எந்திரன் கதை என்னுடையது என்று இரு எழுத்தாளர்கள் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். ஒருவர் ஆருர் தமிழ்நாடன். மற்றவர் ஆர்னிகா நாசர்.
தமிழ்சினிமாவில் கதை திருட்டு என்பது பல காலமாகவே நடந்து வருகிற விஷயம்தான். இது என் கதை என்று வெளியே சொல்வதற்கே அவமானப்படுகிற அளவுக்கு அதை எடுத்து வைத்திருப்பார்கள் என்பதால் பலர் இந்த விஷயத்தை கண்டு கொள்வதில்லை. ஆனால் எந்திரன் கதை விஷயத்தில் அதற்கு சாத்தியமில்லை. ஏனென்றால் அயல்நாட்டவரையும் தன் பக்கம் திரும்ப வைத்த படமல்லவா இது?
முதலில் இந்த கதை உருவாகிட காரணமாக இருந்தவர் எழுத்தாளர் சுஜாதா. அவரது மறைவுக்கு பின் கிட்டதட்ட எந்திரன் ரோபோ மாதிரியே ‘டிஸ்மாண்டில்’ ஆகியிருந்தார் ஷங்கரும். அந்த நேரத்தில் எதை தின்றால் பித்தம் தெளியும் என்று இவர்களின் கதையில் ‘கை’ வைத்தாரா? அல்லது ஒத்த சிந்தனையா? என்பதுதான் புரியவில்லை.
முதலில் புகார் கொடுத்த ஆரூர் தமிழ்நாடனிடம் பேசினோம்-
நீங்கள் சொல்வது மாதிரி இது ‘ஒத்த சிந்தனை’ என்று கருத முடியாது என்றார் அவர். 1996 -ல் நான் எழுதிய சிறுகதைக்கு அப்படியே ஒன் லைன் உருவாக்கி திரைக்கதை எழுதிய மாதிரிதான் இருக்கிறது இந்த படம். ஒத்த சிந்தனை என்றால் அப்படி வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஆர்னிகா நாசர் கூறியிருக்கிற குற்றச்சாட்டு வேறு. நான் கூறியிருப்பது வேறு. அவருடைய நாவலில் இருக்கிற காட்சிகளை அப்படியே பதிவு செய்திருப்பதாக கூறுகிறார் அவர். என் சிறுகதையை அப்படியே எடுத்திருக்கிறார்கள் என்கிறேன் நான். இது தொடர்பாக ஷங்கரின் மேல் கிரிமினல் வழக்கு தொடர்ந்திருக்கிறேன் என்றார் அவர்.
நீதிமன்றத்தில் வழக்கு, போலீஸ் கமிஷனரிடம் புகார் என்று இந்த எழுத்தாளர்கள் இருவரும் பெரும் முனைப்புடன் இருந்தாலும், இதுவரை ஷங்கர் தரப்பிலிருந்து யாரும் இவர்களை தொடர்பு கொள்ளவில்லை என்பது கூடுதல் செய்தி
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே