மாணவன் கீர்த்திவாசனை கடத்திய கும்பல் சிக்கியது….

சென்னை மாணவன் கீர்த்திவாசனைக் கடத்திச் சென்று பணம் பறித்த கும்பலை போலீஸார் வளைத்துப் பிடித்துள்ளனர். இந்தக் கும்பலுக்குக் கொடுக்கப்பட்ட பணத்தையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்த அனைத்துத் தகவல்களையும் இன்று பிற்பகல் செய்தியாளர்களிடம் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் வெளியிடவுள்ளார்.

சென்னை மாணவன் கீர்த்திவாசன் நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் கத்தி முனையில் கடத்தப்பட்டான். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து பல்வே திருப்பங்கள் ஏற்பட்டு நேற்று பிற்பகல் 2 மணியளவில் சிறுவன் திடீரென விடுவிக்கப்பட்டான். அவனை போலீஸார் மீட்டு வீட்டுக்கு கொண்டு வந்தனர்.

ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை கடத்தல்காரர்களுக்குப் பணம் கொடுத்து சிறுவனை மீட்டதாக கூறப்பட்டது. இருப்பினும் இதுகுறித்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் விரிவான தகவல்களைத் தெரிவிக்கவில்லை. மாறாக சில நாட்கள் பொறுத்திருங்கள், அனைத்துத் தகவல்களையும் தெரிவிக்கிறேன் என்று கூறினார்.

இந்த நிலையில் இன்று காலை கடத்தல் கும்பல் வளைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. நேற்று இரவு முழுவதும் நடந்த தீவிர வேட்டையில் கடத்தல் கும்பல் சிக்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் எத்தனை பேர் பிடிபட்டுள்ளனர் என்பது தெரியவில்லை. ஆனால் குறைந்தது 2 பேர் சிக்கியிருப்பதாக தெரிகிறது.

அவர்களிடம் இருந்து ஒரு பகுதி பணத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளதாக தெரிகிறது. முழுப் பண்தையும் பறிமுதல் செய்ய போலீஸார் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இன்று பிற்பகல் செய்தியாளர்களைச் சந்திக்கிறார் கமிஷனர் ராஜேந்திரன். அப்போது கடத்தல் நாடகம், மீட்பு நடவடிக்கை, கைது நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைளையும் விரிவாக தெரிவிக்கவுள்ளார்.

கை வரை நெருங்கியும் பிடிக்காதது ஏன்?

முன்னதாக நேற்று செய்தியாளர்களுக்கு கமிஷனர் ராஜேந்திரன் அளித்த பேட்டி.

கேள்வி: கடத்தல்காரர்கள் யார்? எத்தனை பேர் வந்தனர்?

பதில்: சிறுவனை கடத்தியபோது 2 கடத்தல்காரர்கள் இருந்துள்ளனர். அவர்கள் யார் என்று இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. கடத்தல்காரர்களோடு சிறுவனின் தந்தை தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். சிறுவனையும் கடத்தல்காரர்கள் அவனது தந்தையோடு பேச வைத்தனர். அதை வைத்து சிறுவன் நலமாக இருக்கிறான் என்பதை நாங்கள் தெரிந்துகொண்டோம்.

கேள்வி: சிறுவனை மீட்பதற்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கடத்தல்காரர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதே?

பதில்: இதுபற்றி விரிவாக சொல்ல முடியாது. கடத்தல்காரர்களுக்கு குறைந்தபட்ச தொகை கொடுக்கப்பட்டது.

கேள்வி: பணத்தை கடத்தல்காரர்களிடம் கொடுத்தது யார்? அவர்கள் எப்படி சிறுவனை விட்டு சென்றனர்?

பதில்: அதுபற்றி எல்லாம் வெளிப்படையாக சொல்ல முடியாது. இன்னும் ஒருவாரம் காலஅவகாசம் கொடுங்கள். தப்பி ஓடிய கடத்தல்காரர்களை பிடித்த பிறகு முழு விவரங்களையும் சொல்லுகிறேன்.

சிறுவன் தானாக வந்தான் என்று சொல்லமுடியாது. சிறுவன் கடத்தப்பட்டவுடன் சென்னை நகர் முழுவதையும் `சீல்’ வைத்துவிட்டோம். கடத்தல்காரர்கள் சென்னையை விட்டு எங்கும் தப்பி செல்ல முடியாத அளவுக்கு சுற்றி வளைத்துவிட்டோம். செல்போன் உரையாடல் மூலம் கடத்தல்காரர்கள் எந்த இடத்தில் பதுங்கி இருந்தார்கள் என்பதையும் கண்டுபிடித்துவிட்டோம்.

அவர்கள் ஒரு வீட்டில் இருந்தார்கள். உதாரணமாக சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்காரர்கள் பதுங்கியிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். சிந்தாதிரிப்பேட்டை பெரிய பகுதி. கடத்தல்காரர்கள் அங்கு எங்கு பதுக்கியிருக்கிறார்கள் என்பதை அதிரடி நடவடிக்கை மூலம் தேடுதல் வேட்டை நடத்தித்தான் கண்டுபிடிக்க முடியும். அவ்வாறு அதிரடி நடவடிக்கை எடுத்தால் சிறுவனுக்கு ஆபத்தாக முடியலாம். அதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேள்வி: சிறுவனை கடத்தி செல்வோம் என்று அவனது தந்தை ரமேஷுக்கு 3 மாதத்துக்கு முன்பே மிரட்டல் வந்ததாகவும், அதுதொடர்பாக அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டும், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளதே?

பதில்: 3 மாதத்துக்கு முன்பே மிரட்டல் வந்தது உண்மைதான். அப்போது சிறுவனின் தந்தை வாய்மொழியாக அண்ணாநகர் துணை கமிஷனரிடம் புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக அண்ணாநகர் துணை கமிஷனரும் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

கடத்தல்காரர்கள் செல்போன் மூலம் மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். துணை கமிஷனர் அப்போது அதுபற்றி விசாரித்தபோது கடத்தல்காரர்கள் பயன்படுத்திய செல்போனின் `சிம்’ கார்டு போலியான முகவரியில் வாங்கப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது. அத்தோடு அப்போது விசாரணை முடிக்கப்பட்டுள்ளது.

கேள்வி: பணம் கொடுத்து சிறுவன் மீட்கப்பட்டிருக்கிறான். பணம் கொடுத்தபோது கடத்தல்காரர்களை போலீசார் ஏன் பிடிக்கவில்லை?

பதில்:- இன்னும் ஒருவாரம் பொறுத்துக்கொள்ளுங்கள். விசாரணை முடிந்தவுடன் எல்லா விவரங்களையும் சொல்லுகிறேன் என்றார் கமிஷனர்.

கடத்தல்காரர்கள் பிடிபடும்போது என்கவுன்டர் நடக்குமா என்ற கேள்விக்கு அதுகுறித்தெல்லாம் கருத்துக் கூற விரும்பவில்லை என்றார் ஆணையர்.

மேலும், கடத்தல்காரர்கள் தமிழில் பேசியதாகவும் என்றும் அவர் தெரிவித்தார். பேட்டியின்போது சிறுவனை பத்திரிக்கையாளர்களிடம் போலீஸ் தரப்பில் காட்டினார்கள். சிறுவனுடன் பத்திரிக்கையாளர்கள் பேச முயன்றனர். ஆனால் அவன் பயந்த நிலையில் இருப்பதாக கூறி பேச அனுமதி மறுக்கப்பட்டு விட்டது.

முன்பே நடவடிக்கை எடுத்திருந்தால்…

கீர்த்திவாசனின் தந்தை ரமேஷ் தற்போது மிகப் பெரிய கோடீஸ்வரர். ஆனால் ஆரம்ப காலத்தில் அவர் மிகவும் சிரமமான நிலையில்தான் இருந்துள்ளார். அப்போது ஒரு நெருங்கிய உறவினர்தான் ரமேஷுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து தொழிலில் பெரிய நிலைக்கு வர உதவியுள்ளார்.

அந்த உறவினர் தற்போது நொடித்துப் போயுள்ளார். இதையடுத்து தான் வளர்த்து விட்ட ரமேஷை அணுகி தனக்கு உதவுமாறு கேட்டுள்ளார். ஆனால் அதை மறுத்து விட்டாராம் ரமேஷ். தூக்கி விட்ட தன்னையே தூக்கி எறிந்து விட்டாரே ரமேஷ் என்று ஆத்திரமடைந்துள்ளார் அந்த உறவினர்.

இதையடுத்து மூன்று மாதங்களுக்கு முன்பு அவர் ரமேஷுக்குப் போன் செய்து எனக்கு 4 கோடி ரூபாய் பணம் கொடு. இல்லாவிட்டால் உனது மகனை கடத்திச் சென்று விடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது. அதற்கு ரமேஷ், முடிந்தால் செய்து பார் என்று சவால் விட்டுப் பேசியுள்ளாராம். அத்தோடு நில்லாமல் தனது வீட்டுப் பாதுகாப்பை அதிகரித்துள்ளார். அண்ணாநகர் துணை ஆணையரிடம் நேரில் சென்று புகாரும் கொடுத்துள்ளார்.

இங்குதான் குழப்பமாகியுள்ளது. அண்ணா நகர் துணை ஆணையர் மேலோட்டமான விசாரணை நடத்தியுள்ளதாக தெரிகிறது. மிரட்டல் வந்த செல்போன் எண் குறித்து விசாரித்துள்ளனர். அது போலியான முகவரியைக் கொடுத்து வாங்கப்பட்ட சிம் கார்டு என்று தெரிய வந்தவுடன் அப்படியே விட்டு விட்டனராம். மேற்கொண்டு விசாரணை நடத்தவில்லை என்று தெரிகிறது. ரமேஷும் அதை மறந்து விட்டார்.

ஆனால் மிரட்டிய நபர் தான் சொன்னபடி திட்டம் போட்டு கீர்த்திவாசனைக் கடத்தி நினைத்தபடி பணத்தையும் பறித்து விட்டார்.

அண்ணா நகர் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தியிருந்தால், நிச்சயம் அந்தக் குற்றவாளி பிடிபட்டிருக்கலாம். கீர்த்திவாசன் கடத்தல் நடந்திருக்காது. போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இந்த டென்ஷன் இல்லாமல் போயிருக்கும்.

பிடிக்காதது ஏன்?

சிறுவனின் உயிர் குறித்து மட்டுமே போலீஸார் கவலைப்பட்டுள்ளனர். எனவேதான் நேற்று கடத்தல்காரர்கள் சிறுவனை கொண்டு வந்து விட்டபோது அவர்கள் ரிஸ்க் எடுக்கவோ, அதிரடியாக நடவடிக்கை எடுக்கவோ இல்லை என்று கூறப்படுகிறது.

அண்ணா நகர் எச் பிளாக்கில் பணத்துடன் வருமாறு கடத்தல்காரர்கள் கூறியிருந்தனர். அதன்படி ரமேஷ் தரப்பில் அங்கு காரில் பணத்துடன் சென்று காத்திருந்தனர்.

அப்போது கடத்தல்காரர்கள் காரில் வரும்போது வளைத்துப் பிடிப்பதற்காக கூடுதல் கமிஷனர் ஷகில் அக்தர், இணை கமிஷனர் தாமரை கண்ணன் ஆகியோர் தலைமையில் 10 கமோண்டா வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் எதிர்பார்க்காத வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த கடத்தல்காரர்கள் ரமேஷிடம் இருந்த பண சூட்கேஸை வாங்கி எண்ணிப் பார்த்து விட்டு கிளம்பிப் போய் விட்டனர்.

சற்று நேரத்தில் மாருதி ஸ்விப்ட் காரில் சிறுவனை டிக்கியில் அமர வைத்து ஒரு நபர் வந்தார். அந்த நபர் சிறுவனை காரோடு விட்டு விட்டு அப்படியே இறங்கி ஓடி விட்டார். அவரையும் போலீஸார் பிடிக்க முயற்சிக்கவில்லை என்று தெரிகிறது.

டிஎன்.48 எல்-6460 என்ற அந்த மாருதிக் கார் யாருடையது, எண் உண்மையானதுதானா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

இந்த காரை ஓட்டி வந்த டிரைவர், அதே பகுதியைச் சேர்ந்த லோகன் காரின் டிரைவரோடு பேசியது தெரிய வந்ததைத் தொடர்ந்து அந்த டிரைவரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த விசாரணையில்தான் பலமுக்கியத் தகவல்கள் போலீஸாருக்குக் கிடைத்தது. இதையடுத்து கடத்தல்காரர்கள் கீர்த்திவாசனுடன் வந்த கார் யாருடையது என்ற விவரம் தெரிந்து தற்போது கடத்தல்காரர்கள் பிடிபட்டுள்ளனர்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago