தமிழில் நாயகியாக நடிக்க ரொம்பவே பிகு செய்யும் தெலுங்கு கவர்ச்சிக் கன்னி இலியானா, கன்னடத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளாராம். சமீர் தத்தானி நாயகனாக நடிக்க சதா, லேகா வாஷிங்டன் என இரு நாயகிகளுடன் உருவாகும் படம் ஹுடுகா ஹுடுகி. கோவா, மகாராஷ்டிரா மாநில எல்லைப் பகுதியில் வைத்து இப்படத்தின் பெரும்பகுதியை படம் பிடித்துள்ளனர். வேடிக்கை, காதல், சென்டிமென்ட் என வழக்கமான கலவையுடன் உருவாகும் ரொமான்டிக் படம் இது. தமிழில் சுத்தமாக வாய்ப்பிழந்து போன சதாதான் இதில் நாயகி.
2வது நாயகியாக வருகிறார் லேகா வாஷிங்டன். இவரும் தமிழில் அறிமுகமாகி தேறாமல் போனவர். இப்போது ஹுடுகா ஹுடுகி மூலம் கன்னடத்தில் ஸ்டாராகும் முயற்சியில் குதித்துள்ளார். இதில் ஒரு பாடலுக்கு இலியானா டான்ஸ் ஆடியுள்ளார் என்பதுதான் படத்தின் ஹைலைட். தெலுங்கின் முன்னணி நாயகியாக திகழும் இலியானா, தமிழ்ப் படத்தில்தான் அறிமுகமானவர். ஆனால் இப்போது அவரை தமிழில் நாயகியாக நடிக்க வைக்க பலரும் முயன்றும் கூட பிடி கொடுக்காமல் நழுவி வருபவர் இலியானா.
ஆனால் ஹுடுகா ஹுடுகி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளாராம் இலியானா. இதற்காக அவர் வாங்கிய சம்பளம் ரூ. 30 லட்சம் என்கிறார்கள். ஆனால் படத்தின் நாயகிகளான சதாவுக்கும், லேகாவுக்கும் கூட இந்த அளவுக்கு சம்பளம் தரவில்லையாம். கூப்பிட்டதும் ஆடஒப்புக் கொண்ட காரணத்தால் படத்தின் நாயகிகளை விட கூடுதலான சம்பளத்தைக் கொடுத்து ஆட வைத்துள்ளார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே