தனது முதல் படங்கள் மூலம் ரசிகர்களிடம், வித்தியாசமான இயக்குநர் என பெயர் வாங்கியிருந்தாலும், மைனா படம் மூலம் வெற்றிகரமான இயக்குநராகவும் உருவெடுத்துள்ளார் பிரபு சாலமன். இந்த ஆண்டு வெளியான அருமையான படம் என பிரபு சாலமனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறதாம். நல்ல படங்களை விரும்பும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினரும் பாராட்டுக்களைக் குவித்துக் கொண்டிருக்கின்றனராம். படம் வெளியான உடனேயே பெரும் பாராட்டை மைனா பெற்றிருப்பதால் பிரபு சாலமனும் உற்சாகமாகியுள்ளார்.
படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலேயே கமல்ஹாசனும், இயக்குநர் பாலாவும் இப்படத்தை வெகுவாகப் பாராட்டினார்கள். இப்போது திரையுலகினர் அணிவகுத்துப் பாராட்டுக்களைக் குவித்து வருகின்றனராம். பிரபு சாலமனுடன் இணைந்து கிங் படத்தில் பணியாற்றிய விக்ரம் தனது குடும்பத்தோடு போய் படத்தைப் பார்த்து ரசித்துள்ளார். நடிகர் விஷால், தென்காசியில் உள்ள தியேட்டருக்குப் போய் படத்தை ரசித்தார். இயக்குநர் லிங்குச்சாமி படத்தைப் பார்த்த பின்னர் தனது வாய் வலிக்கும் வரை பிரபு சாலமனை பாராட்டித் தள்ளி விட்டாராம்.
அத்தோடு நில்லாமல் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் பிரபுவுக்கு அளித்துள்ளார். அட்வான்ஸையும் கையில் திணித்து விட்டாராம். யாரை வேண்டுமானாலும் ஹீரோவாக போட்டுக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார் லிங்கு. இதனால் தனது அடுத்த படம் குறித்து தீவிர யோசனையில் இறங்கியுள்ளார் பிரபு. அனேகமாக இதிலும் மைனா ஹீரோ விதார்த்தான் நாயகனாக இருப்பார் எனத் தெரிகிறது. மைனாவுக்குக் கிடைத்துள்ள இந்த வரவேற்பால் ஒட்டுமொத்த மைனா டீமுமே மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே