எந்திரன் திரைப்படத்தின் கதை திருடப்பட்டதாக கூறி எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்கிற அமுதா தமிழ்நாடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இதை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நான் சிறுவயதில் இருந்து கவிதைகள், கதைகள், நாவல்கள் எழுதி வருகிறேன். அமுதா தமிழ்நாடன் என்ற புனைப்பெயரில் நான் எழுதி வெளியான கதைகள், கவிதைகளுக்கு பாராட்டுகள், பரிசுகள் பெற்றுள்ளேன்.
அந்த வரிசையில் நான் எழுதிய ஜுகிபா என்ற சிறுகதை இனிய உதயம் என்ற இலக்கிய பத்திரிகையில் கடந்த 1996-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியானது. லட்சக்கணக்கான மக்கள் அதை படித்துள்ளனர். பின்னர் அதே கதை, 2007-ம் ஆண்டில் சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் சார்பில் திக் திக் தீபிகா என்ற புத்தகத்திலும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட எந்திரன் சினிமாவை பார்த்த எனது வாசகர்கள் மற்றும் நண்பர்கள் நேரிலும், கடிதம் மூலமாகவும் என்னை தொடர்பு கொண்டு பேசினர். எனது படைப்பான ஜுகிபா என்ற சிறுகதையை அப்படியே எந்திரன் படத்தில் எடுத்து உபயோகித்து இருக்கின்றனர் என்று தெரிவித்தனர்.
எனவே நானும் எந்திரன் படத்தை தியேட்டரில் பார்த்தேன். அதைப்பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தேன். எனது ஜுகிபா கதையை மூலக்கதையாக வைத்து, சினிமாத்தனமான பாட்டு, சண்டை, கிராபிக்ஸ் காட்சிகளை சேர்த்து எந்திரன் சினிமாவை உருவாக்கி இருப்பது தெரிய வந்தது.
பதிவு செய்யப்பட்ட பத்திரிகையில் வெளியானதை அடுத்து, நான் எழுதிய ஜுகிபா கதையின் பதிப்புரிமை எனக்கு சொந்தமானதாகும். ஆனால் என்னிடமோ, எனது கதையை வெளியிட்ட இனிய உதயம் பத்திரிகை வெளியீட்டாளரிடமோ அந்தக்கதையை பயன்படுத்த முன்அனுமதி பெறவில்லை.
1997-98-ம் ஆண்டில் இந்தக்கதையை கற்பனை செய்ததாக கூறி எந்திரன் படத்தை உருவாக்கி இயக்கி இருக்கிறார் ஷங்கர். சன் பிக்சர்ஸ் நிறுவனமும், அதன் நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறனும் எந்திரன் படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியிட்டு உள்ளனர்.
எனது கதையான ஜுகிபாவை திருடி எந்திரன் சினிமாவை எடுத்தது பதிப்புரிமை சட்டத்தின்படி தவறாகும். எனவே எனக்கு நஷ்டஈடாக ஒரு கோடி ரூபாய் கொடுப்பதற்கு உத்தரவிட வேண்டும். எந்திரன் சினிமாவை தியேட்டர்கள் மூலமாகவோ, வேறு மீடியாக்கள் வழியாகவோ திரையிட தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் இதுதொடர்பாக வருகிற 18ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி கூறி கலாநிதி மாறன், ஷங்கர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கு நவம்பர் 18ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே
View Comments
இலக்கிய சிற்றிதழில்... ஆரூர் தமிழ்நாடனின் கதையைத் திருடி உருவாக்கப்பட்ட எந்திரன் குறித்து அதன் ஆசிரியர் சுகன் அவர்கள் ஒரு அற்புதமான தலையங்கத்தை எழுதியிருக்கிறார். இதன் ஒரு பகுதியை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்சியடைகிறேன்.-அண்ணா
-----------------------------------------------------------------------------------எழுதுகோலால் எண்ணக் கண் திறப்போம்-சுகன்கடந்த 25 ஆண்டுகளாக தஞ்சையில் இருந்து வெளிவரும் ‘செளந்தர சுகன்’
வழக்கம்போல் அன்றைய நாளிதழ்களை வாங்கிப் படிக்கத் தொடங்கிய எனக்கு, ஆரூர் தமிழ்நாடன் தொடர்பான செய்தி ஆச்சரியப்படுத்தியது. இந்தியன் எக்ஸ்பிரஸில் அதுதான் தலைப்புச் செய்தி.ஆரூர் தமிழ்நாடன் ஆற்றல் வாய்ந்த படைப்பாளி. அவரது கவித்துவ மூளை, சொல்வளமும் பொருள்வளமும் குவிந்துகிடக்கும் தமிழின செழுமை வாய்ந்த படைப்புக்களம். அவரது கவியாற்றலை நேரடியாக அவரிடம் துய்க்கும் அனுபவம் அலாதியானது. சுகன் முதல் இதழுக்காக அவரது கவிதையைக் கேட்டபோது...தஞ்சை சோழன் சிலைப் பூங்காவில் அமர்ந்தபடி... இருட்டு தாலாட்ட...தெருவிலக்கின் மெல்லிய வெலிச்ச சிலுசிலுப்பில்... கடகடவென்று கொட்டினார். அதை நான் தாளில் பிடித்து வைத்துக்கொண்டேன்.இன்றைக்கு அவர் நக்கீரனில் குப்பை கொட்டுகிறார். அவரை நக்கீரன் கோபால் செல்லமாக வைத்திருக்கிறார். எனினும் அவர் திரைப்படத்துறையில் பயன்படுத்தப்பட்டிருந்தால்...கண்ணதாசனுக்கு நிகரான இன்னொரு கவிஞனை தமிழ்த்திரையுலகம் பெற்றிருக்கும்.என்னுடைய ஜூகிபா கதையைத் திருடிதான் எந்திரன் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.எனவே இயக்குநர் சங்கர் மீதும் தாயாரிப்பாளர் கலாநிதி மாறன் மீதும் காப்புரிமை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என காவல்துறையிடம் புகார் செய்திருந்த செய்திதான் அது.தமிழ்நாடனின் கவிதை வரிகளை, உத்திகளை, பல இளம்கவிஞர்கள் திருடி தனது கவிதையாக காட்டிக்கொண்டது உண்டு. ஆனால் அதற்காக தமிழ்நாடன் அலட்டிக்கொண்டதில்லை. பாரதிதாசனிடம் ஒருவர் ஒருமுறை, ஓடிக்கொண்டிருக்கும் ஒரு திரைப்படத்தில் வரும் புரட்சி வசனங்கள் உங்கள் கவிதைகளின் உரைநடை பெயர்ப்பாக இருக்கிறதே என்று சொன்னபோது... ‘அவன் தமிழன்டா, வளர்ந்துவருகிறவன். பிழைச்சிப்போகட்டும்’ என்றாராம். தமிழ்நாடனுக்கும் அந்த குணம் உண்டுதான். ஆனால் இது வணிகத் தினவெடுத்தவர்கள் செய்தது என்பதற்காக அதற்கு எதிராக தன் குரலைப் பதிவுசெய்திருக்கிறார்.இன்றைக்குத் திரைப்படத்துறையை ஒட்டுமொத்தமாக தன் குடைக்குள் கொண்டுவந்திருக்கும் மிகப்பெரிய சக்திக்கு எதிராக, அவரது உரிமைக்குரல் ஒலித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. வரவேற்கத்தக்கது. எழுத்தாளத்திமிர் என்பதை நான் கேல்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதை தமிழ்நாடனிடன் பலமுறை நேரில் கண்டு வியந்திருக்கிறேன். இந்த எதிர்க்குரல் எனக்கு ஆச்சரியம் தரவில்லை. அது அவருடைய இயல்பு.பொதுவாக படைப்பாளி முதுகெலும்பு இல்லாத புழுவாகத்தான் நெளிந்துபோகிறான். அதுவும் உலகமயமாக்கல், முதலாளித்துவ அதிகார மையம், இவற்றிற்கு எதிராக அவன் குரல் எழுப்ப முடிவதில்லை. உலகைப் புரட்டிப்போடும் நெம்புகோலாக தன் எழுதுகோலைத் தூக்கும் படைப்பாளி... தன்னை ஒடுக்கும் சக்திக்கு எதிராக நடைமுறைகளில் ஒடுங்கிப்போகிறான். இந்த சூழலில் தமிழ்நடன் போன்றவர்களின் முழக்கம்... கவனம் கொள்ளத் தக்கது. சிற்றிதழ்களும் சிற்றிதழ் சார்ந்த படைப்பாளிகளும்... கப்புரிமைக்காகக் குரல் கொடுக்கும் அவருக்குத் துணை நிற்பது முக்கியமானது.--------------------------------------------------------------------