சூர்யா, விவேக் ஓபராய் நடித்த “ரத்த சரித்திரம்” படம் தமிழ்-தெலுங்கில் வருகிற 26-ந் தேதி ரிலீசாகிறது. ராம்கோபால் வர்மா இயக்கி உள்ளார்.
இப்படத்தில் அரசியல் தலைவர்களை விமர்சித்திருப்பதாக கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ரஜினியுடன் சூர்யாவை ஒப்பிட்டு வட மாநிலங்களில் இந்த படத்திற்காக விளம்பரங்களும், செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து சூர்யா சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆந்திராவில் நடந்த உண்மை சம்பவம் ரத்த சரித்திரம் படம். முதல் பகுதி வந்து விட்டது.
2-ம் பகுதி இந்தி, தமிழ், தெலுங்கில் 26-ந் தேதி ரிலீசாகிறது. பத்திரிகை செய்திகள் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தாரிடம் கேட்ட உண்மை நிகழ்வுகளை வைத்து ராம் கோபால் வர்மா எடுத்துள்ளார். வன்முறை தூக்கலாக இருக்கும்.
எனது முந்தைய படங்கள் போல் இது இல்லை. சூர்யா படமாக ரசிகர்கள் பார்க்க வேண்டாம். இது ராம்கோபால் வர்மாவின் படம்.
இந்த படத்தை சிலர் எதிர்க்கின்றனர். இதில் யாரையும் புண்படுத்தவில்லை. நடந்த சம்பவங்களின் தொகுப்பாகவே தயாராகி உள்ளது. இப்படத்திற்காக “ரோபோ” ரஜினிக்கு பிறகு “கஜினி” சூர்யா என்று என்னை ரஜினியுடன் ஒப்பிட்டு விளம்பரம் செய்துள்ளனர்.
ரஜினி பெரிய நடிகர் அவருடன் என்னை ஒப்பிடுவதை விரும்பவில்லை.
எனவே அந்த விளம்பரங்களை அப்புறப்படுத்தும் படி கூறி விட்டேன். இப்படத்திற்காக இந்தியில் நானே டப்பிங் பேசி உள்ளேன். இதற்காக டியூசன் சென்று இந்தி படித்தேன் என்று சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே