நான் இன்னும் ரொமான்டிக் ஹீரோதான். பார்வையாளர்களை சங்கடப்படுத்தாத அளவுக்கு அதை என்னால் செய்ய முடியும், என்றார் நடிகர் கமல்ஹாஸன்.
கமலுக்கு இப்போது வயது 56. இதனை சுட்டிக் காட்டி, இந்த வயதில் ரொமான்டிக் ஹீரோவாக நடிப்பதை எப்படி உணர்கிறீர்கள் என்று அவரிடம் சமீபத்தில் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த கமல், “வயசு ஒரு விஷயமில்லை. என்னால் அந்த வேடத்தை சிறப்பாக செய்ய முடியுமா… மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் செய்ய முடியுமா என்பதுதான் முக்கியம். இந்த வயசுல நான் காலேஜுக்குப் போற மாதிரி காட்டறதுதான் சங்கடமா இருக்கும். ஆனால் கல்லூரி பருவம் முடிந்த இளைஞனாக நடிப்பதில் கஷ்டமில்லை…” என்றார்.
வணிகமயம் என்ற பெயரில் சினிமா வை கெடுத்துவிட்டதாகக் கூறப்படுவது குறித்த கேள்விக்கு, “அப்படி ஒரேயடியா சொல்லிட்டா எப்படி… பத்மா சுப்பிரமணியம் வந்த பிறகுதான் பரதநாட்டியம் உலகெல்லாம் போச்சு. அதுக்காக பரதநாட்டியத்தை வணிகமயமாக்கிட்டாங்கன்னு சொல்ல முடியாதே…
எல்லா கலைகளிலும் புதுமை இருந்துகிட்டே இருக்கணும். இல்லன்னா அந்த கலை தேங்கி நின்னுடும். அதை யார் வேணும்னாலும் செய்யலாம். சின்ன நடிகர், பெரிய நடிகர் யார் வேணும்னாலும்… அவரவருக்கு தோன்றும் புதுமைகளை, நல்ல விஷயங்களை செய்துகிட்டே இருங்க. மக்கள் வேணுங்கறதை எடுத்துப்பாங்க. அதைவிட்டுட்டு சும்மா விமர்சனம் என்ற பெயரில் குத்திக்கிட்டு இருக்க வேணாம்…”, என்றார் கலைஞானி
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே