்ப்பதில்லை. மக்கள் வாக்களிக்கும்போது ஊழல்வாதிகளை இனம் கண்டு அவர்களை புறந்தள்ள வேண்டும் என்றார் விஜயகாந்த்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே