விஜய் வீட்டில் ரெக்கார்டிங் ஸ்டுடியோ…

ஆடி போயி ஆவணி வந்தா டாப்ல போயிடுவேன்’ என்று களவாணி சரண்யா போலவே பேசி காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிற பல சினிமாக்காரர்களுக்கு பனிரெண்டு கட்டங்களை தாண்டி பயணம் செய்வது மட்டும் ஆகவே ஆகாத காரியம்!
அதிலும் சிலர் வாஸ்து, ராசிக்கல், நாடி சோதிடம் என்று சினிமாவை ‘அந்த’ சமாச்சாரங்களுக்குள் தேடிக் கொண்டிருப்பார்கள். அதில் லேட்டஸ்ட் வரவு இசையமைப்பாளர் விஜய் ஆன்ட்டனி. இவருடைய பிரச்சனை வாஸ்துதானாம்.

நான் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் காலடி எடுத்து வைத்த விஜய் ஆன்ட்டனி அந்த படத்தை முடிப்பதற்குள் கைநழுவி போனது ஏராளமான படங்கள். சரி, அதையெல்லாம் தியாகம் செய்து விட்டு நடித்த படம் எப்போது ரிலீஸ்? அதை தெளிவாக சொல்ல முடியாதளவுக்கு இருக்கிறதாம் அப்படத்தின் வியாபாரம். விட்டத்தை பார்த்துகிட்டு இருந்தா விட்டதை பிடிக்க முடியுமா? மீண்டும் பழைய வேகத்தில் படங்களுக்கு இசையமைக்கப் போகிறாராம்.

இந்த நேரத்தில்தான் விஜய் ஆன்ட்டனி தேடிய மாதிரி முழு வாஸ்த்துடன் கூடிய பங்களா கிடைத்திருக்கிறது அவருக்கு. சாலிகிராமம் வீட்டிலிருந்து நடிகர் விஜய் நீலாங்கரை பங்களாவுக்கு போய்விட்டார். இங்கு இருந்தபோது அவர் பெற்ற தொடர் வெற்றிகள் நீலாங்கரைக்கு போனபின் இல்லை. இந்த விஷயத்தை விஜய் நம்புகிறாரோ இல்லையோ, விஜய் ஆன்ட்டனி நம்புகிறார். தற்போது காலியாக இருக்கும் அந்த வீட்டுக்கு தனது ரெக்கார்டிங் ஸ்டுடியோவை மாற்றிவிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago